இந்த ஆண்டின் தந்தையர் தினம் வருவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளது. உங்களில் பலர் உங்கள் அப்பாவிற்கு ஒரு அற்புதமான பரிசை கொடுக்க வேண்டும் என்று தேடி கொண்டிருப்பீர்கள். இதை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம், உங்கள் அப்பா மீது நீங்கள் அதிக அக்கறை கொண்டுள்ளீர்கள் என்பதை அவருக்கு உணர்த்தும் வகையில் சில அட்டகாசமான பரிசுகளை இந்த பதிவில் சொல்ல போகிறோம். வரவிருக்கும் தந்தையர் தினத்தில் உங்கள் அப்பாவிற்கு இந்த கேட்ஜெட் பரிசுகளை கொடுத்து அசத்திடுங்கள்!
சோனோஸ் ரோம் : சோனோஸ் ரோம் போன்ற போர்ட்டபிள் ஸ்பீக்கர் இந்த கோடை காலத்திற்கு இதமான ஒரு பரிசாகும். இந்த ஸ்பீக்கர் சிறந்த ஒலியுடன் IP67 தூசி மற்றும் வாட்டர் ப்ரூப் வசதியை வழங்குகிறது. இது சிறந்த புளூடூத் ஸ்பீக்கர்களில் ஒன்றாகும் மற்றும் மற்ற சோனோஸ் ஸ்பீக்கர்களுடன் நன்றாக ஒருங்கிணைக்கவும் செய்கிறது. இது கூகுள் அசிஸ்டண்ட், அமேசான் அலெக்சா மற்றும் ஆப்பிளின் ஏர்பிளே 2 ஆகியவற்றிற்கான ஆதரவுகளையும் வழங்குகிறது. இதை அவசியம் உங்கள் அப்பாவிற்கு பரிசாக தரலாம்.
கின்டெல் பேப்பர் ஒயிட் (2021) : உங்கள் அப்பாவுக்கு புத்தகங்கள் படிப்பதில் விருப்பம் இருந்தால், அமேசானின் புதிய கின்டெல் பேப்பர் ஒயிட் புராடக்ட்டை பரிசாக வழங்கலாம். இது, 6.8-இன்ச் கொண்ட இ-இங்க் டிஸ்பிளே வசதியுள்ள சாதனமாகும். இரவுநேரத்தில் வாசிப்புக்கும் போது அதற்கேற்ப வண்ணங்களை சரிசெய்து கொள்ளும். மேலும் இதில் வேகமான செயலி, கூடுதல் பேட்டரி ஆயுள், IPX8 வாட்டர் ப்ரூப் மற்றும் USB-C போர்ட் ஆகிய வசதிகளையும் கொண்டுள்ளது. இதன் விலை ரூ. 10,800 முதல் தொடங்குகிறது.
ஆப்பிள் வாட்ச் எஸ்இ : உங்கள் அப்பாவுக்காக ஒரு சிறந்த ஸ்மார்ட்வாட்ச் வாங்க திட்டமிட்டால், ஆப்பிள் வாட்ச் SE சரியான தேர்வாக இருக்கும். குறிப்பாக ஆரோக்கியம் மற்றும் ஃபிட்னெஸ்-ஐ மையப்படுத்திய அப்பாக்களுக்கு இது அற்புதமான பரிசாக இருக்கும். இது அவர்களுடைய தினசரி ஃபிட்னஸ் இலக்குகளை கண்காணிக்க உதவும். மேலும் இது ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 போன்ற வடிவமைப்பை கொண்டுள்ளது. இதில் ஆப்பிள் பெ மற்றும் கீழே விழும்பும் போது அறிய கூடிய வசதியும் உள்ளது. சிறந்த ஜிபிஎஸ் வசதி, 41mm வெர்ஷன் ஆகியவற்றையும் இதில் பெறலாம். நீங்கள் அமேசான் பிரைம் உறுப்பினராக இருந்தால், ரூ.17,000-க்கு குறைவான விலையில் இதை வாங்க முடியும்.
அமேசான் எக்கோ ஷோ 8 (இரண்டாம் தலைமுறை) : அமேசானின் தற்போதைய எக்கோ புராடக்ட் வரிசையில் உள்ள சிறந்த புராடக்ட் இது. மிட்-சைஸ்டு ஸ்மார்ட் டிஸ்ப்ளே வானிலை, செய்திகள், காலெண்டர்கள், மளிகைப் பட்டியல்கள் மற்றும் பல வசதிகளை இது வழங்குகிறது. இது உங்கள் ஸ்மார்ட் ஹோம் சாதனங்களைக் கட்டுப்படுத்தவும், ஸ்ட்ரீமிங் வீடியோவைப் பார்க்கவும், இசையைக் கேட்கவும் பயன்படுத்தப்படலாம். பெஸ்ட் பை மற்றும் அமேசான் தளத்தில் இதை இலவச ஷிப்பிங் வசதியுடன் ரூ.7000-க்கு வாங்கலாம்.
போஸ் இயர்பட்ஸ் : சிறந்த சவுண்ட் எபெக்ட் மற்றும் இரைச்சல் கேன்சலேஷன் அம்சத்துடன் கூடிய ஒரு நல்ல இயர் பட்ஸை உங்களின் அப்பாவிற்கு பரிசளிக்க விரும்பினால் அதற்கு, போஸ் இயர்பட்ஸ் (Bose QuietComfort Earbuds) சிறந்த தேர்வாகும். குறிப்பாக இசை மற்றும் பாட்காஸ்ட்களைக் கேட்பதில் உங்கள் அப்பாவிற்கு அதிக விருப்பம் இருந்தால், இந்த இயர்பட்ஸை வாங்கி பரிசளியுங்கள். இது வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் வருகிறது. பெஸ்ட் பை மற்றும் அமேசான் தளத்தில் இதை ரூ.15,000-க்குள் வாங்கலாம்.