ஆஃப்-பீட் ஆடைளை வாங்கி அணிவது உங்களை உற்சகமாக வைத்திருக்கும் என்றாலும் சீசனுக்கு தகுந்தாற் போல உடைகளை அணிவது தான் நல்ல தேர்வாக இருக்கும். குறிப்பாக கோடை காலத்தில் என்ன ஆடைகளை அணிய வேண்டும் என்பதை அறிவது முக்கியம். பெண்களிடம் கோடைக்காலத்தில் கட்டாயம் இருக்க வேண்டிய சில கம்ஃபர்ட்டான அதே சமயம் ஸ்டைலிஷான ஆடைகள் பற்றி இங்கே பார்க்கலாம்...
மினி ஸ்கர்ட்ஸ்.. சில ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மினி ஸ்கர்ட்கள் மீண்டும் இந்த ஆண்டு சம்மர் ஃபேஷன் ஃபேவரிட்களாக தோன்றுகின்றன. இந்த கோடையில் ஃபேஷன் பிராண்டுகளால் வழங்கப்படும் மினி ஸ்கர்ட்களின் ஸ்டைல்களாக ruched, denim, pleated, flared, asymmetrical உள்ளிட்டவை இருக்கின்றன. இந்த மினி ஸ்கர்ட்களை டே டூ நைட் உடைகளாக கூட பயன்படுத்தி கொள்ளலாம். ஒவ்வொரு விதமான மினி ஸ்கர்ட் ஸ்டைலும் ட்ரெண்டிங்காகும். உங்கள் விருப்பப்படி பாக்ஸி அல்லது ஃபிட்டட் டாப்ஸை மினி ஸ்கர்ட்டுடன் அணிந்து ஸ்டைலாக தோன்றலாம்.
ப்ரீஸி மேக்ஸி டிரெஸ் : லாங் டிரெஸ்கள் நல்ல ஃபேஷன் பீஸ்களில் ஒன்றாகும். ஆபிஸ், பார்ட்டி, பீச் என எந்த இடத்திற்கும் செட்டாக கூடியது. மேக்ஸி டிரெஸ்கள் நன்கு அறியப்பட்டவை என்றாலும் இந்த கோடையில் ஒரு பிரபல தேர்வாக உள்ளது. எப்போதுமே வெள்ளை நிற மேக்ஸி நன்கு கவர கூடியதாக இருக்கும். சம்பிரதாயமான நிகழ்வுகளுக்கு செல்லும் போது விருப்பமான ஹீல்ஸ்களை அணிந்து, இயர் ரிங்ஸ் மற்றும் ஷார்ட் ஹேண்ட் பேக்குடன் சென்றால் நன்றாக இருக்கும். கேஷுவல் அவுட்டிங் என்றால் ஹூப்ஸ் மற்றும் ஃபிளாட்டான சாண்டில்ஸை அணிந்து, ஒரு கிராஸ்பாடி பேக் அணிந்து செல்லுங்கள்.
ஷார்ட்ஸ்.. ஷார்ட்ஸ்களுக்கு அறிமுகமே தேவையில்லை. கோடைகாலத்தில் இருபாலருக்குமே சிறந்த தேர்வாக இருக்கின்றது. விருப்பமுள்ளவர்கள் பெர்முடா ஸ்டைலை தேர்வு செய்யலாம், மற்றவர்கள் ஹாட் ஷார்ட்ஸை அணிய முயற்சி செய்யலாம். கேஷுவலான தோற்றத்திற்கு, ஷார்ட்ஸுடன் தளர்வான டீ ஷர்டை அணியலாம். ஷார்ட்ஸை எண்ணற்ற டாப்ஸ், டீஸ், கிராப்டு டீஸ் என ஸ்டைலாக மாற்றலாம். ஷார்ட்ஸ் அணிந்தால் ஸ்னீக்கர்களை காலில் அணிவது நன்றாக இருக்கும்.
கோ-ஆர்ட் செட்ஸ் (Co-ord Sets): இது டூ-பீஸ் செட்ஸ் என்றும் குறிப்பிடப்படுகிறது. co-ord Sets என்பவை மேட்சிங் கலர் ப்ரிண்ட்ஸ் அல்லது ஃபேப்ரிக்ஸால் செய்யப்பட்ட ஒரு ஆடை வகை. இதன் வெரைட்டியை பொறுத்து ஃபேமிலி மீட்டிங் முதல் ஜிம் வரை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் அணிந்து செல்லலாம். இவற்றை ஸ்ட்ராப்பி ஹீல்ஸ், ஃபிளிப் ஃப்ளாப்ஸ், சிக் ஸ்லைடர்கள் மற்றும் ஸ்னீக்கர்கள் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட காலணிகளுடன் அணிய பரிந்துரைக்கப்படுக்கிறது.
குர்தாக்கள்: வெப்பத்திலிருந்து தப்பிக்க எளிதான வழி குர்தா அணிவது. காலை முதல் மாலை வரை வேலை செய்ய கூடியவராக நீங்கள் இருப்பின் லைட்டான குர்தாவை (light kurta) அணிய பரிந்துரைக்கிறோம். அதிகப்பட்ச வசதிக்காக உங்கள் கோடைக்கால குர்தாவை மேட்சிங் பேன்ட் அல்லது ஆங்க்கிள்-லென்த் டைட்ஸுடன் சேர்த்து அணியலாம்.