உடல் ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் காய்கறிகளைப் போல் பழங்களையும் தினமும் உட்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அப்படி நாம் வீட்டில் வெவ்வேற் வகையான பழங்களை வாங்கி வைத்து அவற்றை சாலட் , ஜூஸ் என விருப்பமான வகையில் கலவையாக சாப்பிடுவோம். ஆனால் அப்படி சாப்பிடும்போது ஒரு சில பழங்களை ஒன்றான கலவையாக சாப்பிடக்கூடாது என்று கூறுகின்றனர். அது செரிமானத்தை கடுமையாக பாதிக்கும் என்று கூறுகின்றனர். அவை என்னென்ன பழங்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
ஆரஞ்சு மற்றும் பால் : பாலையும் ஆரஞ்சையும் தவறி கூட ஜூஸ் போட பயன்படுத்திவிடாதீர்கள். இது உங்கள் செரிமானத்தை கடுமையாக பாதிக்கும். அதாவது அதாவது ஆரஞ்சு பழத்தில் இருக்கும் ஆசிட் வயிற்றில் செரிமானத்தை தூண்டும் நொதிகளை முற்றிலும் அழித்துவிடும். அதோடு பாலில் இருக்கும் ஸ்டார்ச் செரிமானமடையாமல் வயிற்று உபாதைகளை உண்டாக்கும்.