முகப்பு » புகைப்பட செய்தி » தினசரி அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புதமான பலன்களை தெரிந்துக்கொள்ளுங்கள்..!

தினசரி அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புதமான பலன்களை தெரிந்துக்கொள்ளுங்கள்..!

இவை மல்பெர்ரி குடும்ப வகையைச் சேர்ந்தவை என்று உங்களுக்கு தெரியுமா? அது மட்டுமல்ல, எண்ணற்ற விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை அத்திப்பழம் கொண்டிருக்கிறது.

 • 18

  தினசரி அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புதமான பலன்களை தெரிந்துக்கொள்ளுங்கள்..!

  சிவந்த நிறத்தில் இருக்கக் கூடிய அத்திப்பழத்தை நேரடியாகவும் சாப்பிடலாம், உலர் பழமாகவும் சாப்பிடலாம். இனிப்புச் சுவை கொண்ட அத்திப்பழம் உடனடியாக கரைந்து விடால், மென்று சுவைத்து சாப்பிடும் வகையில் இருக்கும். நாம் புதிதாக வாங்கும் அத்திப்பழங்களைக் காட்டிலும் உலர வைக்கப்பட்ட அத்திப்பழங்கள் நீண்ட காலத்திற்கு இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 28

  தினசரி அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புதமான பலன்களை தெரிந்துக்கொள்ளுங்கள்..!

  ஒரு மணி போன்ற வடிவத்தில் அத்திப்பழங்கள் இருக்கும். இவை மல்பெர்ரி குடும்ப வகையைச் சேர்ந்தவை என்று உங்களுக்கு தெரியுமா? அது மட்டுமல்ல, எண்ணற்ற விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை அத்திப்பழம் கொண்டிருக்கிறது.

  MORE
  GALLERIES

 • 38

  தினசரி அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புதமான பலன்களை தெரிந்துக்கொள்ளுங்கள்..!

  இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர் லோவ்நீத் பாத்ரா கூறுகையில், “சுவையான மற்றும் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் போல அத்திப்பழங்களை எடுத்துக் கொள்ளலாம். இது உங்கள் ஒட்டுமொத்த உடலுக்கும் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும். இந்தப் பழம் அனைத்து சீசன்களிலும் கடைகளில் கிடைக்கும்’’ என்று தெரிவித்தார். மேலும், அத்திப்பழத்தில் உள்ள சத்துக்கள் குறித்து லோவ்நீத் பாத்ரா விவரித்தார்.

  MORE
  GALLERIES

 • 48

  தினசரி அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புதமான பலன்களை தெரிந்துக்கொள்ளுங்கள்..!

  நார்ச்சத்து : நம் உடல் ஆரோக்கியத்திற்கு நார்ச்சத்து மிகுந்த உணவுகள் மிக அவசியமாகும். அது அத்திப்பழத்தில் தேவையான அளவுக்கு இருக்கிறது. அத்திப்பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் நம் செரிமானக் கட்டமைப்பை இலகுவானதாக மாற்றுகிறது மற்றும் மலம் பெருக்கியாக செயல்படுகிறது. இதனால் நீடித்த மலச்சிக்கல் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். நம் குடல் நலனை மேம்படுத்தக் கூடிய நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் அத்திப்பழத்தில் உள்ளன.

  MORE
  GALLERIES

 • 58

  தினசரி அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புதமான பலன்களை தெரிந்துக்கொள்ளுங்கள்..!

  ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ் அளவு குறையும் : நம் உடலில் ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ் மற்றும் ரத்த சர்க்கரை அளவை அத்திப்பழங்கள் குறைக்கும். அத்திப்பழத்தில் உள்ள அப்சிசிக் அமிலம், மாலிக் அமிலம், குளோரோஜெனிக் அமிலம் ஆகியவை நம் ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகின்றன. ஆக, நீரிழிவு நோயாளிகள் தவறாமல் தினசரி அத்திப்பழம் எடுத்துக் கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 68

  தினசரி அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புதமான பலன்களை தெரிந்துக்கொள்ளுங்கள்..!

  ஊட்டச்சத்து : அத்திப்பழங்களில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. அவை நம் எலும்பு உருவாக்கத்திலும், எலும்பு சீரமைப்பிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பற்கள் பலம் அடையவும் கால்சியம் சத்து அவசியமானது. கால்சியம் கொண்ட முட்டை மற்றும் பால் பொருட்களை தவிர்ப்பவர்கள் அத்திப்பழம் எடுத்துக் கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 78

  தினசரி அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புதமான பலன்களை தெரிந்துக்கொள்ளுங்கள்..!

  தாதுக்கள் : ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக் கூடிய பொட்டாசியம் சத்து அத்திப்பழங்களில் உள்ளது. உடலில் சோடியம் சத்து மிகுதியாகுவதால் உண்டாகும் எதிர்மறை விளைவுகளை இந்த பொட்டாசியம் சத்து கட்டுப்படுத்துகிறது. நம் தசைகள், நரம்புகள் ஆகியவற்றை செயல்பாடுகளை ஊக்குவித்து, எலெக்ட்ரோலைட் சத்துக்களை தக்க வைக்கிறது.

  MORE
  GALLERIES

 • 88

  தினசரி அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புதமான பலன்களை தெரிந்துக்கொள்ளுங்கள்..!

  ஊட்டச்சத்துக்கள் : விட்டமின் சி, இ மற்றும் ஏ ஆகிய சத்துக்கள் அத்திப்பழத்தில் உள்ளன. சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது மற்றும் செல்களை மீட்டுருவாக்கம் செய்கிறது. அத்திப்பழம் சாப்பிட்டால் வயது முதிர்வு அறிகுறிகளை கட்டுப்படுத்தலாம்.

  MORE
  GALLERIES