கொரோனா, மங்கி பாக்ஸ் போன்ற தொற்று நோய்கள் அதிகரித்து வரும் இந்த சமயத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய பொருட்களை உணவில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். நமது அன்றாட உணவில் சில அழற்சி எதிர்ப்பு மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களை சேர்ப்பதன் மூலம் உடலில் ஏற்படும் அழற்சியை தவிர்க்கலாம் அல்லது குறைக்கலாம்.
தற்போது உணவு பழக்க வழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் நமது உடல் நலத்திற்கு மிகப்பெரிய பிரச்சனையாக அமைகிறது. வறுத்த, சர்க்கரை கலந்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் அதிகப்படியான நுகர்வு சில நேரங்களில் குடல் அழற்சி, அஜீரணம், வீக்கம், மலச்சிக்கல் மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (IBS) ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. இது நமது ஹார்மோன்களை பாதிக்கலாம், இது பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம், தைராய்டு மற்றும் பிற ஹார்மோன் கோளாறுகளை ஏற்படுத்தலாம். அழற்சியானது முடக்கு வாதம் (RA) போன்ற தன்னுடல் எதிர்ப்பு கோளாறுகளையும் ஏற்படுத்தும். நீங்கள் தினமும் உட்கொள்ளக்கூடிய சில அழற்சி எதிர்ப்பு மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களின் பட்டியல் இதோ...
7. வெந்தயம்: வெந்தயம் பல காரணங்களுக்காக இந்திய சமையலில் பயன்படுத்தப்படுகிறது. மூட்டுவலி, மலச்சிக்கல், வயிற்று உப்புசம் போன்றவற்றை போக்கவும் உதவுகிறது. குறிப்பாக வெந்தயம் உடல் எடையை குறைக்க உதவுகிறது. வெந்தயம் கலந்து கொதிக்கவைக்கப்பட்ட நீரை நீராவி பிடிக்க பயன்படுத்தினால் சுவாச குழாயில் ஏற்படும் வீக்கம் குறையும்.