நெஞ்செரிச்சல், உமட்டல், எதுக்களித்தல் போன்றவற்றை நம்மில் அதிகமாக உபயோகிக்கும் வார்த்தைகளில் ஒன்று. இதோடு பலருக்கு இப்பிரச்சனை ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. வயிற்றில் உருவாகும் அமிலமானது உணவுக்குழாய் வழியாக வெளியே வரும் போது நம்முடைய தொண்டை மற்றும் நெஞ்சு பகுதிகளில் ஒரு வித எரிச்சல் உண்டாகும்.
இது அஜீரணம் மற்றும் அமிலத்தன்மையால் ஏற்படுகிறது என்கிறது மருத்துவர்கள்.மேலும் சில நேரங்களில் அதிகப்படியாக நாம் சாப்பிடும் உணவு மற்றும் அதிக காரமுள்ள உணவுகளை நாம் உள்கொள்ளும் போது பெரும்பாலோனருக்கு நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. இதனால் பலர் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மருந்து மாத்திரைகளை சாப்பிடுவார்கள். நிச்சயம் மாத்திரைகளால் நிரந்தர தீர்வு காண முடியாது.
குளிர்ச்சியான பால்: பொதுவாக நாம் நெஞ்சரிச்சலில் அவதிப்படும் போது அதிகளவு தண்ணீர் அருந்த வேண்டும் என்று நினைப்போம். அதுவும் குளிர்ச்சியான தண்ணீராக இருந்தால் வயிற்றுக்கும், நெஞ்சத்திற்கும் இதமாக இருக்கும். இதுப்போன்று தான் குளிர்ச்சியான பாலை பருகினாலும் நெஞ்சரிச்சலை உடனடியாக குணப்படுத்த முடியும். ஆம் இதில் அதிகளவு கால்சியம் இருப்பதன் காரணமாக அமிலத்தை அதிகளவில் உறிஞ்சுகிறது. தேவையில்லாத அமிலம் சுரப்பதற்கும் தடையாக உள்ளது. எனவே நீங்கள் குளிர்ச்சியான பாலை பருகுவதன் மூலம் அசௌகரியம் மற்றும் வலியை உடனடியாக குறைக்கிறது என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
பழுத்த வாழைப்பழம் : வாழைப்பழம் பல நோய்களுக்கு சிறந்த தீர்வாக இருக்கும். குறிப்பாக பழுத்த வாழைப்பழம் நெஞ்சரிச்சலுக்கு அரிய மருந்தாக உள்ளது. இந்த பழம் இயற்கையில் காரத்தன்மை கொண்டுள்ளதால் நெஞ்சரிச்சலைக் குறைக்க உதவியாக உள்ளது. இதுகுறித்து அகாடமி ஆஃப் நியூட்ரிஷன் மற்றும் டயட்டிக்ஸ் தெரிவித்த தகவலின் படி, பழுத்த வாழைப்பழத்தை உட்கொள்ளும் போது செரிமான அமிலத்துடன் செயல்பட்டு உணவுக்குழாயில் ஏற்படும் நெஞ்சரிச்சலைக் குறைக்கிறது.
துளசி: ஆயுர்வேத மூலிகைகளில் சிறந்தது துளசி என்றே கூறலாம். நீங்கள் துளசியை டீயாகவோ அல்லது அப்படியே சாப்பிடும் போது வாயு பிரச்சனைக்குத் தீர்வாக உள்ளது. மேலும் இதில் அமில ரிஃப்ளக்ஸ் மற்றும் அசௌகரியத்தைக் குணப்படுத்தும் மருத்துவக்குணங்களும் இதில் உள்ளது. இதை நீங்கள் தினமும் உள்கொள்ளும் போது வயிற்றின் அமில அளவை குறைக்கிறது.
இஞ்சி: குமட்டல் மற்றும் வாந்தி போன்ற உணர்வைத் தடுக்க இஞ்சி உதவியாக உள்ளது. இதில் உள்ள எதிர்ப்பு பண்புகள்அமிலத்தன்மையால் ஏற்படும் வீக்கம், வலி, அசௌகரியம் ஆகியவற்றைக் குறைக்க உதவுகிறது. இருப்பினும், தினமும் 3-4 கிராமுக்கு மேல் இஞ்சியை உட்கொள்ளக்கூடாது . இது உங்களது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.