ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நம்மை வளர்த்து ஆளாக்கியதில் தாய் மற்றும் தந்தை இருவருக்குமே சம பங்கு இருக்கிறது. பொதுவாக தாயின் தியாகங்கள் நம் கண்களுக்கு தெரியும் அளவிற்கு தந்தை செய்யும் தியாகங்கள் நமக்கு தெரியாமல் போகின்றன.நம்மை வளர்த்ததில் தந்தையின் பங்கு என்னவென்பதை உணர்ந்து அவரின் தியாகங்களை போற்ற கிடைத்த நல்ல சந்தர்ப்பமாக இருக்கிறது தந்தையர் தினம். இந்த நாள் இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிறு கொண்டாப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022-ஆம் ஆண்டு தந்தையர் தினம் ஜூன் 19 கொண்டாடப்பட உள்ளது.
சில நேரங்களில் நம் அன்பை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் வாழ்த்து அட்டைகள் முதல் சில நல்ல பரிசுகள் வரை தந்தை மீதான நம் அன்பை வெளிப்படுத்த பல அற்புதமான வழிகள் உள்ளன. தந்தையர் தினத்தில் உங்கள் அப்பாவை அசத்த உதவும் சில யோசனைகளை இங்கே நாம் பார்க்கலாம். உங்கள் அப்பாவை ஸ்பெஷலாக உணர வைக்க சில கிஃப்ட் ஐடியாக்கள் இங்கே..'
ஹேண்ட் மேட் கிரீட்டிங் கார்ட்: கடைகளில் விற்கும் ஒரு கிரீட்டிங் கார்டை வாங்குவதும், அதை உங்கள் தந்தைக்கு பரிசளிப்பதும் எளிதான ஒன்று என்றாலும், தனிப்பட்ட முறையில் வித்தியாசமாக தயாரிக்கப்பட்ட ஒன்று மிக பெரிய முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். உங்கள் தந்தை மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்த உங்கள் கைகளால் ஒரு கிரீட்டிங் கார்டை தயார் செய்வது உங்கள் பரிசை மிகவும் விலைமதிப்பற்றதாக மாற்றும். உங்களால் அவர் மீதான அன்பை வாய்மொழியாக வெளிப்படுத்த முடியாவிட்டால், உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த ஒரு எளிய கிரீட்டிங் கார்டு போதுமானது. இது நிச்சயமாக அவருக்கு சிறப்பு உணர்வை ஏற்படுத்தும்.
தந்தைக்கு பிடித்த உணவு: நமது அன்றாட வாழ்வில் பெரும்பாலான நேரங்களில் நாம் அனைவருமே மிகவும் பிஸியாக இருக்கிறோம். நமது குடும்பத்தினருடன் குறிப்பாக தந்தையுடன் பேசவோ அல்லது நிறைய நேரத்தை செலவிடவோ கூட நமக்கு நேரம் கிடைப்பதில்லை. எனவே உங்கள் தந்தைக்கு மிகவும் பிடித்த உணவுகளை உங்கள் கைகளால் வீட்டில் நீங்களே சமைத்து கொடுத்து அவருக்கு சர்ப்ரைஸ் தரலாம். உங்களுக்கு சமைக்க தெரியாது என்றால் அவருக்கு மிகவும் பிடித்தமான உணவுகளை ஹோட்டல்களுக்கு கூட்டி சென்றோ அல்லது ஆன்லைனில் ஆர்டர் செய்தோ அவரை சுவைக்க வைக்கலாம்.
ஸ்மார்ட் வாட்ச்:உங்களது தந்தையின் மீதான அன்பை நீங்கள் அவருக்கு ஒரு ஸ்மார்ட் வாட்ச் வாங்கி கொடுத்தும் வெளிப்படுத்தலாம். மார்க்கெட்டில் கிடைக்கும் முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் வாட்ச்கள் பல அற்புதமான அம்சங்களுடன் வருகிறது. உடற்தகுதி மற்றும் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் அம்சங்களுடன் வரும் ஸ்மார்ட் வாட்ச்கள் உங்கள் தந்தை மீது நீங்கள் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளீர்கள் என்பதை அவருக்கு வெளிப்படுத்தும்.