முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » குழந்தைகளின் காலை உணவை ஹெல்தியா மாத்தனுமா..? உங்களுக்கான ஒரு வார லிஸ்ட்..!

குழந்தைகளின் காலை உணவை ஹெல்தியா மாத்தனுமா..? உங்களுக்கான ஒரு வார லிஸ்ட்..!

கொஞ்சம் சுவையை அதிகரிக்க வேண்டும் என்றால் பழங்களுடன் சிறிதளவு தயிர் மற்றும் தேன் கலந்து சாலட்டாக அவர்களுக்குக் கொடுக்கலாம். இது குழந்தைகளின் நோயெதிர்ப்பு அமைப்புகளை மேம்படுத்தும்.

 • 16

  குழந்தைகளின் காலை உணவை ஹெல்தியா மாத்தனுமா..? உங்களுக்கான ஒரு வார லிஸ்ட்..!

  இன்றைக்கு உள்ள சூழலில் ஆரோக்கியமான உணவு தான் எதிர்காலத்தில் நாம் எவ்வித உடல் நல பிரச்சனையும் இன்றி வாழ்வதற்கு உறுதுணையாக உள்ளது. பெரியவர்கள் சில உணவுகள் பிடிக்காவிட்டாலும், உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு எப்படியாவது ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவார்கள். ஆனால் குழந்தைகளுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்று நினைத்தாலே பெற்றோர்களுக்கு ஒருவித அச்சம் தான் ஏற்படும். அந்தளவிற்கு குழந்தைகள் பெற்றோர்களைப் படாய்படுத்தி விடுகின்றனர். இதுப்போன்ற சிரமம் இல்லாமல் சுவையுடன் என்னென்ன ஆரோக்கியமான உணவைக் கொடுக்க வேண்டும்? என்பது குறித்து உடற்தகுதி மற்றும் ஊட்டச்சத்து நிபுணரான ரோஹித் ஷெலட்கர் என்ன தெரிவித்துள்ளார்.. என்பது குறித்து இங்கே அறிந்துக்கொள்வோம். குழந்தைகளுக்கான ஆரோக்கிய உணவு பட்டியல்கள்  இதோ..

  MORE
  GALLERIES

 • 26

  குழந்தைகளின் காலை உணவை ஹெல்தியா மாத்தனுமா..? உங்களுக்கான ஒரு வார லிஸ்ட்..!

  ஓட்ஸ் : ஆரோக்கியமான உணவோடு உங்களின் குழந்தைகளின் நாளைத் தொடங்க வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் ஓட்ஸ் உங்களுக்கு நல்ல தேர்வாக அமையும். நீங்கள் ஓட்ஸுடன் வாழைப்பழங்கள், செர்ரி, ஸ்ட்ராபெர்ரிகளைச் சேர்த்து கொடுக்கும் போது சத்துள்ள உணவாக இருக்கும். இது மட்டுமின்றி நீங்கள் ஓட்ஸ் இட்லி, ஓட்ஸ் தோசை மற்றும் உப்புமா செய்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்

  MORE
  GALLERIES

 • 36

  குழந்தைகளின் காலை உணவை ஹெல்தியா மாத்தனுமா..? உங்களுக்கான ஒரு வார லிஸ்ட்..!

  முட்டை : குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு முட்டைகள் ஒரு முக்கிய உணவாக இருக்கும். இதில் எலும்பின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் டி மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளது. மேலும் வைட்டமின்கள் ஏ,பி, சி, டி, இ போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் தினமும் குழந்தைகளுக்கு நீங்கள் கொடுக்கலாம். இதனால் குழந்தைகளின் எலும்புகள் வலுப்பெறுவதோடு, உடலுக்குத் தேவையான புரோட்டீன்கள் கிடைக்கும். எனவே நீங்கள் முட்டை துருவல், ஆம்லெட், முட்டை சாண்ட்விச்சுகள் என பல வழிகளில் நீங்கள் செய்து சாப்பிடலாம்.

  MORE
  GALLERIES

 • 46

  குழந்தைகளின் காலை உணவை ஹெல்தியா மாத்தனுமா..? உங்களுக்கான ஒரு வார லிஸ்ட்..!

  ஊட்டச்சத்துள்ள கீரைகள் : கீரையில் உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து, மக்னீசியம், மற்றும் பல்வேறு வைட்டமின்கள் உள்ளதால் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு இது உதவியாக உள்ளது. ஆனால் குழந்தைகளுக்கு கீரைகள் என்றாலே சாப்பிட மாட்டோம் என அடம்பிடிப்பார்கள்.எனவே அவர்களுக்குத் தெரியாத வகையில் கீரை தோசை, கீரை வடை போன்றவற்றை நீங்கள் செய்துக்கொடுக்கலாம்.

  MORE
  GALLERIES

 • 56

  குழந்தைகளின் காலை உணவை ஹெல்தியா மாத்தனுமா..? உங்களுக்கான ஒரு வார லிஸ்ட்..!

  பழங்கள் மற்றும் தயிர் : குழந்தைகளுக்கு வைட்டமின் குறைபாடு குறையும் போது பல்வேறு உடல் நல பிரச்சனைகள் ஏற்படும். எனவே உங்களது குழந்தைகளுக்கு வைட்டமின்கள் நிறைந்த பழங்களை நீங்கள் கொடுக்கலாம். குறிப்பாக வைட்டமின் சி, நார்ச்சத்துகள் நிறைந்த ஆரஞ்சு, பெர்ரி மற்றும் மாதுளை பழங்கள் மற்றும் காய்கறிகளை குழந்தைகளுக்கு நீங்கள் கொடுக்கலாம். கொஞ்சம் சுவையை அதிகரிக்க வேண்டும் என்றால் பழங்களுடன் சிறிதளவு தயிர் மற்றும் தேன் கலந்து சாலட்டாக அவர்களுக்குக் கொடுக்கலாம். இது குழந்தைகளின் நோயெதிர்ப்பு அமைப்புகளை மேம்படுத்தும்.

  MORE
  GALLERIES

 • 66

  குழந்தைகளின் காலை உணவை ஹெல்தியா மாத்தனுமா..? உங்களுக்கான ஒரு வார லிஸ்ட்..!

  உப்புமா : உப்புமா நீண்ட காலத்திற்கு வயிறு நிறைந்திருக்கும் மற்றும் வேலை செய்யும் பெண்களுக்கு, காலை உணவின் போது தங்கள் குழந்தைகளுக்கு விரைவான மற்றும் எளிதாக செய்யக்கூடிய டிஸ்ஸாக அமையும். உப்புமாவில் புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள், துத்தநாகம், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது சிறுநீரகங்கள், இதயம், எலும்புகள் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் நிலையை பராமரிக்கவும் மேம்படுத்தவும் உதவுகிறது. வெறும் உப்புமா மட்டும் செய்யாமல் இதனுடன் பட்டாணி, கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகளைச் சேர்க்கும் போது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் கிடைக்கும்.

  MORE
  GALLERIES