முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » கசகசா முதல் அரிசி வரை... இந்த உணவுப்பொருட்களை ஊற வைத்த பின்புதான் சமைக்க வேண்டும்..!

கசகசா முதல் அரிசி வரை... இந்த உணவுப்பொருட்களை ஊற வைத்த பின்புதான் சமைக்க வேண்டும்..!

சில உணவுப் பொருட்களை ஊற வைப்பதன் மூலமாக அதில் உள்ள நுண் ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்கின்றன. எந்த உணவுப் பொருளானாலும் பொதுவாக 4 முதல் 5 மணி நேரம் ஊறினால் போதுமானது.

 • 112

  கசகசா முதல் அரிசி வரை... இந்த உணவுப்பொருட்களை ஊற வைத்த பின்புதான் சமைக்க வேண்டும்..!

  சில உணவுப் பொருள்களை நேரடியாக வேக வைப்பது சற்று கடினம் தான். அத்தகைய உணவுப் பொருட்களை ஊற வைப்பதன் மூலமாக மென்மையாக மாற்றி, பின்னர் எளிமையாக வேக வைத்துக் கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 212

  கசகசா முதல் அரிசி வரை... இந்த உணவுப்பொருட்களை ஊற வைத்த பின்புதான் சமைக்க வேண்டும்..!

  அதேபோல சில உணவுப் பொருட்களை ஊற வைப்பதன் மூலமாக அதில் உள்ள நுண் ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்கின்றன. எந்த உணவுப் பொருளானாலும் பொதுவாக 4 முதல் 5 மணி நேரம் ஊறினால் போதுமானது. சில உணவுப் பொருட்களை இரவெல்லாம் (8 மணி நேரத்திற்கு குறையாமல்) ஊற வைக்க வேண்டியிருக்கும். எதையெல்லாம் ஊற வைத்தே ஆக வேண்டும் என்ற தகவலை இங்கே பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 312

  கசகசா முதல் அரிசி வரை... இந்த உணவுப்பொருட்களை ஊற வைத்த பின்புதான் சமைக்க வேண்டும்..!

  கசகசா : வெள்ளை நிறத்தில் குருணை போல இருக்கும் கசகசாவானது உணவுக்கு முக்கியமாக பயன்படுத்தப்படும் மசாலா பொருளாக உள்ளது. இதில் விட்டமின் பி, ஃபோலேட் மற்றும் தியமைன் போன்ற சத்துக்கள் இருக்கின்றன. இதை ஊற வைத்தால் வெளிப்புற தோல் மென்மையாக நல்ல வாசனையை கொடுக்கும்.

  MORE
  GALLERIES

 • 412

  கசகசா முதல் அரிசி வரை... இந்த உணவுப்பொருட்களை ஊற வைத்த பின்புதான் சமைக்க வேண்டும்..!

  அரிசி : சராசரியாக அரிசி வேக அரை மணி நேரம் தேவை. ஆனால், பழைய அரிசி என்றால் வேக அதிக நேரமெடுக்கும். அதை ஊற வைத்தால் துரிதமாக வெந்து உணவுக்கு தயாராகும். அத்துடன் அரிசியை ஊற வைத்து அலசினால் அதிலுள்ள அதிகப்படியான ஸ்டார்ட் சத்து வெளியேற்றப்படும். அதிலும் அரிசியை வேக வைத்து வடித்து சாப்பிடுவது நல்லது.

  MORE
  GALLERIES

 • 512

  கசகசா முதல் அரிசி வரை... இந்த உணவுப்பொருட்களை ஊற வைத்த பின்புதான் சமைக்க வேண்டும்..!

  பாதாம் : உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள விரும்பும் நபர்கள் பாதாம் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதை ஊற வைத்து சாப்பிட்டால் அதிலுள்ள சத்துக்களை நம் உடல் எளிதாக உறிஞ்சிக் கொள்ளும். அத்துடன் செரிமானம் ஆவதும் எளிமையாக இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 612

  கசகசா முதல் அரிசி வரை... இந்த உணவுப்பொருட்களை ஊற வைத்த பின்புதான் சமைக்க வேண்டும்..!

