முகப்பு » புகைப்பட செய்தி » சியா விதைகள் தரும் 10 நன்மைகள்!வெயில் காலத்தை கடக்க நல்லதொரு ஐடியா..

சியா விதைகள் தரும் 10 நன்மைகள்!வெயில் காலத்தை கடக்க நல்லதொரு ஐடியா..

chia seeds | சாதாரணமாக சாலையோரங்களில் உள்ள ஜூஸ் கடைகளில் கூட நாம் பருகும் குளிர்பானங்களில் சியா விதைகளை கலந்து தருவார்கள்.

 • 110

  சியா விதைகள் தரும் 10 நன்மைகள்!வெயில் காலத்தை கடக்க நல்லதொரு ஐடியா..

  சியா விதைகள் இன்றி ஒரு கோடைகாலம் இருக்க முடியாது. சாதாரணமாக சாலையோரங்களில் உள்ள ஜூஸ் கடைகளில் கூட நாம் பருகும் குளிர்பானங்களில் சியா விதைகளை கலந்து தருவார்கள். இது மட்டுமல்லாமல் சாலட் தயாரிக்கும்போது சியா விதைகளை சேர்த்துக் கொள்ளலாம். இதை எப்படி உபயோகித்தாலும் முதலில் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
  பார்ப்பதற்கு அளவில் சிறியதாக உள்ள சியா விதைகளில் நம் உடலுக்கும், மனதிற்கும் பலன் தரக் கூடிய அம்சங்கள் நிரம்பியுள்ளன. அவற்றில் சிலவற்றை இந்தச் செய்தியில் பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 210

  சியா விதைகள் தரும் 10 நன்மைகள்!வெயில் காலத்தை கடக்க நல்லதொரு ஐடியா..

  நார்ச்சத்து நிரம்பியது
  சியா விதைகளில் சுமார் 92 சதவீதம் அளவுக்கு நார்ச்சத்து நிரம்பியுள்ளது. இதனால், மாவுச்சத்து குறைவாக இருக்கிறது. இந்த நார்ச்சத்து என்பது கரையும் தன்மை கொண்டது. நம் குடலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களுக்கு உணவாக பயன்படுகிறது. இதனால், குடல் நலன் மேம்படும்.

  MORE
  GALLERIES

 • 310

  சியா விதைகள் தரும் 10 நன்மைகள்!வெயில் காலத்தை கடக்க நல்லதொரு ஐடியா..

  இதய நோய் ஆபத்துகள் குறைகின்றன
  தினசரி உங்கள் உணவுப் பட்டியலில் சியா விதைகள் இருந்தால், இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை தவிர்க்கலாம். குறிப்பாக, ரத்தத்தில் உள்ள டிரிகிளைசைரைடு கொழுப்பை இது கரைக்கிறது. உடல் உள்ளுறுப்புகளின் வீக்கம் குறைவதுடன், இன்சுலின் சுரப்பு அதிகமாகிறது. உடலுக்கு நன்மை பயக்கும் ஹெச்டிஎல் கொழுப்பு அதிகரிக்கும்.

  MORE
  GALLERIES

 • 410

  சியா விதைகள் தரும் 10 நன்மைகள்!வெயில் காலத்தை கடக்க நல்லதொரு ஐடியா..

  எலும்புகள் பலப்படும்
  நமது எலும்புகளுக்கு வலுவூட்டக் கூடிய கால்சியம், புரதம், மேக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துகள் சியா விதைகளில் இருக்கிறது. பால் பொருட்களை தவிர்ப்பவர்களுக்கு கால்சியம் சத்து கிடைக்க உதவியாக இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 510

  சியா விதைகள் தரும் 10 நன்மைகள்!வெயில் காலத்தை கடக்க நல்லதொரு ஐடியா..

  ஆன்டி-ஆக்ஸிடண்ட் அதிகம்
  உடலின் செல்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடிய கிருமிகளை அழிப்பதில், சியா விதைகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட் சத்துகளின் பங்கு அதிகமாகும். வயது முதிர்வை தடுக்கிறது.

  MORE
  GALLERIES

 • 610

  சியா விதைகள் தரும் 10 நன்மைகள்!வெயில் காலத்தை கடக்க நல்லதொரு ஐடியா..

  உயர் தர புரதச்சத்து
  சியா விதைகளில் உயர் தரத்திலான புரதம் நிரம்பியிருக்கிறது என்பதை நாம் மறந்து விடக் கூடாது. ஆகவே, இதை அதிகம் எடுத்துக் கொள்ளும்போது நமக்கு பசி உணர்வு கட்டுப்படுகிறது. இதனால், இரவு நேர பசி அல்லது ஸ்நாக்ஸ் சாப்பிடும் ஆசை கட்டுப்படுத்தப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 710

  சியா விதைகள் தரும் 10 நன்மைகள்!வெயில் காலத்தை கடக்க நல்லதொரு ஐடியா..

  ஊட்டச்சத்துகள் நிரம்பியது
  ஒரு அவுன்ஸ் சியா விதைகளில் 11 கிராம் நார்ச்சத்து, 4 கிராம் புரதம், 5 கிராம் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் ஆகியவை நிரம்பியுள்ளது. இது தவிர 18 சதவீதம் கால்சியம், 30 சதவீதம் மேக்னீசியம், 27 சதவீதம் பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. வெறும் 137 கலோரிகள் மட்டுமே உண்டு.

  MORE
  GALLERIES

 • 810

  சியா விதைகள் தரும் 10 நன்மைகள்!வெயில் காலத்தை கடக்க நல்லதொரு ஐடியா..

  உடல் எடையை குறைக்கலாம்
  நிரம்பிய புரதச் சத்து மற்றும் நார்ச்சத்து போன்றவை இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவிகரமாக இருக்கும். இதை சாப்பிடும்போது வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும்.

  MORE
  GALLERIES

 • 910

  சியா விதைகள் தரும் 10 நன்மைகள்!வெயில் காலத்தை கடக்க நல்லதொரு ஐடியா..

  ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்
  சப்ஜா விதைகளைப் போன்றே சியா விதைகளிலும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளது. விலங்குகளில் இருந்து கிடைக்கும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அளவுக்கு வராது என்றாலும், இதுவும் உடலுக்கு நன்மை தரக் கூடியதுதான்.

  MORE
  GALLERIES

 • 1010

  சியா விதைகள் தரும் 10 நன்மைகள்!வெயில் காலத்தை கடக்க நல்லதொரு ஐடியா..

  குளிர்ச்சி தருகிறது
  கோடை காலத்தில் நம் உடலில் நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்ளவும், உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் இது உதவிகரமாக இருக்கும். சியா விதைகளை எடுத்துக் கொண்டால் வாதம், பித்தம் குறையும் என்றும், கபம் (நீர்ச்சத்து) அதிகரிக்கும் என்றும் ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது.

  MORE
  GALLERIES