முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » கேழ்வரகு மாவில் இத்தனை வகையான ஸ்னாக்ஸ் செய்யலாமா..? உடல் எடை குறைப்போரும் சாப்பிடலாம்

கேழ்வரகு மாவில் இத்தனை வகையான ஸ்னாக்ஸ் செய்யலாமா..? உடல் எடை குறைப்போரும் சாப்பிடலாம்

காய்கறிகள், பழங்கள் போன்ற நார்ச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக் கொண்டு, மாவுச்சத்து கொண்டு உணவுப் பொருள்களையும் குறைத்துக் கொள்வதும், ஸ்நாக்ஸ்களை தவிர்ப்பதும் உடல் எடையை குறைக்க உதவும்.

 • 17

  கேழ்வரகு மாவில் இத்தனை வகையான ஸ்னாக்ஸ் செய்யலாமா..? உடல் எடை குறைப்போரும் சாப்பிடலாம்

  உடல் எடையை குறைப்பதற்கு நம்மில் பலர் வெவ்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருபவர்களாக இருப்போம். குறிப்பாக, உடல் எடையை குறைக்க வெவ்வேறு உடல் பயிற்சிகளை நாம் செய்து வந்தாலும், நிறைய பேர் உணவுக் கட்டுப்பாடுகளை தான் அதிகம் பின்பற்ற முயற்சி செய்வார்கள். ஆனால், அலைபாயும் மனதுக்கும், சுவை தேடும் நாவுக்கும் கட்டுப்பாடு விதிக்க பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

  MORE
  GALLERIES

 • 27

  கேழ்வரகு மாவில் இத்தனை வகையான ஸ்னாக்ஸ் செய்யலாமா..? உடல் எடை குறைப்போரும் சாப்பிடலாம்

  காய்கறிகள், பழங்கள் போன்ற நார்ச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக் கொண்டு, மாவுச்சத்து கொண்டு உணவுப் பொருள்களையும் குறைத்துக் கொள்வதும், ஸ்நாக்ஸ்களை தவிர்ப்பதும் உடல் எடையை குறைக்க உதவும். இருப்பினும் ஒவ்வொரு வேளை சாப்பாடுகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் அல்லது மாலை நேரங்களில் பசியெடுக்கும்போது நம் மனது இயல்பாகவே ஸ்நாக்ஸ்களை தேட ஆரம்பித்து விடும். அதுபோன்ற சமயங்களில் உடலுக்கு நன்மை பயக்கும் ராகி ஸ்நாக்ஸ்களை சாப்பிடலாம்.

  MORE
  GALLERIES

 • 37

  கேழ்வரகு மாவில் இத்தனை வகையான ஸ்னாக்ஸ் செய்யலாமா..? உடல் எடை குறைப்போரும் சாப்பிடலாம்

  ராகி பிரெட் : உங்களுக்கு பிரெட் பிடித்தமானது என்றால், வாழ்நாள் முழுவதும் உங்கள் உணவுப் பட்டியலில் இது இடம்பிடித்து விடும். ராகி மாவு, புளிக்காத தயிர், கோதுமை மாவு மற்றும் பசலைக் கீரை ஆகியவற்றை கொண்டு தயார் செய்யலாம். இந்த பிரெட்டில் கொஞ்சம் காய்கறிகளை சேர்த்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 47

  கேழ்வரகு மாவில் இத்தனை வகையான ஸ்னாக்ஸ் செய்யலாமா..? உடல் எடை குறைப்போரும் சாப்பிடலாம்

  ராகி முறுக்கு : முறுக்கு என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமானது என்றாலும், அதை ஆரோக்கியமானதாக மாற்ற வேண்டும் என்று நினைத்தால் ராகி மறுக்குகளை சாப்பிடலாம். ராகி முறுக்கு மற்றும் ஒரு கப் கிரீன் டீ ஆகியவற்றை எடுத்துக் கொண்டால், உடல் எடை அதிகரிப்பை தடுக்கலாம்.

  MORE
  GALLERIES

 • 57

  கேழ்வரகு மாவில் இத்தனை வகையான ஸ்னாக்ஸ் செய்யலாமா..? உடல் எடை குறைப்போரும் சாப்பிடலாம்

  ராகி கட்லெட் : நீங்கள் தயார் செய்வதற்கு மிகவும் எளிமையான ஸ்நாக்ஸ் வகை இது. இந்த கட்லெட்டுடன் மசாலா மற்றும் காய்கறிகள் போன்ற பலவற்றை சேர்த்து ருசியானதாக சமைக்கலாம். எண்ணெயில் போட்டு பொறித்து எடுப்பதைக் காட்டிலும், தோசைக் கல்லில் சுட்டு எடுத்தால் உடல் நலனுக்கு நல்லது. குறைவான எண்ணெயில் சுட்டு எடுத்து விடலாம்.

  MORE
  GALLERIES

 • 67

  கேழ்வரகு மாவில் இத்தனை வகையான ஸ்னாக்ஸ் செய்யலாமா..? உடல் எடை குறைப்போரும் சாப்பிடலாம்

  ராகி பிஸ்கட்கள் : காலை எழுந்தவுடன் ஒரு கப் டீ மற்றும் பிஸ்கட் சாப்பிட வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருந்தால், நிச்சயமாக ராகி பிஸ்கட் வகை உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். தயார் செய்வதற்கும் இது எளிமையானது.

  MORE
  GALLERIES

 • 77

  கேழ்வரகு மாவில் இத்தனை வகையான ஸ்னாக்ஸ் செய்யலாமா..? உடல் எடை குறைப்போரும் சாப்பிடலாம்

  ராகி சிப்ஸ் : அதிக கலோரி கொண்ட உருளைக் கிழங்கு சிப்ஸ்களுக்கு பதிலாக இதை முயற்சி செய்யலாம். ராகி மாவு, கோதுமை மாவு, மிளகாய் தூள், உப்பு, தண்ணீர் ஆகியவை சேர்த்து பிசைந்து, அதை சிப்ஸ் போல நறுக்கிக் கொள்ளவும். காய்ந்த பிறகு, அதை மைக்ரோ ஓவனில் வைத்து பேக் செய்து எடுக்கலாம்.

  MORE
  GALLERIES