ஏனெனில் இருவேறு பொருட்களை ஒரே நேரத்தில் சாப்பிடும்போது அவை செரிமானமாக தேவைப்படும் நேரமும், அவற்றின் செரிமானத்திற்குத் தேவையான கண்டிஷனும் வேறுபட்டவையாக இருக்கின்றன. ஒரே நேரத்தில் சாப்பிட கூடாத இருவேறு பொருட்களை ஒன்றாக சாப்பிடுவது வயிற்று வலி, உப்பசம், சோர்வு, வாயு பிரச்சனை மற்றும் வயிற்றில் அசௌகரியம் உள்ளிட்ட பல சிக்கல்களை ஏற்படுத்தும்.
தொடர்ந்து நீண்ட காலத்திற்கு ஒருவர் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் ஃபுட் காம்பினேஷன்களை சாப்பிட்டு வந்தால் சரும அலர்ஜி, நாள்பட்ட செரிமான பிரச்சனைகள் மற்றும் வாய் துர்நாற்றம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தும். சரியான ஃபுட் காம்பினேஷன்களை எடுத்து கொண்டால் மட்டுமே சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க முடியும். அந்த வகையில் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் & நீங்கள் தவிர்க்க வேண்டிய மோசமான ஃபுட் காம்பினேஷன்களின் பட்டியல் இங்கே...
இரண்டு ஹை புரோட்டின் உணவுகள் : முட்டைகள் மற்றும் Bacon எனப்படும் பன்றி இறைச்சி இரண்டிலுமே புரோட்டின் அதிகம் காணப்படுகிறது மற்றும் இவை பிரபலமான காலை உணவுகளாகவும் இருக்கின்றன. அதற்காக இந்த 2 உணவுகாலயுமே ஒரே நேரத்தில் எடுத்து கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் இந்த 2 உணவுகளிலும் காணப்படும் அதிக புரதம் காரணமாக உங்கள் வயிறு ஹெவியாகி விடும். இரண்டையும் ஒரே நேரத்தில் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். நீங்கள் முதலில் லைட் புரோட்டினை சாப்பிட வேண்டும், பின் இறைச்சியை சாப்பிட வேண்டும்.
சிட்ரஸ் பழங்கள் மற்றும் பால் : புளிப்பான மற்றும் சிட்ரஸ் பழங்கள் அல்லது பொருட்களுடன் பால் சாப்பிடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போன்ற புளிப்பு உணவுகளில் வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் ஆசிட் இருப்பதால் பாலுடன் அதை சேர்த்து சாப்பிடும்போது ஆசிட் ரிஃப்ளெக்ஸ், நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு ஏற்படலாம். சிலருக்கு லாக்டோஸ் சகிப்புத்தன்மை இருக்காது. அதாவது பாலில் உள்ள லாக்டோஸை அவர்களால் ஜீரணிக்க முடியாது. அவர்களுக்கும் இந்த காம்பினேஷன் பல சிக்கல்களை ஏற்படுத்தும்.
பால் மற்றும் வாழைப்பழம் : பால் மற்றும் வாழைப்பழ காம்பினேஷன் ஹெவியானது மற்றும் ஜீரணிக்க நீண்ட நேரமும் ஆகும். இந்த காம்பினேஷன் உணவு உடலில் ஜீரணமாகும்போது நீங்கள் சோர்வு மற்றும் களைப்பை உணர்வீர்கள். நீங்கள் வாழைப்பழ மில்க் ஷேக் குடிக்க விரும்பினால், உங்களது செரிமானத்தை மேம்படுத்த ஒரு பின்ச் இலவங்கப்பட்டை அல்லது ஜாதிக்காய் பவுடர் சேர்க்கவும்.
உணவுடன் பழங்கள் : உணவுகளுடன் ஒப்பிடும்போது பழங்கள் எளிதில் ஜீரணமாகிவிடும். உணவு ஜீரணமாக அதிக நேரம் தேவைப்படலாம். எனவே உணவுடன் பழங்களை சேர்த்து சாப்பிடும் போது எளிதில் ஜீரணமாக கூடிய பழங்களும் ஜீரணமாக முடியாமல் தடுக்கப்படுகின்றன. இதனால் செரிமான மண்டலத்தில் சில தேவையற்ற விளைவுகள் ஏற்பட கூடும். எனவே உணவுடனோ அல்லது சாப்பிட்ட உடனேயோ பழங்கள் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
சீஸ் மிகுந்த உணவுடன் குளிர் பானங்கள் : பீட்சா-வுடன் கோக் சேர்த்து சாப்பிட விரும்பும் பலர் இருக்கிறார்கள். இந்த காம்பினேஷன் கவர்ச்சிகரமானதாகத் தோன்றினாலும் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. சீஸ் நிறைந்த பீட்சா போன்ற உணவுகளுடன் சேர்த்து கோக் போன்ற குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த காம்பினேஷன் வயிற்றில் மற்றும் செரிமான மண்டலத்தில் அசௌகரியம் ஏற்படுத்தலாம் மற்றும் சில நேரங்களில் வயிற்று வலியையும் ஏற்படுத்தும்.