இரும்புச்சத்து குறைபாடு கொண்ட ஒருவர் அதிக சோர்வு, பலவீனம் உள்ளிட்ட பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். சரியான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் ரத்த சோகை போன்ற கடும் உடல்நல பிரச்சினைகள் ஏற்படலாம். இதுபோன்ற தீவிர நிலைகளை தடுக்க இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை டயட்டில் அதிகம் சேர்க்க நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
இரும்புச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள் என்ன?அதீத சோர்வு மற்றும் பலவீனம், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, கை மற்றும் கால்கள் குளிர்ச்சியாவது, தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி, எளிதில் உடையக்கூடிய நகங்கள் உள்ளிட்ட பல அறிகுறிகள் இரும்புச்சத்து குறைபாடு இருப்பதை வெளிப்படுத்துகின்றன. இரும்பு சத்து என்றாலே நம் நினைவிற்கு வரும் முதல் விஷயம் பாலக்கீரை தான். ஆனால் பலருக்கும் இந்த கீரையின் சுவை பிடிக்காது. இந்த கீரையை தவிர இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் சில உள்ளன. பாலக்கீரையை தவிர உங்கள் டயட்டில் நீங்கள் சேர்த்துக் கொள்ள கூடிய இரும்புச்சத்து மிக்க ஐந்து உணவுகளின் பட்டியல் இங்கே:
பருப்பு வகைகள்: நம்முடைய உணவில் சேர்த்து கொள்ளும் பொதுவான ஒன்றாக இருக்கிறது பருப்பு. இதில் போதுமான அளவு இரும்புச்சத்து இருக்கிறது. USDA வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 1 கப் வேக வைத்த பருப்பில் சுமார் 6.6 மில்லிகிராம் இரும்புச்சத்து இருக்கிறது. எனவே உங்கள் டயட்டில் பருப்பை சேர்ப்பது உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க உதவுகிறது.
ட்ரை ஆப்ரிகாட்ஸ் : ஆப்ரிகாட் பழங்கள் தமிழில் பாதாமி பழம் என்று குறிப்பிடப்படுகிறது. Dried Apricots எனப்படும் உலர் ஆப்ரிகாட்ஸ் பழங்களில் இரும்புச்சத்து அதிகம் காணப்படுகிறது. உலர் பாதாமி பழங்களில் குறைந்த அளவு தண்ணீர் உள்ளது. USDA தரவுகளின்படி, 100-கிராம் உலர் பாதாமி பழங்களில் சுமார் 2.7மிகி இரும்புச்சத்து உள்ளது.
அமரந்த்: அமரந்த் (Amaranth) என்பது க்ளூட்டன்-ஃப்ரீ தானியமாகும். இதில் இரும்பு சத்து உட்பட அத்தியாவசிய வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ்கள் நிறைந்துள்ளன. மேலும் இது தாவர அடிப்படையிலான உணவில் சிறந்த இரும்புசத்து கொண்ட பொருளாக கருதப்படுகிறது. USDA தரவுகளின்படி, 100 கிராம் அமரந்த் தானியத்தில் சுமார் 7.6 மிகி இரும்புசத்து உள்ளது. கோதுமை மாவுக்கு மாற்றாக மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் அமரந்த்தை டயட்டில் எளிதாக சேர்க்கலாம்.
முந்திரி பருப்பு: முந்திரி பருப்புகள் ஆரோக்கிய கொழுப்புகளின் சிறந்த ஆதாரமாக இருப்பதோடு நமக்கு கணிசமான அளவு இரும்புச்சத்தையும் அளிக்கிறது. 100 கிராம் முந்திரி பருப்பில் சுமார் 6.6 மில்லிகிராம் இரும்புச்சத்து உளளதாக கூறப்படுகிறது. எனவே உங்களுக்குப் பசிகக்கும் போதெல்லாம், ஆரோக்கியமற்ற ஸ்னாக்ஸ்களை சாப்பிடுவதற்கு பதில் முந்திரி பருப்பை சாப்பிடுவது உங்கள் உடலில் இரும்புசத்தை அதிகரிக்க உதவும் எளிய வழியாகும்.