முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » சுட்டெரிக்கும் வெயில்... தப்பிக்க உங்க வீட்டு கிட்சனிலேயே இருக்கும் இந்த மூலிகைகளை மிஸ் பண்ணிடாதீங்க..!

சுட்டெரிக்கும் வெயில்... தப்பிக்க உங்க வீட்டு கிட்சனிலேயே இருக்கும் இந்த மூலிகைகளை மிஸ் பண்ணிடாதீங்க..!

பலருக்கு எப்படி உணவில் சேர்க்கப்படும் மசாலாப் பொருள்களால் உடல் சூட்டை குறைக்க முடியும் என்ற கேள்வி நிச்சயம் எழலாம். இது பற்றி விளக்கம் அளித்த ஊட்டச்சத்து நிபுணர்,

  • 18

    சுட்டெரிக்கும் வெயில்... தப்பிக்க உங்க வீட்டு கிட்சனிலேயே இருக்கும் இந்த மூலிகைகளை மிஸ் பண்ணிடாதீங்க..!

    கோடைக்காலம் வந்தாலே வெளியில் செல்வதற்கு நிச்சயம் வெறுப்பாக இருக்கும். அதுவும் அக்னி நட்சத்திரம் என்றால் சொல்லவே தேவையில்லை. வெயிலின் கொடுமை நம்மை பாடாய்படுத்தும். தற்போது அக்னி நட்சத்திரம் வெயிலில் நம்மை சுட்டெரித்து வரும் வேளையில் உங்களது உடலை குளிர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க ஒரு சில உணவுப் பொருட்களை, கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பாத்ரா.

    MORE
    GALLERIES

  • 28

    சுட்டெரிக்கும் வெயில்... தப்பிக்க உங்க வீட்டு கிட்சனிலேயே இருக்கும் இந்த மூலிகைகளை மிஸ் பண்ணிடாதீங்க..!

    பலருக்கு எப்படி உணவில் சேர்க்கப்படும் மசாலாப் பொருள்களால் உடல் சூட்டை குறைக்க முடியும் என்ற கேள்வி நிச்சயம் எழலாம். இது பற்றி விளக்கம் அளித்த ஊட்டச்சத்து நிபுணர், 'ஐஸ்கிரீம் மற்றும் பழச்சாறுகள் ஆகியவை தற்காலிகமாக தான் நன்மையளிக்கும். எனவே, தற்காலிக தீர்விற்கு மாற்றாக சீரகம், புதினா, கொத்தமல்லி போன்ற உணவில் சுவையும், மணமும் கூட்டும் மசாலா பொருள்கள், இந்த கோடைக்காலத்தில் உடலில் அஜீரணம் உள்பட வயிறு தொடர்பான பல பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கிராது' என்று தெரிவிக்கிறார்… இதோ எப்படி என இங்கே விரிவாகத் தெரிந்துக் கொள்வோம்.

    MORE
    GALLERIES

  • 38

    சுட்டெரிக்கும் வெயில்... தப்பிக்க உங்க வீட்டு கிட்சனிலேயே இருக்கும் இந்த மூலிகைகளை மிஸ் பண்ணிடாதீங்க..!

    சீரகம்: சீரகத்தில் ஃபைபர், இரும்பு, தாமிரம், கால்சியம், பொட்டாசியம், மாங்கனீசு, துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது வெப்பநிலை மற்றும் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும் தெர்மோஜெனிக் பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே அதிக வெப்பத்தால் உங்களுக்கு தலைச்சுற்றல் ஏற்படுவதைத் தடுப்பதோடு, உடல் வெப்பத்தைத் தணிக்கவும் உதவியாக உள்ளது. சீரகத்தை நாம் தண்ணீரில் சேர்த்து சாப்பிடும் போது, உமிழ்நீர் சுரப்பிகளால் தூண்டப்பட்டு, செரிமான அமைப்பை சீராக்க உதவியாக உள்ளது.

