காய்கறிகள் மற்றும் பழங்களின் தோலில் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன எனவே அவற்றை தூக்கி எறியாமல் பயன்படுத்த வேண்டும் என நிபுணர்கள் கூறுவதை கேட்டிருப்போம். ஆனால் இது எல்லா காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு பொருந்துமா என்றால் இதற்கான பதில் அநேகமாக இல்லை என்பது தான். சில பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதற்கு முன் அவற்றின் தோல் உரிக்கப்பட வேண்டும். அவை என்ன மற்றும் அவற்றின் தோல்களை ஏன் தூக்கி எறிய வேண்டும் என்பதற்கான காரணங்களை இங்கே பார்க்கலாம்.
சிறுவயது முதலே பழம் அல்லது காய்கறியின் மேல்தோலை அகற்றி அதன் பின் சாப்பிடவே நாம் பழகிவிட்டோம். 3 முக்கிய காரணங்களுக்காக பழங்கள் அல்லது காய்கறிகளின் தோலை உரிப்பது பாதுகாப்பானதாக மற்றும் சுகாதாரமானதாக கருதப்படுகிறது. அந்த வகையில் சில பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதற்கு முன் தோலை உரிப்பதற்கான காரணங்கள் கீழே..
பழங்கள் மற்றும் காய்கறிகளின் தோல்கள் கடினமானவை மற்றும் இயற்கையிலேயே நார்சத்து மிக அதிகம் (Fibrous) கொண்டவை. பொதுவாக பழங்கள் மற்றும் காய்களின் அசல் சுவை அவற்றின் தோலையும் சேர்த்து சாப்பிடுவதால் மாறி விடுகிறது. சிலவற்றின் தோல் கசப்பு சுவை கொண்டவையாக இருக்கின்றன. எனவே அவற்றின் சுவையை தங்களுக்கு பிடித்த மாதிரி சுவைக்க பலரும் தோலை நீக்கி விட்டு பயன்படுத்துகின்றனர்.
நார்சத்து அதிகம் கொண்ட பழங்கள் அல்லது காய்களின் தோல்கள் பெரும்பாலும் ஜீரணிப்பதை கடினமாக்குகிறது. இது வீக்கம், அஜீரணம், குடல் பிரச்சனைகள் மற்றும் பல சிக்கலை ஏற்படுத்த கூடும். எனவே செரிமான பிரச்சனை உள்ளவர்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடும் முன் தோலை உரித்து சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறார்கள். சாப்பிடும் முன் தோலுரிக்க வேண்டிய பழங்கள் மற்றும் காய்கறிகள்.
மாம்பழங்கள்: மாம்பழ தோலில் நார்ச்சத்துக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. கூடவே urushiol எனப்படும் தீங்கு விளைவிக்கும் ஒரு கலவை சிறிய அளவில் மாம்பழ தோலில் காணப்படுகிறது. எனவே மாம்பழங்களை சாப்பிடும் முன் அவற்றின் தோலை நீக்கிவிடுவது பாதுகாப்பானது மற்றும் பழத்தின் அசல் சுவையை நாம் ருசிக்க உதவும்.
அவகேடோ: சூப்பர்ஃபுட் என கருதப்படும் அவகேடோ பழங்களின் நன்மைகளை முழுமையாக பெற விரும்பினால் அவற்றின் தோலை நன்கு உரித்து விடுங்கள். ஏனென்றால் இந்த பழத்தின் தோல் உலர் தன்மை கொண்டது மற்றும் கரடுமுரடானது,மேலும் Pungent சுவை கொண்டது, இது பழத்தின் சுவையை கெடுக்கும். எனவே வெண்ணெய் பழம் என்னும் அவகேடோவை தோலில்லாமல் சாப்பிடுங்கள்.
சர்க்கரைவள்ளி கிழங்கு : இனிப்பு உருளைக்கிழங்கு எனப்படும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிடும் முன் தோல் நீக்கி சாப்பிட வேண்டும். சர்க்கரை வள்ளிக்கிழங்கின் கடினமான மற்றும் நார்ச்சத்து கொண்ட தோல் ஜீரணிக்க கடினமானது. வயிற்று வலி உட்பட குடல் தொடர்பான பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் இதனை தோல் நீக்கி சாப்பிட வேண்டும்.
பூசணி : பூசணிக்காயின் தோல் நாம் சாப்பிட கூடியது தான் என்றாலும் அதன் கடினமான அமைப்பு சமைக்கும் போது சாஃப்டாக அதிக நேரம் எடுக்கும். இதனால் சமைக்கும் போது பூசணிக்காயின் சதை பகுதியை அதிகமாக குக் செய்து விடுவோம். தவிர தோல் வேக அதிக நேரம் ஆகும் என்பதால், பொதுவாக நாம் பூசணியை தோலோடு சமைக்கும் போது அது முழுமையாக வெந்திருக்காது. எனவே பூசணிக்காயை சாப்பிடும் முன்பு தோலை அகற்றுவது நல்லது.
சிட்ரஸ் பழங்கள்: பல உணவுகளின் வாசனையை அதிகரிக்க நாம் ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையின் Zest-ஐ பயன்படுத்துகிறோம். சிட்ரஸ் பழங்களின் Zest என்பது Flavedo எனப்படும் தோலின் வெளிப்புற லேயரை குறிக்கிறது. சிட்ரஸ் பழங்களின் தடிமனான தோல் கசப்பாகவும் விரும்பத்தகாத சுவையுடனும் இருப்பதால், அதை சாப்பிடுவதை மட்டுப்படுத்த நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும் சிட்ரஸ் பழங்களின் தோல் ஜீரணிக்க கடினமானவை.