ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » தாய்ப்பால் கொடுக்கும் அம்மாக்கள் தவிர்க்க வேண்டிய 5 உணவுகள் என்னென்ன..?

தாய்ப்பால் கொடுக்கும் அம்மாக்கள் தவிர்க்க வேண்டிய 5 உணவுகள் என்னென்ன..?

தாய்மார்கள் சிலவற்றை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது தாய்மார்களின் பால் உற்பத்தி அளவை அதிகரிக்கவும், குழந்தை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை உறுதிசெய்யவும் வழி வகுக்கிறது.

 • 17

  தாய்ப்பால் கொடுக்கும் அம்மாக்கள் தவிர்க்க வேண்டிய 5 உணவுகள் என்னென்ன..?

  தாய்ப்பாலில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது, மேலும் இது குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்களில் தேவைப்படும் பெரும்பாலான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. எனவே, தாய்மார்கள் ஆரோக்கியமான வகையில் தாய்ப்பாலை குழந்தைகளுக்கு கொடுக்க நினைத்தால் சிலவற்றை அவசியம் கவனிக்க வேண்டியுள்ளது. அதாவது, நீங்கள் உட்கொள்வது உணவானது தாய்ப்பாலில் உள்ள பொருட்களில் சில தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது. ஆதலால், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு ஆரோக்கியமான, மாறுபட்ட உணவு முறையை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

  MORE
  GALLERIES

 • 27

  தாய்ப்பால் கொடுக்கும் அம்மாக்கள் தவிர்க்க வேண்டிய 5 உணவுகள் என்னென்ன..?

  இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பாத்ரா கூறுகையில், "தாய்மார்கள் சிலவற்றை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது தாய்மார்களின் பால் உற்பத்தி அளவை அதிகரிக்கவும், குழந்தை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை உறுதிசெய்யவும் வழி வகுக்கிறது. எனவே, பாலூட்டும் தாய்மார்கள் சில விஷயங்களைக் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். இந்த பதிவில் பாலூட்டும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய ஐந்து உணவுப் பொருட்களை நிபுணர்கள் பகிர்ந்துள்ளார் அவற்றை பற்றி விரிவாக பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 37

  தாய்ப்பால் கொடுக்கும் அம்மாக்கள் தவிர்க்க வேண்டிய 5 உணவுகள் என்னென்ன..?

  காபி : காபி எல்லோருக்கும் பிடித்தமான பானமாகும். என்றாலும், இதில் உள்ள காஃபின் என்கிற மூலப்பொருள் சில பாதிப்புகளை தரக்கூடியது. குறிப்பாக தாய்மார்கள் காபியை பருகும் போது அது குழந்தைகளுக்கு காஃபினை உடைத்து செரிமானம் செய்வது கடினம். இதன் விளைவாக, காலப்போக்கில் அதிக அளவு காஃபின் உங்கள் குழந்தைக்கு எரிச்சல் மற்றும் தூங்குவதில் சிக்கல் போன்றவற்றை ஏற்படலாம். எனவே, தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் காபியை தவிர்ப்பது நல்லது.

  MORE
  GALLERIES

 • 47

  தாய்ப்பால் கொடுக்கும் அம்மாக்கள் தவிர்க்க வேண்டிய 5 உணவுகள் என்னென்ன..?

  பெப்பர்மின்ட் : இது ஒரு வாசனைமிக்க உணவு பொருள் என்றாலும், இதிலும் சில பாதிப்புகள் தாய்மார்களுக்கு உள்ளது. பெப்பர்மின்ட் உள்ளிட்ட சில மூலிகைகள் பால் வழங்குவதைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது, மேலும் இவை ஆன்டி-கேலக்டாகோகுகள் என்று அழைக்கப்படுகின்றன. அதாவது, பால் சுரப்பை குறைக்கும் தன்மை கொண்டவை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 57

  தாய்ப்பால் கொடுக்கும் அம்மாக்கள் தவிர்க்க வேண்டிய 5 உணவுகள் என்னென்ன..?

  மது : தாய்ப்பால் கொடுக்கும் போது தாய்மார்கள் மதுவைத் தவிர்ப்பது பாதுகாப்பான வழி என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏனெனில், ஆல்கஹால் உங்கள் பால் வெளியேற்ற ரிஃப்ளெக்ஸைத் தடுக்கிறது. மேலும், இது குழந்தைக்கு உங்கள் பால் கிடைப்பதை கடினமாக்குகிறது. அத்துடன், மது அருந்துவது குழந்தையின் பால் உட்கொள்ளலை 20% முதல் 23% வரை குறைத்து, குழந்தை பாதிப்பையும், மோசமான தூக்க முறைகளையும் ஏற்படுத்தும்.

  MORE
  GALLERIES

 • 67

  தாய்ப்பால் கொடுக்கும் அம்மாக்கள் தவிர்க்க வேண்டிய 5 உணவுகள் என்னென்ன..?

  பேஸ்டுரைஸ் செய்யப்படாத பால் பொருட்கள் : எந்தவொரு மூல உணவும் நோய்த்தொற்றுக்கான ஆதாரமாக இருக்கலாம், மேலும் பேஸ்டுரைஸ் செய்யப்படாத பால் குடிப்பது சி ஜெஜூனி நோய்த்தொற்றுகளைப் பெறுவதற்கான ஆபத்து கொண்டவை. எனவே, பேஸ்டுரைஸ் செய்யப்படாத பாலை உட்கொள்வது தாய்க்கு உணவு ஒவ்வாமையை ஏற்படுத்தும், மேலும் இதனால் குழந்தையும் பாதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. குறிப்பாக பேஸ்டுரைஸ் செய்யப்படாத பால் பொருட்களில் உள்ள பாக்டீரியாக்கள் தாய்ப்பால் வழியாக குழந்தையிடம் சென்று பாதிப்பை ஏற்படுத்தலாம்.

  MORE
  GALLERIES

 • 77

  தாய்ப்பால் கொடுக்கும் அம்மாக்கள் தவிர்க்க வேண்டிய 5 உணவுகள் என்னென்ன..?

  செயற்கை இனிப்பூட்டிகள் : செயற்கை இனிப்பூட்டிகள் உடலுக்கு எப்போதும் பாதிப்பை ஏற்படுத்த கூடியவை. எனவே, தாய்மார்கள் இதை தவிர்ப்பது நல்லது. இதற்கு பதிலாக 10-15 கிராம் வெல்லம் சேர்த்துக் கொள்வது நல்லது. இது பெரிய அளவில் பாதிப்பை கொடுக்காது.

  MORE
  GALLERIES