  மாங்காய் : மாங்காய் உஷ்ணத்தை கிளப்பக் கூடியது என்றாலும் கோடை காலத்தில் நாம் விரும்பி சாப்பிடக் கூடிய காய் வகையாக உள்ளது. தண்ணீரில் ஊற வைத்தால் அதன் உஷ்ணத்தன்மை குறையும். தண்ணீரில் ஊற வைப்பதன் மூலமாக மாங்காயில் உள்ள பைடிக் அமிலம் வெளியேற்றப்படும்.

  MORE
  GALLERIES

 • 712

  கசகசா முதல் அரிசி வரை... இந்த உணவுப்பொருட்களை ஊற வைத்த பின்புதான் சமைக்க வேண்டும்..!

  உலர் திராட்சை : உலர் திராட்சையை குறைந்தபட்சம் 8 மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும். இது நம் உடல் எடையை குறைக்க உதவுகிறது மற்றும் முடி மெலிவடைந்து போவதை தடுக்கிறது. தூக்கமின்மை பிரச்சினை இருப்பவர்கள் உலர் திராட்சை சாப்பிட்டு வந்தால் அவர்களின் மனநலன் மேம்படும் மற்றும் நன்றாக தூக்கம் வரும்.

  MORE
  GALLERIES

 • 812

  கசகசா முதல் அரிசி வரை... இந்த உணவுப்பொருட்களை ஊற வைத்த பின்புதான் சமைக்க வேண்டும்..!

  பச்சை பாசிப்பயறு : பச்சை பாசிப்பயறை ஊற வைத்தால் அது மென்மையாகி எளிமையாக வேகும். இதில் ஆண்டிஆக்ஸிடன்ஸ் மற்றும் ஃபிளேவனாய்ட்ஸ் போன்ற சத்துக்கள் இருக்கின்றன. பாசிப்பயறை ஊற வைப்பதால், ரத்த நாளங்களுக்கு தீங்கு விளைவிக்கின்ற தன்மை மட்டுப்படுத்தப்படும்.

  MORE
  GALLERIES

 • 912

  கசகசா முதல் அரிசி வரை... இந்த உணவுப்பொருட்களை ஊற வைத்த பின்புதான் சமைக்க வேண்டும்..!

  ஆளி விதைகள் : நம் உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் ஆகியவற்றை சீரான அளவில் வைத்துக் கொள்ள இது உதவியாக அமையும். இதில் உயர் தரமான நார்ச்சத்து உள்ளது. அது செரிமானம் தொடர்புடைய பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கிறது.

  MORE
  GALLERIES

 • 1012

  கசகசா முதல் அரிசி வரை... இந்த உணவுப்பொருட்களை ஊற வைத்த பின்புதான் சமைக்க வேண்டும்..!

  ஆப்ரிகாட் : ஆப்ரிகாட் பழங்களை பெரும்பாலும் பதப்படுத்திய பின்னர் நாம் அதை பயன்படுத்தி வருகிறோம். அவ்வாறு பழங்களை பதப்படுத்துவதற்கு முன்பாக அவற்றை சுத்தமான தண்ணீரில் ஊற வைத்து அவற்றை சுத்தம் செய்ய வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 1112

  கசகசா முதல் அரிசி வரை... இந்த உணவுப்பொருட்களை ஊற வைத்த பின்புதான் சமைக்க வேண்டும்..!

  ராஜ்மா : பீன்ஸ் வகையைச் சேர்ந்த ராஜ்மா விதைகளை குருமா, சைவ மசாலா குழம்பு போன்ற உணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம். சிறுநீரக செயல்பாடு தொடர்புடைய பிரச்சினைகளுக்கு தீர்வளிப்பதாக இது அமையும்.

  MORE
  GALLERIES

 • 1212

  கசகசா முதல் அரிசி வரை... இந்த உணவுப்பொருட்களை ஊற வைத்த பின்புதான் சமைக்க வேண்டும்..!

  கொண்டக்கடலை : நல்ல தொரு ஊட்டசத்து நிறைந்த கொண்டக்கடலையை குறைந்தபட்சம் 8 மணி நேரம் ஊற வைக்க வெண்டும். அப்படியில்லாவிட்டால் செரிமானக் கோளாறு, வயிறு உப்புசம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கும். ஊற வைத்து சாப்பிட்டால் இது பசி உணர்வை கட்டுப்படுத்தும்.

  MORE
  GALLERIES