வால்நட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் : உடலுக்கு நன்மைகள் அளிக்கும் வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் வால்நட்ஸ்களில் நிரம்பியுள்ளன. உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் இதில் நிறைந்துள்ளன. உடலுக்கு ஆற்றலை அளித்து மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ் இதில் உள்ளன. உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இது உதவுகிறது. இதில் இருக்கும் சர்க்கரையின் அளவு குறைவு என்பதால் எடை குறைப்பு டயட்டிற்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் சிறந்தது.நீங்கள் அடிக்கடி வால்நட்ஸ் சாப்பிடுபவர் என்றால் இந்த ஆரோக்கியமான நட்ஸை உங்கள் டயட்டில் சேர்ப்பதற்கான 5 வழிகளை இங்கே பார்க்கலாம்.
பனானா வால்நட் ஸ்மூத்தி : வாழைப்பழம் மற்றும் வால்நட்ஸை கொண்டு ஸ்மூத்தியை சுலபமாக செய்யலாம். இந்த ஆரோக்கியமான ஸ்மூத்தியில் வாழைப்பழம், வால்நட்ஸ் மற்றும் தேன் ஆகியவற்றை சேர்க்கலாம். இந்த சுவையான ஸ்மூத்தியை செய்ய 1 கிளாஸ் பால், ஊறவைத்த வால்நட்ஸ் 1/2 கப், 1 வாழைப்பழம் மற்றும் இரண்டு ஸ்பூன் தேன் ஆகியவற்றை ஒரு பிளெண்டரில் சேர்த்து பிளெண்ட் செய்ய வேண்டும்.
வால்நட் ஓட்மீல் பவுல் : உங்கள் காலை உணவை ஆரோக்கியமான வால்நட் ஓட்மீல் உடன் துவக்கலாம். ஓட்ஸில் ஜிங்க், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளன. அதேநேரம் வால்நட்ஸ்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்ஸ் மற்றும் பல சத்துக்கள் நிரம்பியுள்ளன. பால் மற்றும் ஓட்ஸை ஒரு பாத்திரத்தில் எடுத்து அடுப்பில் வைத்து பத்து நிமிடங்களுக்கு வேக வைக்கவும். பின் இதில் ஒரு கைப்பிடி அளவு தூளாக்கிய வால்நட்ஸ்களை சேர்த்து அதன் மேல் சிறிது தேனை ஊற்றி சுவைக்கவும்.
வால்நட் கெபாப் : Kebab-கள் மிகவும் சுவையானவை, யாரும் வேண்டாம் என சொல்ல மாட்டார்கள். கூடுதலாக இதில் வால்நட்ஸ்களை சேர்க்கும் போது கெபாப் சுவை மேலும் கூடுகிறது. பொதுவாக நீங்கள் கெபாப் செய்யும் முறையில், காய்கறிகள், கடலை மாவு, வால்நட்ஸ் மற்றும் மசாலாக்களை சேர்க்கலாம். இந்த Walnut Kebab மிகவும் சுவையான ஆரோக்கியமான தின்பண்டமாகும்.
வால்நட் அல்வா: பொதுவாக அல்வா அனைருக்கும் பிடித்தமான ஸ்வீட்டாகும். இருப்பினும் வால்நட் அல்வா வழக்கமாக செய்யும் அல்வா போன்றது அல்ல. பொதுவாக அல்வா செய்யும் போது, சுவைக்காகவும், மொறுமொறுவென்று இருக்கவும், வெள்ளரி விதைகள் சேர்க்கப்படும். அதே போல, வாசனை மற்றும் ரிச்சான சுவைக்கு முந்திரி, பாதாம் போன்றவை செர்க்கபப்டும். அதே போல, வால்நட்டையும் பொடித்து அல்லது சிறு சிறு துண்டுகளாக்கி சேர்க்கலாம். சுவையோடு, ஆரோக்கியமும் நிறைந்திருக்கும்.