முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » மழை காலங்களில் வீட்டில் உள்ள தானியங்களை பாதுகாப்பது எப்படி - எளிமையான டிப்ஸ்

மழை காலங்களில் வீட்டில் உள்ள தானியங்களை பாதுகாப்பது எப்படி - எளிமையான டிப்ஸ்

நமக்கு உடல் சார்ந்த உபாதைகள் ஏற்படுவதைப் போலவே வீட்டின் சமையல் அறையில் உள்ள உணவுப் பொருட்களும் பல பாதிப்புகளை எதிர்கொள்ளும். குறிப்பாக சேமித்து வைக்கப்பட்டுள்ள பருப்பு மற்றும் தானியங்களில் வண்டு பிடிக்கத் தொடங்கிவிடும்.

  • 16

    மழை காலங்களில் வீட்டில் உள்ள தானியங்களை பாதுகாப்பது எப்படி - எளிமையான டிப்ஸ்

    கர்நாடகம், குஜராத், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. ஆறுகள் எல்லாம் கரை புரண்டு ஓடத் தொடங்கியுள்ளது. கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் காவிரி நீர்வரத்தும் கூட அதிகரித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் ஆங்காங்கே ஒன்றிரண்டு ஊர்களில் மட்டுமே மழை எட்டிப் பார்க்கிறது. எனினும் வெகு விரைவில் பருவமழை கூடுதலாகப் பெய்யத் தொடங்கும் என்று எதிர்பார்க்கலாம். பொதுவாக மழைக்காலங்களில் காற்று மிகுந்த ஈரப்பதத்துடன் இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 26

    மழை காலங்களில் வீட்டில் உள்ள தானியங்களை பாதுகாப்பது எப்படி - எளிமையான டிப்ஸ்

    இதனால், நமக்கு உடல் சார்ந்த உபாதைகள் ஏற்படுவதைப் போலவே வீட்டின் சமையல் அறையில் உள்ள உணவுப் பொருட்களும் பல பாதிப்புகளை எதிர்கொள்ளும். குறிப்பாக சேமித்து வைக்கப்பட்டுள்ள பருப்பு மற்றும் தானியங்களில் வண்டு பிடிக்கத் தொடங்கிவிடும். நீங்கள் எவ்வளவு தான் பாதுகாப்பாக சேமித்து வைத்திருந்தாலும் கூட, ஈரப்பதம் எப்படியாகினும் உணவுப் பொருள்களை பதம் பார்த்துவிடும். இந்தச் சூழலில் சில எளிமையான டிப்ஸ்களை பின்பற்றுவதன் மூலமாக உணவுப் பொருள்களை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

    MORE
    GALLERIES

  • 36

    மழை காலங்களில் வீட்டில் உள்ள தானியங்களை பாதுகாப்பது எப்படி - எளிமையான டிப்ஸ்

    முழு மஞ்சள் : மஞ்சள் நல்ல வாசம் மிகுந்தது. இந்த வாசனைக்கு வண்டுகள் தூரமாக ஓடிவிடும். ஆகவே எந்தவொரு தானியம் அல்லது பருப்பு டப்பாக்களிலும் 3 அல்லது 4 மஞ்சள் துண்டுகளை போட்டு வையுங்கள். மழைக்காலம் முடிந்த பிறகு அதே மஞ்சளை நீங்கள் சமையலுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    MORE
    GALLERIES

  • 46

    மழை காலங்களில் வீட்டில் உள்ள தானியங்களை பாதுகாப்பது எப்படி - எளிமையான டிப்ஸ்

    கடுகு எண்ணெய் : ஒருவேளை உங்கள் கவனத்தை மீறி தானியங்களில் வண்டு பிடித்து விட்டால் என்ன செய்வது? கவலை வேண்டாம். இரண்டு டீ ஸ்பூன் அளவு கடுகு எண்ணெய் எடுத்து தானியங்களில் தடவி வெயிலில் உலர வைத்து எடுக்கவும். வண்டுகள் பறந்து ஓடிவிடும்.

    MORE
    GALLERIES

  • 56

    மழை காலங்களில் வீட்டில் உள்ள தானியங்களை பாதுகாப்பது எப்படி - எளிமையான டிப்ஸ்

    பூண்டு : மஞ்சளைப் போலவே பூண்டும் ஒரு வித வாசனையை கொண்டது. தானியங்களுடன் பூண்டு பல்களை போட்டு வைத்தால் அதில் வண்டு பிடிக்காது. குறிப்பாக அரிசி மற்றும் மாவுப் பொருள்களில் இதை போட்டு வைக்கலாம். அவ்வபோது பூண்டு பல்களை மாற்றுவது அவசியமானது என்பதை மறந்து விடாதீர்கள். வெயிலில் உலர வைக்கலாம்.என்னதான் மழைக்காலம் என்றாலும் அவ்வபோது சூரியன் எட்டிப் பார்க்கும் அல்லவா? அந்த சமயங்களில் தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை வெயிலில் உலர வைத்து எடுத்துக் கொள்ளவும். அதில் உள்ள ஈரப்பதம் வெளியேறினால் வண்டுகளும் ஓடி விடும்.

    MORE
    GALLERIES

  • 66

    மழை காலங்களில் வீட்டில் உள்ள தானியங்களை பாதுகாப்பது எப்படி - எளிமையான டிப்ஸ்

    வேப்பிலைகள் : வேப்பிலைகள் ஆண்டி செப்டிக் தன்மை கொண்டது. இது பூச்சிகளையும், வண்டுகளையும் விரட்டியடிக்கும். சில வேப்பிலைகளை காய வைத்து, காற்று புகாத டப்பாக்களில் தானியங்கள் மீது போட்டு வைக்கலாம். இதேபோன்று அரிசி மற்றும் மாவுப் பொருட்கள் மீதும் வேப்பிலைகளை போட்டு வைத்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

    MORE
    GALLERIES