முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » சுள்ளுனு அடிக்கிற வெயிலுக்கு ஜில்லுனு இருக்க 5 சர்பத் ரெசிபீஸ்..!

சுள்ளுனு அடிக்கிற வெயிலுக்கு ஜில்லுனு இருக்க 5 சர்பத் ரெசிபீஸ்..!

ஷர்பத்தின் சிறந்த அம்சம் என்னவென்றால், நீங்கள் அதை எண்ணற்ற வழிகளில் தயார் செய்து பரிமாறலாம்.இது ஒரு இனிமையான சுவை கொண்டதாக்க இருப்பதால் எல்லோரும் விரும்பி பருகுவார்கள்.

  • 17

    சுள்ளுனு அடிக்கிற வெயிலுக்கு ஜில்லுனு இருக்க 5 சர்பத் ரெசிபீஸ்..!

    கோடைக்காலம் வந்தாலே எல்லோரும் நினைக்க கூடிய ஒரே விஷயம் குளிர்ச்சி தான். இதற்கு நம் உடல் வெப்பநிலையைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிக அவசியம். வெப்பநிலை உயரத் தொடங்கும் போது, அதிகப்படியான வியர்வை காரணமாக நீரிழப்பு, சோர்வு போன்றவற்றை நாம் உணரக்கூடும். தற்போது கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பித்து கொள்ள குளிர்ச்சியான உணவுகள் மற்றும் பானங்களை நாடுவோம். உடல் வெப்பநிலையை குறைக்கும் சிறந்த பானங்களில் ஒன்று சர்பத்.

    MORE
    GALLERIES

  • 27

    சுள்ளுனு அடிக்கிற வெயிலுக்கு ஜில்லுனு இருக்க 5 சர்பத் ரெசிபீஸ்..!

    பழங்கள் அல்லது பூ இதழ்களின் சாற்றை சர்க்கரை மற்றும் தண்ணீருடன் சேர்த்து இந்த பாரம்பரிய இந்திய பானம் தயாரிக்கப்படுகிறது. இது ஒரு இனிமையான சுவை கொண்டதாக்க இருப்பதால் எல்லோரும் விரும்பி பருகுவார்கள். ஷர்பத்தின் சிறந்த அம்சம் என்னவென்றால், நீங்கள் அதை எண்ணற்ற வழிகளில் தயார் செய்து பரிமாறலாம். எனவே, நீங்கள் கோடை காலத்தில் ஷர்பத் குடிப்பதை விரும்புபவராக இருந்தால், இந்த கோடையில் நீங்கள் வீட்டிலேயே தயார் செய்ய கூடிய 5 புத்துணர்ச்சியூட்டும் சர்பத் ரெசிபிகளை பற்றி இனி பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 37

    சுள்ளுனு அடிக்கிற வெயிலுக்கு ஜில்லுனு இருக்க 5 சர்பத் ரெசிபீஸ்..!

    1. புதினா சர்பத் : இந்த சர்பத்தை தயார் செய்ய, உங்களுக்கு தேவையானது கொஞ்சம் வெல்லம், புதினா இலைகள், தண்ணீர் மட்டுமே. இந்த சர்பத்தில் புதினா இலைகளின் புத்துணர்ச்சியூட்டும் சுவையானது வெல்லத்தின் இனிப்புடன் இணைந்து, மிக அருமையான சுவையை தரும். இந்த சுவையான புதினா ஷர்பத் உங்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு, ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

    MORE
    GALLERIES

  • 47

    சுள்ளுனு அடிக்கிற வெயிலுக்கு ஜில்லுனு இருக்க 5 சர்பத் ரெசிபீஸ்..!

    2. குஸ் கா சர்பத் : இந்த கோடை காலத்தில் நீங்கள் கண்டிப்பாக முயற்சிக்க வேண்டிய மற்றொரு புத்துணர்ச்சியூட்டும் சர்பத் இந்த குஸ் கா சர்பத் ஆகும். இதைத் தயாரிக்க, நீங்கள் ஒரு பாட்டிலில் கசகசாவை சேர்த்து, தண்ணீர், குஸ் எசன்ஸ் மற்றும் சர்க்கரையுடன் கலக்க வேண்டும். இது ஒரு சுவையான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் கோடைகால பானமாக அமைகிறது. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பருகுவார்கள்.

    MORE
    GALLERIES

  • 57

    சுள்ளுனு அடிக்கிற வெயிலுக்கு ஜில்லுனு இருக்க 5 சர்பத் ரெசிபீஸ்..!

    3. பாதாம் கா சர்பத் : வட இந்தியாவில் இந்த பாதாம் சர்பத் மிகவும் பிரபலமானது. இந்த பாதாம் கா ஷர்பத் மிகவும் புத்துணர்ச்சி தரக்கூடிய பானமாகும். பாதாம், ஏலக்காய் மற்றும் சிறிது எசன்ஸ் ஆகியவற்றை சேர்த்து கொண்டு இந்த நறுமண சுவைகளுடன் கூடிய சர்பத்தை தயார் செய்யலாம். இது சுவையான மற்றும் ஆரோக்கியமான சர்பத் என்பதால் வெயில் காலத்தில் சிறந்த தேர்வாக இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 67

    சுள்ளுனு அடிக்கிற வெயிலுக்கு ஜில்லுனு இருக்க 5 சர்பத் ரெசிபீஸ்..!

    4. சந்தன் கா சர்பத் : நீங்கள் தனித்துவமான சர்பத்தை முயற்சிக்க விரும்பினால், இந்த சந்தன் கா சர்பத் கண்டிப்பாக முயற்சி செய்யலாம். இதை தயாரிக்க, சர்க்கரை கலந்த பாலில் சந்தனப் பொடி கலந்து, கோடை காலத்திற்கான சூப்பர் புத்துணர்ச்சியூட்டும் பானத்தை உருவாக்கலாம். மேலும், உங்கள் தேவைக்கேற்ப சர்க்கரை மற்றும் எஸ்சென்ஸ்களை நீங்கள் இதில் சேர்த்து கொள்ளலாம்.

    MORE
    GALLERIES

  • 77

    சுள்ளுனு அடிக்கிற வெயிலுக்கு ஜில்லுனு இருக்க 5 சர்பத் ரெசிபீஸ்..!

    5. ரோஸ் சர்பத் : ரோஸ் சர்பத் நீண்ட காலமாக இந்திய குடும்பங்களில் பிரதானமாக இருந்து வருகிறது. இந்த ரோஜா சர்பத் அடிப்படை பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இது உடலில் குளிர்ச்சியான விளைவை தருகிறது. இந்த குளிர்ச்சியான பானத்தை கோடை காலங்களில் பருகி மகிழுங்கள். பொதுவாக ரோஸ் சர்பத் என்றால் குழந்தைகள் பெரும்பாலும் விரும்பி பருகுவது வழக்கம்.

    MORE
    GALLERIES