வார இறுதி நாட்கள் கொண்டாட்டங்களுக்கு மட்டுமல்லாமல் வீட்டில் உள்ளவர்களுக்கு பிடித்த நொறுக்குத்தீனி மற்றும் ஸ்னாக்ஸ் வகைகளை செ?
Web Desk | March 26, 2021, 5:11 PM IST
1/ 9
வாரத்தின் 5 அல்லது 6 நாட்களில் வேலை வேலை என்று ஓடிக் கொண்டே இருக்கும் பெரும்பாலானோர் வேலை நாட்களில் சரியாக சாப்பிட கூட நேரமின்றி இருக்கிறார்கள். வீட்டில் பிடித்த ஸ்னாக்ஸ்களை செய்து சாப்பிட கூட நேரம் இல்லாததால், கடையில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் சிப்ஸ்கள் உள்ளிட்ட நொறுக்குதீனிகளை வாங்கி தின்று திருப்திப்பட்டு கொள்கிறார்கள்.
2/ 9
வார இறுதி நாட்கள் கொண்டாட்டங்களுக்கு மட்டுமல்லாமல் வீட்டில் உள்ளவர்களுக்கு பிடித்த நொறுக்குத்தீனி மற்றும் ஸ்னாக்ஸ் வகைகளை செய்து தரவும் ஒரு அருமையான நாட்களாக அமைகிறது. நல்ல உணவு இல்லாமல் எதையும் கற்பனை செய்வது சாத்தியமில்லை, எனவே நீங்களும் நன்றாக சாப்பிட, வீட்டு உறுப்பினர்களுக்கும் பிடித்ததை செய்வதன் மூலம், எப்போதும் வழக்கமான ஸ்னாக்ஸ்களை செய்து சாப்பிட்டு கொண்டிருக்கும் நீங்கள் வேறு வகையான ஸ்னாக்ஸ்களை செய்ய டிப்ஸ்களை இங்கே தருகிறோம். ஏனென்றால் சுவையான உணவு எப்போதும் இனிப்பான அனுபவத்தை தருகிறது.
3/ 9
உருளைக்கிழங்கு டோர்னாடோ(Potato Tornado): விரைவாகவும் எளிதாகவும் செய்ய கூடிய இந்த பொட்டாடோ டொர்னாடோவை வீட்டிலேயே கார்லிக் மயோ ரெசிபியாக (GARLIC MAYO RECIPE) மாற்றுவது எப்படி என்பதை பார்க்கலாம். இதற்கு உங்களுக்கு 4 மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு தேவை. கிழங்கை நன்றாக கழுவி விட்டு தோலை உரித்து எடுத்து கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கை சென்டராக பிரிக்காமல் கவனமாக நறுக்கி, அவற்றை நன்றாக ட்விஸ்ட் செய்யவும்.
4/ 9
இதற்கிடையே பூண்டு, உப்பு, மிளகாய் செதில்களாக, மிளகு, உருகிய வெண்ணெய், சோளப்பொடி மற்றும் சீரகத்தூள் கலந்து சாஸ் தயாரிக்கவும். இந்த கலவையை உருளைக்கிழங்கு மீது தடவி , பின் கிழங்கை ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு நன்றாக வறுக்க வேண்டும். பின் ஒரு டிஷ்யு பேப்பரில் அவற்றை வெளியே எடுத்து பரிமாறும் தட்டுக்கு மாற்றி பின் சாஸை மீண்டும் அதன் மேல் ஊற்றலாம்.
5/ 9
ஏசியன் கிளேஸ்ட் பொட்டேட்டோ : நீங்கள் கிரிஸ்பியான உருளைக்கிழங்கிற்கு தீவிர ரசிகர் என்றால், இந்த ஏசியன் கிளேஸ்ட் பொட்டேட்டோ ரெசிப்பி உங்களுக்கு ஏற்றது. தேவையான அளவு உருளைக்கிழங்கை எடுத்து நன்கு கழுவி அவற்றை சமமாக கொதிக்க வைக்கவும். இதற்கு தேவையான சாஸை தயார் செய்ய கிண்ணத்தில் சிறிது தண்ணீர், சோயா சாஸ் மற்றும் தேன் சேர்த்து கொள்ளவும்.
6/ 9
பின் வறுக்க பயன்படும் பத்திரத்தி சூடாக்கி, அதில் எண்ணெய், துண்டுகளாக்கப்பட்ட பூண்டு ஆகியவற்றை உருளைக்கிழங்குடன் சேர்த்து வறுக்கவும்.உருளைக்கிழங்கு கிரிஸ்பி ஆகி விட்டால் அதனுடன் தயார் செய்த சாஸை சேர்க்கவும். பின் உப்பு, மசாலா மற்றும் தேவையானவற்றை சேர்த்து கலக்கி உருளைக்கிழங்கை தட்டுக்கு மாற்றி, அதன் மேல் எள் தெளித்து சாப்பிடுங்கள்.
7/ 9
பனீர் ராப் (Paneer Wrap) இந்த ரெசிபியை செய்ய முதலில் நீங்கள் ஒரு கடாயை எடுத்து அதில் சிறிது எண்ணெய் விட்டு காய வைக்க வேண்டும். பின் பச்சை மிளகாய், காலிஃப்ளவர் சேர்த்து வதக்கவும். காலிஃப்ளவர் வெந்தவுடன் பனீர், உப்பு, கொத்தமல்லி உள்ளிட்டவற்றை சேர்த்து கிளறி இறக்கி, பின் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட கோதுமை மாவு ரொட்டி அல்லது சப்பாத்திகளில் இந்த பனீர் ராப்பை வைத்து சுருட்டி சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
8/ 9
மஷ்ரூம் ஸ்டஃப்டு முட்டை: இது நீங்கள் எப்போது வேண்டுமானாலும் செய்ய கூடிய எளிதான ரெசிபி. புரதங்கள், காய்கறிகள் மற்றும் மூலிகைகள் கலந்திருக்கும் இதை தயாரிக்க 5 நிமிடங்கள் போதும். வேகவைத்த முட்டை எடுத்து பாதியாக நறுக்கி, மஞ்சள் கருவை எடுத்து அதனுடன் உப்பு மற்றும் மிளகு பொடி சேர்க்கவும். இதற்கிடையே ஒரு வாணலி எடுத்து அதில் சிறிது எண்ணெய் சேர்த்து வெங்காயம், வெந்தய இலைகள்,கொத்தமல்லி தழைகளை சேர்த்து மஷ்ரூம்களை சமமாக வேக வைக்கவும். இந்த காளான் கலவையோடு முட்டையின் மஞ்சள் கருவை சேர்க்கவும்.இதை ஒரு கரண்டியால் எடுத்து முட்டையின் வெள்ளை கரு பகுதியில் வைத்து சூடாக பரிமாறலாம்.
9/ 9
சுவை அதிகரிக்க சில மசாலா மற்றும் வெந்தய இலைகள் மற்றும் கொத்தமல்லி போன்றவற்றயும் சேர்த்து கொள்ளலாம். இதையெல்லாம் ஒரு நல்ல கலவையாக எடுத்து, ஒரு கரண்டியால் முட்டையின் வெள்ளை நிறத்தில் திணித்து சூடாக பரிமாறலாம்.