முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » இனி உறை மோர் இல்லாமலே பாலை தயிராக்க முடியும்... இதுதான் அந்த இரகசியம்..!

இனி உறை மோர் இல்லாமலே பாலை தயிராக்க முடியும்... இதுதான் அந்த இரகசியம்..!

வெள்ளியை வைத்து தயிரை உண்டாக்க முடியும் என்று கூறினால் நம்ப முடியுமா? ஆம் தயிராக மாறாத பாலை வெள்ளியை கொண்டு கூட தயிராக மாற்றலாம்.

 • 15

  இனி உறை மோர் இல்லாமலே பாலை தயிராக்க முடியும்... இதுதான் அந்த இரகசியம்..!

  பொதுவாகவே நாம் வீட்டில் ஏற்கனவே உள்ள பாலை தயிராக மாற்றுவதற்கு நாம் ஏற்கனவே வைத்துள்ள சிறிதளவு தயிரை பாலுடன் சேர்த்து சில மணி நேரம் வைத்தால் பால் தயிராக மாறிவிடும். இதனை ஜமான் என்றும் அழைப்பார்கள். ஆனால் சில நேரங்களில் நீங்கள் எவ்வளவு முயற்சித்தாலும் பால் தயிறாக மாறி இருக்காது. அவசர நேரங்களில் இது போன்ற சங்கடத்தில் மாட்டிக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பவர்களுக்கான பதிவு தான் இது. மேலே சொன்ன முறையில்லாமல் வேறு சில எளிமையான முறைகளில் வீட்டிலேயே கிடைக்கும் பொருள்களை வைத்து நம்மால் தயிறை உண்டாக்க முடியும்.

  MORE
  GALLERIES

 • 25

  இனி உறை மோர் இல்லாமலே பாலை தயிராக்க முடியும்... இதுதான் அந்த இரகசியம்..!

  பச்சை மிளகாய்: ஆம்! நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் பச்சை மிளகாய் வைத்து நம்மால் தயிறை தயாரிக்க முடியும். ஒரு கிண்ணம் நிறைய பாலை எடுத்துக்கொண்டு, அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். பிறகு அதனை அடுப்பில் வைத்து குறைவான தீயில் சிறிது நேரம் விதமாக சூடாகும் வரை வைக்கவும். பால் மிதமான அளவு சூடானதும் அதனை மீண்டும் ஒரு கின்னத்தில் ஊற்றி அதனை நன்றாக கழுவி சுத்தம் செய்து பச்சை மிளகாய் போட வேண்டும். இப்போது அந்த பாத்திரத்தை மூடி 12 மணி நேரம் வரை அப்படியே வைக்கவும். 12 மணி நேரம் கழித்து பார்த்தால் பால் தயிராக மாறி இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 35

  இனி உறை மோர் இல்லாமலே பாலை தயிராக்க முடியும்... இதுதான் அந்த இரகசியம்..!

  வெள்ளி: வெள்ளியை வைத்து தயிறை உண்டாக்க முடியும் என்று கூறினால் நம்ப முடியுமா? உங்களிடம் உள்ள வெள்ளி மோதிரம் அல்லது வெள்ளி செயின் அல்லது வெள்ளி காயின் வைத்துக் கூட உங்களால் தயிரை உண்டாக்க முடியும். ஆனால் அந்த வெள்ளியில் எந்த விதமான துரு கறைகளும் இல்லாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு நன்றாக ஸ்டெர்லைஸ் செய்த வெள்ளியை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அந்த சில்வர் நாணயம் அல்லது சில்வர் நகையை மிதமான அளவு சூடுபடுத்தி பாலில் போட்டு மூடி வைக்க வேண்டும். 12 மணி நேரம் கழித்து திறந்து பார்த்தால் பால் தயிராக மாறி இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 45

  இனி உறை மோர் இல்லாமலே பாலை தயிராக்க முடியும்... இதுதான் அந்த இரகசியம்..!

  எலுமிச்சம்பழம்: மிதமான அளவில் சூடுபடுத்தப்பட்ட பாலை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, அதில் நம் எடுத்து வைத்துள்ள எலுமிச்சம் பழத்தை பாதியாக நறுக்கி, அதில் ஒரு பாதியில் உள்ள சாறை முழுவதுமாக பாலில் பிழிய வேண்டும். பிறகு அந்த பாலை மூடி வைத்துவிட வேண்டும். 12 மணி நேரம் கழித்து பார்க்கையில் பால் தயிராக மாறியிருக்கும்.

  MORE
  GALLERIES

 • 55

  இனி உறை மோர் இல்லாமலே பாலை தயிராக்க முடியும்... இதுதான் அந்த இரகசியம்..!

  சிகப்பு மிளகாய்: காய்ந்த சிகப்பு மிளகாய்களும் கிட்டத்தட்ட பச்சை மிளகாய்களைப் போலவே வேலை செய்யும். மிதமான அளவு சூடான பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, நம் எடுத்து வைத்துள்ள சிகப்பு மிளகாய்களை அதில் போட வேண்டும். 12 மணி நேரம் வரை அதனை மூடி வைத்து பிறகு திறந்து பார்த்தால் பால் தயிராக மாறி இருக்கும்.

  MORE
  GALLERIES