பொதுவாகவே பருவநிலை மாற்றங்கள் உண்டாகும் போது பலரும் காய்ச்சல், ஜலதோஷம் போன்ற நோய் தொற்றுக்களால் பாதிக்கப்படுவார்கள். அதைத் தவிர தற்போது பரவி வரும் புதிய வைரஸினால் மக்கள் பலரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். H3N2 வைரஸினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் மிகவும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றில் இருந்து தப்பிக்க நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்வது அவசியமாகும்.
பொதுவாகவே நமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துக் கொள்ள பல்வேறு விதமான முறைகள் பின்பற்றப்படுகின்றன. நமது வாழ்க்கை முறையில் மாறுதல்கள் செய்வது முதல் நமது உணவு பழக்கத்தை மாற்றம் செய்வது வரை பல்வேறு விதமான முறைகளை நாம் கடைபிடிக்கலாம். இவை நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது மட்டுமல்லாமல் நமது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. ஆரோக்கியமான உணவு பழக்கம் என்பது நோயை குணமாக்காது ஆனால் அதற்கு பதிலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய் தொற்றுகளுடன் போராட உதவும். அந்த வகையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் சில உணவுப் பொருட்களைப் பற்றி போது பார்ப்போம்.
வைட்டமின் சி : நமது உடலின் தேவைப்படும் முக்கிய ஊட்டச்சத்துக்களுள் ஒன்றாக வைட்டமின் சி இருக்கின்றது. வைட்டமின் சி நிறைந்த உணவுப் பொருட்களை நாம் உட்கொள்ளும்போது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் காய்ச்சல் ஜலதோஷம் போன்ற நோய் தொற்றுகளில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கிறது. ஆரஞ்சு திராட்சை கிவி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளது.
பால், ஜூஸ், கிரீன் டீ : பாலில் அதிக அளவு கால்சியம் நிறைந்துள்ளது. கிரீன் டீயில் உள்ள ஆன்ட்டிஆக்சிடென்ட்ஸ் நமது உடலில் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் ஜூஸில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நமது உடலுக்கு தேவையான சத்துகளை வழங்குகிறது. மேலும் இவற்றின் மூலம் நமது உடலுக்கு தேவையான நீர்ச்சத்தும் கிடைக்கிறது.
பச்சை காய்கறிகள் : பச்சை இலை காய்கறிகள் நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. இவற்றில் அதிக அளவு வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே ஆகியவை அடங்கியுள்ளன. முக்கியமாக ப்ரோக்கோலியில் கால்சியம் மற்றும் ஃபைபர் ஆகியவை அதிகம் நிறைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.