ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » வீட்டிலேயே சுவையான குல்ஃபி செய்து ருசிக்க ஆசையா..? உங்களுக்கான 5 ரெசிபிக்கள் இதோ!

வீட்டிலேயே சுவையான குல்ஃபி செய்து ருசிக்க ஆசையா..? உங்களுக்கான 5 ரெசிபிக்கள் இதோ!

நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படும் வெயில் காரணமாக மக்கள் தங்கள் தாகத்தை தணிக்க பல்வேறு பானங்களை குடித்து நீரிழப்பிலிருந்து தற்காத்து கொண்டு வருகின்றனர்.பலரும் ஐஸ்கிரீம், குல்ஃபி போன்ற கூலிங்கான பொருட்களை வாங்கி ருசிக்கின்றனர்.

 • 16

  வீட்டிலேயே சுவையான குல்ஃபி செய்து ருசிக்க ஆசையா..? உங்களுக்கான 5 ரெசிபிக்கள் இதோ!

  அக்னி நட்சத்திரம் இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில் பல இடங்களில் காலை 7 மணிக்கே வெயில் வெளுத்து வாங்குகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படும் வெயில் காரணமாக மக்கள் தங்கள் தாகத்தை தணிக்க பல்வேறு பானங்களை குடித்து நீரிழப்பிலிருந்து தற்காத்து கொண்டு வருகின்றனர்.பலரும் ஐஸ்கிரீம், குல்ஃபி போன்ற கூலிங்கான பொருட்களை வாங்கி ருசிக்கின்றனர். தற்போது நாம் வீட்டிலேயே செய்யக்கூடிய சில சுவையான குல்ஃபி ரெசிபிகளை பார்க்க இருக்கிறோம்...

  MORE
  GALLERIES

 • 26

  வீட்டிலேயே சுவையான குல்ஃபி செய்து ருசிக்க ஆசையா..? உங்களுக்கான 5 ரெசிபிக்கள் இதோ!

  தர்பூசணி குல்ஃபி: இந்த குல்ஃபியை தயாரிக்க, தலா 2 கப் தர்பூசணி, கிர்ணிபழம் மற்றும் வெள்ளரி க்யூப்ஸ்களை எடுத்து தனித்தனியாக கூழாக்கி பின் தனித்தனி கிண்ணங்களில் வைக்கவும். இப்போது, ஒரு பெரிய கிண்ணத்தை எடுத்து, பிளண்டர் மூலம் நன்கு கூழாக்கப்பட்ட மேற்கண்ட மூன்றுடனும், 1/2 டீஸ்பூன் சாட் மசாலா, 1/2 டீஸ்பூன் உப்பு, 1 டீஸ்பூன் சுகர்-ஃப்ரீ பவுடர் (சுக்ரோலோஸைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுவது) மற்றும் 1 டீஸ்பூன் லெமன் ஜூஸ் ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும். அனைத்து பொருட்களையும் நன்கு கலந்து குல்ஃபி மோல்டுகளில் ஊற்றவும். நன்கு செட் ஆகும் வரை ஃப்ரீஸரில் வைக்கவும். குல்ஃபி செட் ஆனதும் ஃப்ரீசரில் இருந்து மோல்டுகுளை எடுத்து, குல்ஃபிகளை பரிமாறும் கிண்ணங்கள் அல்லது பிளேட்டுகளுக்கு மாற்றி ப்ரெஷ் கிரீமுடன் உடனடியாக பரிமாறவும்.

  MORE
  GALLERIES

 • 36

  வீட்டிலேயே சுவையான குல்ஃபி செய்து ருசிக்க ஆசையா..? உங்களுக்கான 5 ரெசிபிக்கள் இதோ!

  தேங்காய் குல்ஃபி: இந்த க்ரீமி மற்றும் ருசியான குல்ஃபியை செய்ய, தேவையான பொருட்கள் மற்றும் அவற்றின் அளவை முதலில் பார்த்து விடலாம். தேங்காய் பால் பவுடர் - 2 கப், பால் பவுடர் - 2 கப். சர்க்கரை - 1 கப், லிச்சி - 20 பீஸ்கள், தேங்காய் - 2 கப், ஃபுல் கிரீம் பால் - 2 லிட்டர். முதலில் லிச்சியில் இருந்து விதைகளை அகற்றி கொள்ளுங்கள். அடுத்து, ஒரு பெரிய பாத்திரத்தை மிதமான சூட்டில் வைத்து எடுத்து வைத்திருக்கும் பால் பவுடர், தேங்காய், தேங்காய் பால் பவுடர், 2 லிட்டர் பால் ஆகியவற்றை சேர்த்து இந்த கலவையை ஒரு கொதி நிலைக்கு கொண்டு வாருங்கள். பின் அனைத்து பொருட்களையும் நன்கு கிளறி, லிச்சியை சேர்க்கவும். மீண்டும் ஒருமுறை கலந்து கொதிக்க வைக்கவும். பின் இந்த கலவையை ஒரு பெரிய கிண்ணத்திற்கு மாற்றி குளிர்விக்கவும். நன்கு ஆறியதும், கலவையை மோல்டுகளில் ஊற்றி,குல்ஃபி செட் ஆகும் வரை ஃப்ரீசரில் வைக்கவும். பாதி செட் ஆனதும் மரக் குச்சியை நடுவே சொருகி விடுங்கள்.

