இந்தியாவில் ஏற்கனவே கோடை காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில் மக்கள் அனைவரும் சூரியனின் வெப்ப அலைகளில் இருந்து தங்களை பாதுகாக்க என்த்னென்னவோ வழிமுறைகளை பின்பற்ற துவங்கி விட்டனர். இந்திய ஆய்வு மையமும் கோடை வெப்பத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தேவையான வழிமுறைகளை பின்பற்றுமாறு மக்களை அறிவுறுத்தியுள்ளது. சில இடங்களில் 40லிருந்து 45 டிகிரி செல்சியஸ் வரை கூட வெப்பம் அதிகரிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போதே சில இடங்களில் மேலே சொன்ன வெப்பநிலையை விட அதிக வெப்பத்தை உணரமுடிகிறது.
இது போன்ற சூழ்நிலையில் அதீத வெப்பத்தினால் உடலில் நீர் சத்து குறைவதும், உடல் சூடு அதிகரிப்பதும் இயல்பான ஒன்றுதான். அதிலும் குறிப்பாக பகல் நேரத்தில் வெப்பம் அதிகம் இருக்கும் சமயங்களில் இலகுவான காற்றோட்டம் உள்ள ஆடைகளை உடுத்திக் கொள்வதன் மூலம் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து நம்மால் தப்பிக்க இயலும். அதே சமயம் கோடைகாலங்களில் நமது உணவு பழக்கத்தில் கவனம் செலுத்துவதும் மிகவும் முக்கியமான ஒன்று ஆகும்.
எலக்ட்ரோலைட்டுகள் : இளநீரில் பொட்டாஷியம், சோடியம் மற்றும் மக்னீசியம் ஆகியவை அதிகம் நிறைந்துள்ளன. மேலும் இந்த எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் தாதுக்கள் உடலில் நீர் சத்து குறைவதை தடுப்பதோடு உடல் வெப்பத்தையும் குறைக்க உதவுகிறது. உடலில் நீர் சத்து குறைவதால் ஏற்படும் மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்படாமலும் நம்மை பாதுகாக்கிறது.