முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » ஏர்ஃபிரையர் யூஸ் பண்ண தெரியும்.. ஆனால் அதை சுத்தம் செய்ய தெரியலையா..? உங்களுக்கான டிப்ஸ் இதோ..!

ஏர்ஃபிரையர் யூஸ் பண்ண தெரியும்.. ஆனால் அதை சுத்தம் செய்ய தெரியலையா..? உங்களுக்கான டிப்ஸ் இதோ..!

Airfryer cleaning | ஏர்பிரையரை சுத்தம் செய்வதற்கு ஒருபோதும் நீங்கள் கடுமையான ஸ்கரப்களைப் பயன்படுத்த வேண்டாம்

  • 17

    ஏர்ஃபிரையர் யூஸ் பண்ண தெரியும்.. ஆனால் அதை சுத்தம் செய்ய தெரியலையா..? உங்களுக்கான டிப்ஸ் இதோ..!

    இன்றைக்கு விதவிதமான மற்றும் சுவையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் வருவது இயல்பு தான். இவற்றை ஹோட்டல்களில் நாம் வாங்கி சாப்பிடலாம் என்று நினைத்தால், உடல் ஆரோக்கியம் கெட்டுவிடுமே? என்ற அச்சமும் பலருக்கு ஏற்படும். இவற்றையெல்லாம் போக்கும் வகையில் தான் பல அதிநவீன சமையல் சாதனங்கள் தற்போது விற்பனையாகின்றது. அவற்றில் ஒன்று தான் இன்றைக்கு நாம் பார்க்கவுள்ள ஏர் பிரையர்.

    MORE
    GALLERIES

  • 27

    ஏர்ஃபிரையர் யூஸ் பண்ண தெரியும்.. ஆனால் அதை சுத்தம் செய்ய தெரியலையா..? உங்களுக்கான டிப்ஸ் இதோ..!

    இந்த சாதனம் கன்வெசஷன் அவன் போன்று வேலை செய்யக்கூடியது. எண்ணெய் இல்லாமல் சில நேரங்களில் சிறிதளவு எண்ணெய் பயன்படுத்தி ஏர் பிரையர் மூலம் நாம் மிருதுவாக மற்றும் மொறுமொறுப்பாக உணவுகளைச் சமைக்க முடியும். குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உருளைக்கிழங்கு வறுவல் முதல் சேனைக்கிழங்கு, இறைச்சி, மீன், கேக் மற்றும் குக்கீஸ்களைச் செய்து அசத்தலாம்.

    MORE
    GALLERIES

  • 37

    ஏர்ஃபிரையர் யூஸ் பண்ண தெரியும்.. ஆனால் அதை சுத்தம் செய்ய தெரியலையா..? உங்களுக்கான டிப்ஸ் இதோ..!

    இவை நம்மை சோம்பேறியாக்குவது ஒருபுறம் இருந்தாலும், சுவையாக செய்து சாப்பிடலாம் என்ற ஆசையில் ஏர்பிரையர் போன்ற சாதனங்களை வாங்கிவிடுவோம். ஆனால் என்ன? சுத்தம் செய்வது என்பது பலருக்கு மிகப்பெரிய சவாலாகவே இருக்கும். நீங்களும் ஏர்பிரையரை சுத்தம் செய்ய சிரமப்பட்டுக் கொண்டிருந்தால், இந்த 5 எளிதான சிறந்த ஹேக்குகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது தெரிந்துக் கொள்ளுங்கள்…

    MORE
    GALLERIES

  • 47

    ஏர்ஃபிரையர் யூஸ் பண்ண தெரியும்.. ஆனால் அதை சுத்தம் செய்ய தெரியலையா..? உங்களுக்கான டிப்ஸ் இதோ..!

    ஏர்பிரையரை சுத்தம் செய்ய உதவும் ஹேக்குகள் - உடனே சுத்தம் செய்தல்: ஏர்பிரையரில் இறைச்சி, மீன் போன்ற உணவுகளை நாம் வறுத்து சாப்பிடும் போது நிச்சயம் எண்ணெய் பயன்படுத்துவோம். சில நேரங்களில் இவை சாதனத்தின் அடியில் ஒட்டிக்கொண்டு அடியில் காய்ந்துவிடும். இதை நீங்கள் அப்படியே விட்டுவிடும் போது ஏர்பிரையர் வீணாகிவிடும். எனவே நீங்கள் சமைத்து முடித்து சாதனம் குளிர்ந்த பின்னதாக உலர்ந்த துணியால் துடைக்க வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 57

    ஏர்ஃபிரையர் யூஸ் பண்ண தெரியும்.. ஆனால் அதை சுத்தம் செய்ய தெரியலையா..? உங்களுக்கான டிப்ஸ் இதோ..!

    துர்நாற்றத்தைப் போக்குதல்: அடுத்ததாக முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் பயன்படுத்திய ஏர்பிரையரில் துர்நாற்றத்தை அகற்றுதல். பல விதமான உணவுகளை நீங்கள் சமைப்போம் என்பதால், இதில் நிச்சயம் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். நீங்கள் எலுமிச்சை சாறை துணியில் நனைத்துக் கொண்டு ஏர்பிரையருக்குள் நன்றாக துடைத்து எடுக்க வேண்டும். இதன் மூலம் தேவையில்லாத வாசனை வருவதைத் தவிர்ப்பதோடு கிருமிகளை அகற்ற முடியும்.

    MORE
    GALLERIES

  • 67

    ஏர்ஃபிரையர் யூஸ் பண்ண தெரியும்.. ஆனால் அதை சுத்தம் செய்ய தெரியலையா..? உங்களுக்கான டிப்ஸ் இதோ..!

    ஸ்கரப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல்: ஏர்பிரையரை சுத்தம் செய்வதற்கு ஒருபோதும் நீங்கள் கடுமையான ஸ்கரப்களைப் பயன்படுத்த வேண்டாம். உள்ளே நீங்கள் சுத்தம் செய்ய வேண்டும் என்றால், மென்மையான கடற்பாசிகளைப் பயன்படுத்தவும். இதோடு ஏர்பிரை ட்ரேயில் இருந்து சிக்கிய உணவை அகற்ற வேண்டும் என்றால், எலுமிச்சை, உப்பைப் பயன்படுத்தலாம். நீங்கள் ஏர்பிரையரை கழுவும் போது வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து பின்னர் நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 77

    ஏர்ஃபிரையர் யூஸ் பண்ண தெரியும்.. ஆனால் அதை சுத்தம் செய்ய தெரியலையா..? உங்களுக்கான டிப்ஸ் இதோ..!

    வெளிப்புறத்தை சுத்தம் செய்தல்: எந்தளவிற்கு ஏர்பிரையரின் உட்பகுதிக்குள் சுத்தம் செய்வதற்கு முயல்கிறோமோ? அந்த அளவிற்கு வெளிப்புறத்தையும் நாம் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஏர்பிரையரில் வேலை முடிந்தவுடன் அணைத்தபிறகு ஈரமான துணியைக் கொண்டு சுத்தம் செய்யவும்.

    MORE
    GALLERIES