தொற்று காரணமாக வீட்டிலிருந்தே பலர் அலுவலக வேலைகளை கவனித்து வருவதால் அமர்ந்தே இருக்கும் வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் மற்றும் மன அழுத்தம் ஆகியவை எண்ணற்ற மக்களின் ஆரோக்கிய நிலையை படிப்படியாக பாதித்து உள்ளன. எனவே மக்கள் ஆரோக்கியமாக இருக்க பல மாற்று வழிகளை கண்டுபிடிக்கும் மற்றும் பின்பற்றும் முயற்சிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றனர். ஆரோக்கியமான விஷயங்களுக்கு மாறும்போது, பலர் மனதில் தோன்றும் முதல் விஷயம் சமையல் எண்ணெய். ஏனெனில் அது நிறைவுற்ற கொழுப்புகளால் (saturated fats) நிறைந்துள்ளது. இதனிடையே நீங்கள் வெர்ஜின் தேங்காய் எண்ணெய்க்கு (virgin coconut oil) மாற வேண்டியதற்கான சில காரணங்களை இங்கே பார்க்கலாம்..
இங்கே வெர்ஜின் என்ற சொல் பொதுவாக பதப்படுத்தப்படாதது என்று பொருள்படும். வெர்ஜின் தேங்காய் எண்ணெய் பொதுவாக ப்ளீச் செய்யப்படுவதில்லை, வாசனை நீக்கப்படுவதில்லை அல்லது சுத்திகரிக்கப்படுவதில்லை என்பதை குறிக்கும். வெர்ஜின்ஆயில் பொதுவாக ஃபிரெஷ்ஷான தேங்காய்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ஆனால் உற்பத்தியின் தரத்தை நிர்ணயிப்பதில் ப்ராசஸிங் டெக்னிக்ஸ் இன்னும் மாறுபடும்.
தேங்காய் எண்ணெய்க்கு மாற வேண்டிய அவசியம் என்ன ? ரீபைண்ட் ஆயிலுடன் ஒப்பிடுகையில் கோல்ட் ப்ரஸ்டு (Cold-pressed) ஆயில்கள் அவற்றின் பிரித்தெடுக்கும் செயல்முறை மற்றும் வெப்ப நன்மைகள் காரணமாக சிறந்த மாற்றாகும். ஆண்டிஆக்ஸிடன்ட் உள்ளடக்கம், சுவை மற்றும் ஊட்டச்சத்து மதிப்பு ஆகியவை பாதுகாக்கப்படுவதை தயாரிப்பு முறை உறுதி செய்வதால் Cold-pressed ஆயில் பிரபலமடைந்து வருகிறது.
ஆரோக்கியமான எண்ணெய் என்பது Cold-pressed வெர்ஜின் தேங்காய் எண்ணெய் ஆகும், இது ஆற்றலைப் பெருக்கி HDL (நல்ல) கொழுப்பை மேம்படுத்தும். MCTகள் (நடுத்தர சங்கிலி ட்ரைகிளிசரைடுகள்) தேங்காய் எண்ணெயில் ஏராளமாக உள்ளன, இது எடை மேலாண்மைக்கு உதவுகிறது. தேங்காய்களின் இயற்கை நன்மை, முக்கிய ஊட்டச்சத்துக்கள், செழுமையான நறுமணம் மற்றும் சுவை ஆகியவற்றை பாதுகாக்க மற்றும் தக்கவைக்க Cold-pressed டெக்னலாஜி உதவுகிறது.
ஒட்டுமொத்த ஃபிட்னஸ்: தேங்காய் எண்ணெயில் ஒரு வகையான நிறைவுற்ற கொழுப்பான மீடியம்-செயின் ட்ரைகிளிசரைடுகள் (MCTs), ஏராளமாக உள்ளன. இந்த MCT-க்கள் உங்கள் உடலால் எரிக்கப்படும் கலோரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வல்லது. இதன் விளைவாக வெயிட் லாஸ் முயற்சியில் இருக்கும் மக்கள் தங்கள் உடல் எடையை கணிசமாக இழக்கலாம்.
இயற்கையான எனர்ஜி பூஸ்டர்: மார்க்கெட்டில் பல எனர்ஜி டிரிங்க்ஸ் இருந்தாலும் இயற்கையான கோல்ட் ப்ரஸ்டு தேங்காய் எண்ணெயை வழங்குவதை விட சிறந்த நன்மைகளை எதனாலும் வழங்க முடியாது. கோல்ட் ப்ரஸ்டு தேங்காய் எண்ணெயில் காணப்படும் MCT-க்கள் நேரடியாக நமது கல்லீரலுக்கு மாற்றப்பட்டு, கார்போஹைட்ரேட்டுகளாக செயல்படுகின்றன. பொதுவாக MCT-க்கள் விளையாட்டு ஊட்டச்சத்து உணவுகளை (sports nutrition diets) உருவாக்க பரவலாக பயன்படுத்தப்படுகின்றன மற்றும் உலகெங்கிலும் உள்ள பல விளையாட்டு வீரர்கள் உட்கொண்டு வருகின்றனர்.
ஆண்டிமைக்ரோபியல் (Antimicrobial) குணங்கள்: தேங்காய் எண்ணெயில் காணப்படும் ஒரு கொழுப்பு அமிலம் லாரிக் ஆசிட். இது MCTக்களில் கிட்டத்தட்ட பாதியை நன்மைகளை கொண்டுள்ளது. நோயை உண்டாக்கும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இதில் உள்ளன. எனவே, லாரிக் ஆசிட் பாக்டீரியாவை திறம்பட அழிக்கக்கூடிய ஒரு சிறந்த பாக்டீரிசைடு முகவராக இருக்கிறது. இதன் காரணமாக கோல்ட் ப்ரஸ்டு தேங்காய் எண்ணெய் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது.
தோல் பராமரிப்பு: கோல்ட் ப்ரஸ்டு தேங்காய் எண்ணெய் அடோபிக் டெர்மடிடிஸ் போன்ற தோல் நோய்களை குணப்படுத்த உதவுகிறது. பல செயற்கை பொருட்கள் அடங்கிய எந்த மாய்ஸ்சரைசரை விடவும் கோல்ட் ப்ரஸ்டு தேங்காய் எண்ணெய் சருமத்தை அதிகச் செயல்திறனுடன் பாதுகாக்கும். வெடிப்பு மற்றும் வறண்ட சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைக்கும் திறனை மேம்படுத்துகிறது.