அதேபோல குறிப்பிட்ட கிளைமேட்டிற்கு பொருந்தாத உணவுகள் மற்றும் பானங்களை எடுத்து கொள்வது காரணமே இல்லாமல் நம்மை மந்தமாக அல்லது எரிச்சலாக உணர வைக்க கூடும். எந்த சீசனிலும் நமது உடலை ஹைட்ரேட்டாக வைத்து கொள்வது மிக முக்கியம். அதுவும் வெயில் சுட்டெரிக்கும் கோடை என்றால் கட்டாயம் போதுமான நீர்ச்சத்துடன் உடலை ஹைட்ரேட்டாக வைத்திருப்பது அவசியமாகிறது.