மாதவிலக்கு சீரற்ற முறையில் வருகிறதா? தசை பிடிப்புகள், அதிகப்படியான உதிரப் போக்கு மற்றும் மாதவிலக்கு தொடர்புடைய இதர பிரச்சனைகள் அதிகமாக இருக்கிறதா? பெண்களின் அன்றாட வாழ்வில் பல சிக்கல்களை, தடைகளை ஏற்படுத்தக் கூடியதாக மாதவிலக்கு காலம் இருக்கிறது. மாதவிலக்கு முறையற்ற வகையில் இருக்கும்போது மனக் கவலை அதிகரிக்கும். அதன் எதிரொலியாக மாத விலக்கு இன்னும் தாமதம் அடையக் கூடும்.
இஞ்சி டீ : வாடிக்கையாக இஞ்சி டீ அல்லது இஞ்சி சாறு அருந்தி வந்தால் மாதவிலக்கு தாமதம் தடுக்கப்படும். அத்துடன் தசை பிடிப்புகள் தவிர்க்கப்படும். பொதுவாக மாதவிலக்கு காலத்தில் உடலின் உள்ளுறுப்புகளின் வீக்கம் ஏற்படக் கூடும். அதை சரி செய்ய இது உதவிகரமாக இருக்கும். ஒரு கப் தண்ணீர் எடுத்து, அதில் நறுக்கிய சில இஞ்சி துண்டுகளை போட்டு கொதிக்க வைத்து, இறுதியாக அதை வடிகட்டி அருந்தலாம்.
ஆப்பிள் சைடர் வினிகர் : ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு டீ ஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து எடுத்துக் கொள்ளலாம். இது உடலில் காரத்தன்மையை அதிகரித்து மாதவிலக்கு நடைபெற தூண்டுதலாக அமையும். இது மட்டுமல்லாமல் ஹார்மோனல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் உதவிகரமாக இருக்கும். மாதவிலக்கு காலத்திற்கு ஒரு வாரம் முன்பாக இதை அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
சீரக டீ : மாதவிலக்கை தூண்டுவதற்கு வீட்டிலேயே கடைப்பிடிக்கப்படும் மிக எளிமையான முறை சீரக டீ அருந்துவது ஆகும். இது கர்ப்பப்பை தசை இறுக்கங்களை குறைத்து, முறையற்ற மாதவிலக்கு பிரச்சினையை சரி செய்யும். ஒரு டீ ஸ்பூன் சீரகத்தை இரவு நேரத்தில் தண்ணீரில் கொதிக்க வைத்து, சிறிது நேரம் சிம்மில் வைத்திருக்கவும். இரவு முழுவதும் இது ஊற வேண்டும். காலையில் வடிகட்டி வெறும் வயிற்றில் அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
அன்னாசிப்பழ ஜூஸ் : அன்னாசிப் பழத்தில் உள்ள புரோமெலின் என்ற என்ஜைம் பெண்களுக்கான மாதவிலக்கை தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது மட்டுமல்லாமல் உடலில் வெள்ளை அணு மற்றும் சிவப்பு அணு உற்பத்திக்கு இது உதவிகரமாக இருக்கும். ஆகவே, சீரற்ற உதிரப் போக்கு பிரச்சினை இருப்பவர்களுக்கு இது நல்ல தீர்வை கொடுக்கும்.