இன்றைய கால கட்டத்தில், நாம் அனைவரும் கால்களில் சர்க்கரம் கட்டிக் கொண்டு இருப்பது போல, ஓடிக்கொண்டே இருக்கிறோம். அதுவும் இளைஞர்கள் கேட்கவே வேண்டாம், வேலை, கல்வி மற்றும் சமூக வாழ்க்கை என்று இவற்றிற்கு இடையே சிக்கிக் கொண்டு பம்பரம் போல சுழன்றுக் கொண்டு இருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலை நிலவுவதால், தற்போது அவர்கள் மத்தியில் ரெடி-டு ஈட் உணவு வகைகள் பிரபலமடைந்து வருகிறது.
இது போன்ற உணவுகள் எளிதில் கிடைப்பதால், இது அவர்களின் நேரத்தைச் சேமிக்க உதவுகிறது. அதோடு இது அவர்களுக்கு சௌகரியமாக இருக்கிறது என்றும் சொல்லலாம். காலையில் சமைக்கவில்லை என்றால், அல்லது சமைப்பதற்கு தாமதம் ஆனால், ரெடி-டு-ஈட் (RTE) உணவுகளை வாங்கி, வேலைக்கு செல்லும் வழியில் கூட, இவற்றை எளிதில் சாப்பிட்டு விடலாம்.
சௌகரியம் : திட்டமிட்டு ஒரு அட்டவணையின் படி பிஸியாக ஓடிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு ரெடி-டு-ஈட் உணவுகள் சௌகரியமான விருப்பமாக அமைகிறது. இது ஒரு விரைவான, சிரமமற்ற ஆப்ஷனாக அமைகிறது. அதுவும், சமைக்கத் தெரியாத அல்லது சமைத்து பெரிதும் அனுபவம் இல்லாதவர்களுக்கு இது ஏற்றதாக உள்ளது. ஜீரா சாதம், சோலே மசாலா, பிந்தி மசாலா போன்ற பல ரெடி-டு-ஈட் உணவுகள் உள்ளன. இதனை நொடியில் செய்து வேலைக்குப் போகும் வழியில் கூட சௌகரியமாக சாப்பிட்டு விடலாம். எனவே, இதில் உள்ள சௌகரியம் தான் இளைஞர்களை அதன் பக்கம் இழுத்து விடுகிறது.
எண்ணற்ற வகைகள் : இது சௌகரியத்தை மட்டும் அல்ல பல வகைகளையும் வழங்குகிறது. இளைஞர்களை கவரும் வகையிலான சுவைகளில் வருகின்றன. அதிக பணம் அல்லது நேரத்தை செலவிடாமல், புதிய சுவை மற்றும் உணவு வகைகளை அனுபவிக்க இது வழிவகை செய்கிறது. மாறிக் கொண்டே இருக்கும் அவர்களின் தேர்வு மற்றும் விருப்பத்திற்கு ரெடி-டு-ஈட் உணவு வகைகள் பொருத்தமாக உள்ளது.
மிகக் குறைந்த வேஸ்டேஜ் : RTE உணவுகள் குறிப்பிட்ட அளவுகளிலான பேக்கேஜிங்கில் வருகின்றன. எனவே, இதனால் உணவு கழிவுகள் குறைந்து, இது சுற்றுச்சூழலுக்கு உகந்த விருப்பமாக மாறுகிறது. இது போன்ற உணவுகள் சுற்றுச்சூழலில் தங்கள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விழிப்புடன் இருக்கும் இளைஞர்களுக்கு நிலையான மற்றும் எக்கோ-ஃபிரெண்ட்லி ஆப்ஷனாக அமைகிறது. இன்றைய உலகில் வளர்ந்து வரும் பிரச்சனையான உணவு கழிவுகளை இது பெரிதும் குறைத்து விடுகிறது.
கட்டுப்படி ஆகும் விலை : ஹோட்டலில் சாப்பிடுவதற்கு அல்லது அடிக்கடி உணவு டெலிவரி ஆப் மூலம் ஆர்டர் செய்வதற்கு போதிய பட்ஜெட் இல்லாத இளைஞர்களுக்கு இது போன்ற உணவுகள் தங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற விருப்பமாக அமைகிறது. பலவிதமான வகைகள், விலைகள் மற்றும் பேக் அளவுகள் என RTE உணவுகள் இளைஞர்கள் தங்கள் அன்றாட உணவுக்கான செலவுகளை சுவை அல்லது ஊட்டச்சத்தில் சமரசம் செய்து கொள்ளாமல் நிர்வகித்துக் கொள்ள உதவுகிறது. இளைஞர்கள் பொதுவாக குறைந்த வருமானம் அல்லது நிதிக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்கின்றனர். அதனால் தங்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் கிடைக்கும் RTE உணவுகள் அவர்களுக்கு ஏற்றதாக அமைகிறது. அதோடு, அவை நேரம், முயற்சி மற்றும் வளங்களை மிச்சப்படுத்துகின்றன.
பயணத்திற்கு ஏற்றது : RTE உணவுகள் உங்கள் பயணத்திற்கு ஏற்றவை. பேக்கேஜிங் கச்சிதமாக இருப்பதால், நீங்கள் வேலைக்கு செல்லும் வழியில் கூட இது பிற உணவுகளை எளிதில் சாப்பிடலாம். எடுத்துச் செல்வதும் சிரமம் அற்றதாக இருக்கும். அதிக பயணம் மேற்கொள்ளும் இளைஞர்களுக்கு இது ஒரு சிறந்த ஆப்ஷன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.