முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » செரிமான பிரச்சனை குணமாக தினமும் 5 உலர் திராட்சை போதும்..!

செரிமான பிரச்சனை குணமாக தினமும் 5 உலர் திராட்சை போதும்..!

dry grapes | மலசிக்கல் பிரச்சினையால் அவதிப்படும் முதியோர்களுக்கு இந்த உலர் திராட்சையானது மிகவும் சிறந்த ஓர் மருந்தாக பயன்படுகிறது. தினமும் இதனை சாப்பிட்டால் மலசிக்கல் பிரச்சினை தீரும்.

  • 16

    செரிமான பிரச்சனை குணமாக தினமும் 5 உலர் திராட்சை போதும்..!

    உலர் பழங்களில் எப்போதுமே முதலிடத்தில் இருப்பது திராட்சை தான். சாதாரணமாகவே திராட்சை பழம் மிகவும் சத்தானது. அவற்றை உலர்த்தும் செயல்முறை திராட்சையை மேலும் அதிக ஊட்டச்சத்து மற்றும் கலோரி மிக்க தாக்குகிறது. பண்டைய காலத்தில் ஃபுட் பாய்ஸனிற்கு சிகிச்சை அளிக்க உலர் திராட்சை பயன்படுத்தப்பட்டது. தற்போது உலர் திராட்சைகள் விரைவான ஆற்றலை அதிகரிக்க ஸ்மூத்திஸ், ஓட்ஸ் அல்லது யோகர்ட்டில் சேர்க்கப்படுகின்றன. உலர் திராட்சை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட வேண்டிய பொருளாகும். இதில் நம் உடலுக்கு கிடைக்கக்கூடிய அனைத்து சத்துக்களும் அதிகபடியாக நிறைந்துள்ளது. இதனை சாப்பிட்டு வருவதன் காரணமாக நம் உடலுக்கு நன்மைகள் கிடைக்கிறது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

    MORE
    GALLERIES

  • 26

    செரிமான பிரச்சனை குணமாக தினமும் 5 உலர் திராட்சை போதும்..!

    செரிமானம் : ஐந்து உலர் திராட்சையை ஒரு கப் நீரில் இரவு உறங்குவதற்கு முன் ஊற வைத்து மறுநாள் காலையில் ஊற வைத்த திராட்சை மற்றும் அதனுடன் நீரையும் பருக வேண்டும். இவ்வாறு சாப்பிட்டு வருவதன் காரணமாக நம் உடலுக்கு அதிகப்படியான சத்துக்கள் கிடைக்கிறது. ஃபைபர் சத்துமிக்க உலர் திராட்சை செரிமானத்தை ஊக்குவித்து மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கிறது. தினசரி இந்த உலர் பழத்தை சாப்பிடுவதால் நல்ல குடல் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதில் இருக்கும் டார்டாரிக் அமிலம் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால் பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

    MORE
    GALLERIES

  • 36

    செரிமான பிரச்சனை குணமாக தினமும் 5 உலர் திராட்சை போதும்..!

    ரத்த சோகையை தடுக்கும் : உலர் திராட்சையில் நிரம்பி இருக்கும் இரும்பு சத்து ரத்த சோகையை தடுக்க உதவுகிறது. மேலும் உலர் திராட்சையில் காப்பர் மற்றும் உடலின் பல்வேறு பாகங்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல தேவையான சில வைட்டமின்களும் உள்ளன. எனவே தினமும் உலர் திராட்சை சாப்பிட்டு வருபவர்களுக்கு ரத்த சோகை பிரச்னை குணமாகும்.

    MORE
    GALLERIES

  • 46

    செரிமான பிரச்சனை குணமாக தினமும் 5 உலர் திராட்சை போதும்..!

    இதய நோய் அபாயத்தை தவிர்க்க : இதன் காரணமாக இதயம் சார்ந்த பாதிப்புகள் வராதவாறு பாதுகாக்கிறது. கல்லீரலையும் பாதுகாக்கிறது. உலர் திராட்சையில் உள்ள அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இவ்வித மருத்துவ குணங்கள் நிறைந்த உலர் திராட்சை நாம் வாரத்திற்கு இருமுறையாவது எடுத்துக்கொள்வது நல்லது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 56

    செரிமான பிரச்சனை குணமாக தினமும் 5 உலர் திராட்சை போதும்..!

    புற்றுநோய் : உலர் திராட்சை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும். மேலும் புற்றுநோய் மற்றும் கட்டி வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் ஆக்ஸிஜனேற்ற சேதம் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களில் இருந்து உலர் திராட்சை நம்மை பாதுகாக்கலாம். இது தவிர கண் மற்றும் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உலர் திராட்சைகள் உதவுகின்றன.

    MORE
    GALLERIES

  • 66

    செரிமான பிரச்சனை குணமாக தினமும் 5 உலர் திராட்சை போதும்..!

    40 கிராம் அல்லது ஒரு கையளவு உலர் திராட்சையில் கலோரிகள்: 108, புரோட்டின்- 1கிராம், கார்போஹைட்ரேட்ஸ்: 29 கிராம், ஃபைபர் : 1 கிராம், சுகர்- 21 கிராம் உள்ளிட்டவை அடக்கம். தவிர உலர் திராட்சையில் இரும்பு, பொட்டாசியம், காப்பர், வைட்டமின் பி 6, மாங்கனீஸ், போரான் போன்ற சத்துக்களும் நிரம்பி உள்ளன. மேலும் இது பூஜ்ஜிய சதவிகித கொழுப்பு (zero percent fat) கொண்டது. அதனால் உலர் திராட்சையை தொடர்ந்து சாப்பிட்டு வருவது நல்லது.

    MORE
    GALLERIES