    MORE
    GALLERIES

  • 48

    சுட்டெரிக்கும் வெயில்... தப்பிக்க உங்க வீட்டு கிட்சனிலேயே இருக்கும் இந்த மூலிகைகளை மிஸ் பண்ணிடாதீங்க..!

    சோம்பு (பெருஞ்சீரகம்): சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் மக்களைப் பாடாய்படுத்தி வரும் சூழலில், இதனால் ஏற்படும் உடல் சூட்டைக்குறைக்க உதவும் நறுமணப் பொருள்களில் ஒன்று பெருஞ்சீரகம். இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வீக்கம் மற்றும் அழற்சி போன்றவற்றைக் குறைக்க உதவியாக உள்ளது. குறிப்பாக உங்களது இந்த கோடைக்காலத்தில் அஜீரண கோளாறு மற்றும் வயிற்று வலி பிரச்சனைகள் ஏற்பட்டால் உங்களது கைகளில் சிறிதளவு பெருஞ்சீரகத்தை எடுத்து அப்படியே மென்று சாப்பிடுவது, இந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக அமையும்.

    MORE
    GALLERIES

  • 58

    சுட்டெரிக்கும் வெயில்... தப்பிக்க உங்க வீட்டு கிட்சனிலேயே இருக்கும் இந்த மூலிகைகளை மிஸ் பண்ணிடாதீங்க..!

    கொத்தமல்லி: கொத்தமல்லியில், பாஸ்பரஸ், கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, பி, சி மற்றும் கே என எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. கொத்தமல்லி அனைத்து பருவ நிலைகளிலும் கிடைக்கும் மற்றும் உங்களது உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும். கொத்தமல்லியை உணவுகளில் சேர்க்கும் போது, கோடையில் அதிக வியர்வையை வெளியேற்றச் செய்து, உடலின் உறுப்புகளிலும் வெப்பநிலையைக் குறைக்க உதவியாக உள்ளது. இதனால் உடல் குளிர்ச்சியாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 68

    சுட்டெரிக்கும் வெயில்... தப்பிக்க உங்க வீட்டு கிட்சனிலேயே இருக்கும் இந்த மூலிகைகளை மிஸ் பண்ணிடாதீங்க..!

    ஏலக்காய்: டீ முதல் பிரியாணி உள்பட அனைத்து உணவுகளும் சேர்க்கும் ஒருவகையாக மசாலாப் பொருள் தான் ஏலக்காய். இதில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உடலில் இருந்து தேவையற்ற இரசாயனங்கள் மற்றும் நச்சுகளை நீக்க உதவியாக உள்ளது. இது உடலில் வெப்பத்தைக் குறைத்து குளிரச்சியாக வைத்திருக்க உதவியாக உள்ளது.

    MORE
    GALLERIES

  • 78

    சுட்டெரிக்கும் வெயில்... தப்பிக்க உங்க வீட்டு கிட்சனிலேயே இருக்கும் இந்த மூலிகைகளை மிஸ் பண்ணிடாதீங்க..!

    புதினா: புதினாவில் இனிப்பு மற்றும் காரமான சுவைக் கொண்ட ஒரு நறுமண பொருளாகும். இதில் உள்ள மெந்தோல் உடலை எந்தவொரு பருவநிலைக்கு ஏற்றவாறு நிர்வகித்துக்கொள்ள உதவியாக உள்ளது. இதனால் கோடையிலும் நீங்கள் குளிர்ச்சியான உணவைப் பெற முடியும்.

    MORE
    GALLERIES

  • 88

    சுட்டெரிக்கும் வெயில்... தப்பிக்க உங்க வீட்டு கிட்சனிலேயே இருக்கும் இந்த மூலிகைகளை மிஸ் பண்ணிடாதீங்க..!

    எனவே ஊட்டச்சத்து நிபுணர் தெரிவித்துள்ள படி, நீங்கள் கோடைக்காலத்திற்கு ஏற்ற உணவுப்பொருள்களை எடுத்துக்கொண்டு உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்கு மறந்துவிடாதீர்கள்.

    MORE
    GALLERIES