செய்முறை : அடுப்பில் இரும்பு கடாயை வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அது சூடானதும், கடுகை சேர்க்க வேண்டும். இதனுடன், நறுக்கி வைக்கப்பட்ட வெங்காயம் மற்றும் காய்கறிகளைச் சேர்த்து நன்கு வதக்கவும். இப்போது இதனுடன் கறிவேப்பிலை உப்பு, மற்றும் மஞ்சள்தூள் சேர்க்கவும். பின்னர் அதனுடன் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் வறுத்த ரவையை சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நன்கு கிளரிவிடவும். பின்னர் கொத்துமல்லி தழைகளை தூவி அடுப்பை அணைத்தால் சுவையான ரவை உப்மா தயார்.
செய்முறை : ஒரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு சேர்க்கவும். இதனுடன் காய்கறிகளைச் சேர்த்து நன்கு வதக்கவும். இப்போது உப்பு, மஞ்சள் சேர்த்து, அதை ஆற விடவும். இப்போது ஒரு பாத்திரத்தில் வதக்கிய கலவையை சேர்த்து, வறுத்த ரவையை இதில் சேர்க்கவும். பின்னர் தயிர், மற்றும் ஈனோ சால்ட் சேர்த்து மாவை நன்கு கலந்து கொள்ளவும். இப்போது இட்லி பாத்திரத்தின் அச்சில் மாவை ஊற்றி 15 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்தால் ரவை இட்லி ரெடி.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் எடுத்துவைத்திருந்த ரவை, அரிசி மாவு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்க்கவும். இப்போது இதனுடன் தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாது நன்கு கலக்கி, மாவை 15 நிமிடங்கள் அப்படியே விடவும். இப்போது ஒரு தவாவை நெய் தடவி அதில் ஒரு கரண்டி மாவை ஊற்றவும். இருபுறமும் சரியாக திருப்பி வேகவைத்து பரிமாறவும்.
செய்முறை: ரவையை வறுக்காமல் ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும். இதனுடன் தண்ணீர், உப்பு, சீரகம் சேர்த்து அதை 20-30 நிமிடங்கள் அப்படியே விடவும். இப்போது ஒரு தோசைக்கல்லில் ஒரு கரண்டி மாவை எடுத்து தோசை ஊற்றவும். இப்போது வெங்காயம், காய்கறிகளைச் தோசையில் தூவி, சிறிதளவு எண்ணெய் ஊற்றி தோசையை திருப்பி போட்டு எடுத்தால் ரவை ஊத்தப்பம் தயார்.
செய்முறை : முதலில் வறுத்த பாசி பருப்பை மென்மையாகும் வரை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், முந்திரி சேர்க்கவும். முந்திரி சரியாக வறுத்தவுடன் கறிவேப்பிலை, நறுக்கிய இஞ்சி மற்றும் கருப்பு மிளகு சேர்க்கவும். இவை மிதமாக வதங்கியவுடன் தண்ணீர், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன், ரவாவை சேர்த்து நன்கு வேகவிட்டு எடுத்தால் சுவையான ரவை பொங்கல் தயார்.