ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் அதிகம் உள்ளன: ஃபிளாவனாய்ட்ஸ் உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்கள் குடை மிளகாய்களில் நிறைந்துள்ளன. இது உடலை ஆக்ஸிடேட்டிவ் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. குடை மிளகாய்களின் ரிச்சான சிவப்பு கலருக்கு Capsanthin தான் காரணம். Capsanthin என்பது ஒரு சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகும். இது UVA மற்றும் UVB சேதத்திலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது.
கேன்சர் அபாயத்தை குறைக்கிறது: குடை மிளகாய்கள் உண்மையிலே சூப்பர்ஃபுட் ஆகும். ஏனென்றால் இதில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் Apigenin, lupeol, luteolin, quercetin மற்றும் capsiate உள்ளிட்ட பல ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளன. தவிர பீட்டா-கரோட்டின், பீட்டா-கிரிப்டோக்சாந்தின் (beta-cryptoxanthin) மற்றும் லைகோபீன் போன்ற கரோட்டினாய்டுகளும் உள்ளன.
இதய ஆரோக்கியத்திற்கு நல்லது : குடை மிளகாயில் லைகோபீன், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளன. இவை ஃப்ரீ ரேடிக்கல்ஸ் சேதத்தை தடுப்பதன் மூலம் நம்முடைய இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. அதே போல Homocysteine-ன் ஹை லெவல் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. குடை மிளகாய்களில் இருக்கும் ஏராளமான வைட்டமின் பி6 மற்றும் ஃபோலேட் Homocysteine-ன் லெவலை குறைத்து இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.