  MORE
  GALLERIES

 • 46

  வீட்டிலேயே சுவையான குல்ஃபி செய்து ருசிக்க ஆசையா..? உங்களுக்கான 5 ரெசிபிக்கள் இதோ!


  பாதாம் மலாய் குல்ஃபி: முதலில் ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் வைத்து, அதில் 1 கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும். பின் அதில் ஒரு கைப்பிடி அளவு பாதாம் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விடவும். தண்ணீரை வடிகட்டி, பாதாம் பருப்பை குளிர்ந்த நீரில் கழுவவும். பாதாம்களை தோலுரித்து விட்டு நன்றாக விழுதாக அரைக்கவும். மற்றொரு கடாயை மிதமான சூட்டில் வைத்து 1 கைப்பிடி பிஸ்தாவை சேர்த்து 2-3 நிமிடங்கள் வறுக்கவும். பிஸ்தாவை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளுங்கள். இப்போது ஒரு பெரிய கிண்ணத்தில் பாதாம் விழுது, 1 கப் கன்டென்ஸ்டு பால் மற்றும் 1/4 கப் ஃப்ரெஷ் கிரீம் சேர்க்கவும். அனைத்தையும் வேகமாக ஒன்றாக கலக்கி பின் அதில் 1/2 கப் ஃபுல் கிரீம் பால் சேர்க்கவும். இறுதியாக வறுத்த மற்றும் லேசாக நறுக்கப்பட்ட பிஸ்தாவைச் சேர்த்து, மீண்டும் ஒரு முறை கலக்கி சாஃப்ட் கிரீம் தயாரிக்கவும். பின் குல்ஃபி மோல்டுகளில் ஊற்றி, செட் ஆகும் வரை ஃப்ரீசரில் வைக்கவும்.

  MORE
  GALLERIES

 • 56

  வீட்டிலேயே சுவையான குல்ஃபி செய்து ருசிக்க ஆசையா..? உங்களுக்கான 5 ரெசிபிக்கள் இதோ!

  வெல்லம் பாதாம் முந்திரி குல்ஃபி: ஒரு கைப்பிடி பாதாம் மற்றும் முந்திரியை எடுத்து, அவற்றை 3 டேபிள்ஸ்பூன் ஹெவி கிரீம் சேர்த்து நன்றாக பேஸ்ட்டாக்கி கொள்ளவும். அடுத்து, ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் வைத்து அரை லிட்டர் பாலை கொதிக்க வைக்கவும். கொதித்ததும் அதனுடன் ட்ரை ஃப்ரூட் பேஸ்ட்டை சேர்த்து நன்கு கலந்து 10 நிமிடம் வேக வைக்கவும். அதில் 1/2 கப் வெல்லம் சேர்த்து 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறவும். அடுப்பிலிருந்து இறக்கி சிறிது நேரம் ஆறவிட்டு, குல்ஃபி மோல்டுகளில் ஊற்றவும். முழுமையாக செட்டாகும் வரை ஃப்ரீசரில் வைக்கவும்.

  MORE
  GALLERIES

 • 66

  வீட்டிலேயே சுவையான குல்ஃபி செய்து ருசிக்க ஆசையா..? உங்களுக்கான 5 ரெசிபிக்கள் இதோ!


  கிர்ணி மற்றும் வெள்ளரி குல்ஃபி: வெள்ளரிகளை நன்கு கழுவி தோலை அகற்றி விட்டு க்யூப்ஸாக வெட்டி ஒரு பிளெண்டர் ஜாரில் சேர்க்கவும். நகு கூழாக்கி விட்டு ஒரு கிண்ணத்திற்கு வெள்ளரி கூழை மாற்றவும். இப்போது கிர்ணிபழத்தை துண்டுகளாக வெட்டி பிளெண்டர் கொண்டு கூழாக்கி வெள்ளரி கூழுடன் இதை கலக்கவும். பின் இதில் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1/4 டீஸ்பூன்சாட் மசாலா, 2 டீஸ்பூன் சர்க்கரை மற்றும் 4 டீஸ்பூன் கிரீம் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும். முடிந்ததும், இதை குல்ஃபி மோல்டுகளாக மாற்றி குல்ஃபி கெட்டியாகும் வரை ஃப்ரீசரில் வைக்கவும்.

  MORE
  GALLERIES