முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » கொலஸ்ட்ரால் இருக்கவங்க சாப்பிடவே கூடாத 4 உணவுகள்..!

கொலஸ்ட்ரால் இருக்கவங்க சாப்பிடவே கூடாத 4 உணவுகள்..!

கொலஸ்ட்ரால் காரணமாக உருவாகும் இதயம் தொடர்பான சிக்கல்களை குறைக்க, சிவப்பு இறைச்சி, வறுத்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் வேகவைத்த பொருட்களை உட்கொள்வதை நிறுத்த வேண்டும்.

 • 18

  கொலஸ்ட்ரால் இருக்கவங்க சாப்பிடவே கூடாத 4 உணவுகள்..!

  உங்கள் உணவு முறை சரியாக இருந்தால், நாள்பட்ட நோய்களின் அபாயத்தைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. இருப்பினும், சில சமயங்களில் அந்த உணவுகள் உடல் நலத்திற்கு கேடு என்று தெரிந்தாலும் அதன் தோற்றமும், சுவையும் சாப்பிட வைத்துவிடும். இந்த உண்ணும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கும்போது அது உடல் நலத்தில் விபரீத ஆபத்தை உண்டாக்குகிறது. குறிப்பாக கொழுப்பு பரவலாக உடலில் சேர ஆரம்பிக்கிறது. இதை நாள் கணக்கில் கண்டுக்காமல் விட்டால் உயிருக்கே மோசமாக மாறிவிடுகிறது. அப்படி கொழுப்பு அதிகரிப்பை உண்டாக்கும் உணவுகளும், அதனால் வரும் ஆபத்துகளை பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 28

  கொலஸ்ட்ரால் இருக்கவங்க சாப்பிடவே கூடாத 4 உணவுகள்..!

  கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. "உலகளவில், இஸ்கிமிக் இதய நோய்களில் மூன்றில் ஒரு பங்கு அதிக கொலஸ்ட்ரால் காரணமாக உள்ளது," என்று உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகிறது. மேலும் கொழுப்பின் அதிகரிப்பு வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் நோய் சுமைக்கு ஒரு முக்கிய காரணம் என்று கூறுகிறது. 2008 ஆம் ஆண்டில், உலகளவில் பெரியவர்களிடையே கொழுப்பின் பரவல் 39% ஆக இருந்தது (ஆண்களுக்கு 37% மற்றும் பெண்களுக்கு 40%).

  MORE
  GALLERIES

 • 38

  கொலஸ்ட்ரால் இருக்கவங்க சாப்பிடவே கூடாத 4 உணவுகள்..!

  ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் கூற்றுப்படி, கொலஸ்ட்ரால் காரணமாக உருவாகும் இதயம் தொடர்பான சிக்கல்களை குறைக்க, சிவப்பு இறைச்சி, வறுத்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் வேகவைத்த பொருட்களை உட்கொள்வதை நிறுத்த வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 48

  கொலஸ்ட்ரால் இருக்கவங்க சாப்பிடவே கூடாத 4 உணவுகள்..!

  சிவப்பு இறைச்சி எப்பொழுதும் கொலஸ்ட்ராலுக்கு கேடு என்று கருதப்படுகிறது மற்றும் அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அதிகரிப்பில் பாதிப்பு ஏற்படாத வகையில் சிவப்பு இறைச்சியை சாப்பிட வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. "மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் ஆட்ட்டிறைச்சி போன்றவை நிறைவுற்ற கொழுப்பு கொண்டவை.

  MORE
  GALLERIES

 • 58

  கொலஸ்ட்ரால் இருக்கவங்க சாப்பிடவே கூடாத 4 உணவுகள்..!

  ஹாம்பர்கர், விலா எலும்புகள், பன்றி இறைச்சி சாப்ஸ் மற்றும் ரோஸ்ட் போன்ற இறைச்சியில் அதிக கொழுப்பு உள்ளது. நீங்கள் அதற்காக இறைச்சியை முழுவதுமாக தவிர்க்க வேண்டியதில்லை. எப்போதாவது மட்டும் சாப்பிடுங்கள். தோல் இல்லாத கோழி அல்லது வான்கோழி மார்பக கறி, மீன் போன்ற நிறைவுற்ற கொழுப்பு குறைவாக உள்ள இறைச்சியை உட்கொள்ளுங்கள்" என்று ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

  MORE
  GALLERIES

 • 68

  கொலஸ்ட்ரால் இருக்கவங்க சாப்பிடவே கூடாத 4 உணவுகள்..!

  குறிப்பாக அதிக கொலஸ்ட்ரால் கொண்ட நோயாளிகள் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உட்கொள்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் பெரும்பாலும் இறைச்சியின் கொழுப்புகளையே பயன்படுத்துகின்றனர். எனவே அதிக அளவு கொலஸ்ட்ரால் மற்றும் நிறைவுற்ற கொழுப்பு ஆபத்தில் முடியும். இது ஏற்கனவே அதிக கொழுப்பு உள்ளவர்களின் இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளுக்கு சில ஆரோக்கியமான மாற்றுகளை நிபுணர்கள் பரிந்துரைத்தாலும், இவையும் கொலஸ்ட்ரால் இல்லாதவை அல்ல.

  MORE
  GALLERIES

 • 78

  கொலஸ்ட்ரால் இருக்கவங்க சாப்பிடவே கூடாத 4 உணவுகள்..!

  பலருக்கு, குக்கீகள் மற்றும் பேஸ்ட்ரிகள் அதீத ஈர்ப்பு இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த இனிப்பு உணவுகளை சிற்றுண்டியாகவோ அல்லது ஆசைப்பட்டாலோ சாப்பிட விரும்புகிறார்கள். வியக்கத்தக்க அளவு வெண்ணெய், மற்றும் சர்க்கரை மனித உடலுக்கு எந்த நன்மையும் செய்யாது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக இரத்தத்தில் ஏற்கனவே கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்திருப்பவர்களுக்கு இது எதிர்பாராத எதிர்கால பேரழிவை உருவாக்குகிறது.

  MORE
  GALLERIES

 • 88

  கொலஸ்ட்ரால் இருக்கவங்க சாப்பிடவே கூடாத 4 உணவுகள்..!

  பலரால் மொறுமொறுப்பான வறுத்த உணவுகள் சாப்பிடுவதை நிறுத்த முடியாது. அதிலும் எண்ணெயில் நன்கு வறுத்த உணவுகளை உட்கொள்வதும் தவறு என எச்சரித்துள்ளனர். அவர்கள் சொல்வது போல், நன்கு வறுக்கப்படுவது உணவை சாப்பிடும்போது ஆற்றல் அடர்த்தி அல்லது கலோரி எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இதற்கு மாற்றாக வறுத்த உணவை சாப்பிட ஏர் பிரையர் அல்லது ஆரோக்கியமான எண்ணெயைப் பயன்படுத்துங்கள் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

  MORE
  GALLERIES