நாம் உண்ணும் உணவுகள் நம் உடலில் உண்டாகும் பல நோய்களை போக்க உதவும் என்பது முற்றிலும் உண்மை. ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன் கூடவே ஆரோக்கியமான உணவுமுறையும் பல நோய்களுக்கு சிகிச்சையளிப்பதோடு, பல நோய்களை தடுக்கவும் உதவுவதாக உலகெங்கிலும் உள்ள வல்லுநர்கள் கூறுகின்றனர். நம் உடலிலுள்ள கழிவுகள் மற்றும் நச்சுகளை சரியான முறையில் அகற்றுவதே சிறுநீரகத்தின் வேலையாகும். மேலும், இது இரத்த ஓட்டத்திலுள்ள அதிகப்படியான நீரை அகற்றுவதிலும் பங்கு வகிக்கிறது. சிறுநீரகத்தின் செயல்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பொட்டாசியம், சோடியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்த உணவுகளை நாம் அதிகமாக உட்கொள்வதால் சிறுநீரக நோய்கள் உருவாகுவதோடு, சிறுநீரகத்தின் செயல்பாட்டு திறனும் குறைகிறது.
அன்னாசிப்பழம் : பெரும்பாலான பழங்களில் பிரக்டோஸ் மற்றும் பொட்டாசியம் அதிக அளவில் நிறைந்திருக்கும். ஆனால் அன்னாசிப்பழம் போன்ற இனிப்பு மற்றும் சிட்ரஸ் நிறைந்த பழங்கள் சிறுநீரக நோயாளிகளுக்கு பெரிதும் நல்லது. இதிலுள்ள குறைந்த அளவு பொட்டாசியம் காரணமாக, சிறுநீரக நோய்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. இந்த பழங்களை உணவில் ஒரு சிறிய பகுதி சேர்ப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, மெட்டபாலிசம் மேம்பாட்டிற்கும் உதவுகிறது, மேலும் cell regeneration செய்யவதிலும் உதவுகிறது. அன்னாசிப்பழத்தில் ப்ரோமெலைன் (Bromelain, ) என்ற நொதி உள்ளதால் உடலில் வலி மற்றும் பாக்டீரியாவால் ஏற்படும் தொற்றுக்களை குறைக்கவும் உதவுகிறது.மேலும் இது நார்ச்சத்து, மாங்கனீஸ் மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றின் ஒரு நல்ல மூலம் எனவும் கூறலாம். இது ஒட்டுமொத்தமாக ஆரோக்கியத்தின் மேம்பாட்டிற்கு சிறந்தது.
குடை மிளகாய் : மற்ற பொருட்களுடன் ஒப்பிடும்போது, பல வண்ணங்களிலுள்ள இந்த குடை மிளகாயில் பொட்டாசியம் குறைவான அளவே உள்ளது, இது சிறுநீரக நோயாளிகளுக்கு ஒரு சிறந்த உணவாக அமைகிறது.மேலும், இந்த குடை மிளகாயில் வைட்டமின் சி உள்ளதால் இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தை தடுக்கவும் உதவுகிறது. மேலும் இதிலுள்ள வைட்டமின் ஏ, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
ஸ்ட்ராபெர்ரி : இந்த இனிப்பு மற்றும் கசப்பு தன்மையுள்ள ஸ்ட்ராபெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் (antioxidants), வைட்டமின் சி, மாங்கனீசு மற்றும் நார்ச்சத்து ஆகியவவை நிரம்பியுள்ளதால், இது ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுவதோடு, சிறுநீரக நோயாளிகளுக்கும் ஒரு சிறந்த உணவாக அமைகிறது. இதிலுள்ள குறைந்த அளவு பொட்டாசியம் , இயற்கையாகவே சிறுநீரக நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் ஸ்ட்ராபெர்ரியிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் செல் மீளுருவாக்கம் செய்ய உதவி செய்கிறது.
ஷிடாகே காளான்கள் : இது ஒரு அயல்நாட்டு வகை காளான்கள் ஆகும். இதில் பி வைட்டமின்கள், தாமிரம், மாங்கனீஸ் மற்றும் செலினியம் போன்ற தாதுக்கள் அதிகமாக காணப்படுவதால் சிறுநீரகங்கள் வேகமாக வேலை செய்ய உதவுகிறது. அதுமட்டுமின்றி, இதிலுள்ள நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து, சிறுநீரக நோயாளிகளுக்கும், ஆரோக்கியமான சிறுநீரகத்தை மேம்படுத்த டயட்டைப் மேற்கொள்பவர்களுக்கும் ஒரு நல்ல உணவாக அமையும். பொட்டாசியம் குறைவாக உள்ளதால் இந்த வகை காளான் சிறுநீரக கோளாறுகளை தடுப்பதற்கும் உதவுகிறது.
முட்டைக்கோஸ் : பைட்டோ கெமிக்கல்கள் ( Phytochemicals) அதிகம் நிரம்பிய இந்த முட்டைக்கோஸ் சிறுநீரக செயல்பாட்டிற்கு ஒரு அருமையான உணவு என்றே சொல்லலாம். இதில் நார்ச்சத்து, வைட்டமின் கே, வைட்டமின் சி மற்றும் பி போன்ற வைட்டமின்கள் இருக்கிறது. மேலும் முட்டைக்கோஸில் பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் சோடியம் குறைவான அளவே இருப்பதால் சிறுநீரக நோயாளிகளுக்கு சிறந்த உணவாக அமையும்.