டென்னிம் ஜாக்கெட், பேண்ட்டுகளை ஒரே மாதிரி அணிந்துகொள்ள போரடிக்குதா? இப்படி வித்தியாசமா ட்ரை பண்ணுங்க..
டெனிம் எந்த வகையான ஸ்டைலுக்கும் பொருந்தும் என்பதால் அதை நீங்கள் எந்த இடத்திற்கும் தனித்துவமான தோற்றத்தில் அணிந்து செல்லலாம்.
Web Desk | February 10, 2021, 2:40 PM IST
1/ 9
உங்களுடைய உடை நன்றாக இருந்தால்தான் உங்களுக்கான அங்கீகாரம் எல்லா இடத்திலும் கிடைக்கும். அந்த வகையில் உங்களிடம் இருக்கும் டெனிம் ஜாக்கெட்டை எப்படியெல்லாம் மாற்றலாம் என்றும் அதன் மூலம் பர்சனாலிட்டிய எப்படியெல்லாம் டெவெலப் பண்ணலாம் என்று நீங்கள் தான் யோசிக்க வேண்டும். டெனிம் என்பது எப்போதும் அனைவருக்கும் பிடித்த அலமாரி ஸ்டேபிள்ஸின் ஒரு பகுதியாகும். சீசன் எதுவாக இருந்தாலும், மக்கள் ஆண்டு முழுவதும் டெனிமை அணிகிறார்கள்.
2/ 9
சிலர் அதை 24 மணி நேரம் அணிந்துகொண்டு மிகவும் வசதியாக இருக்கிறார்கள். டெனிமை நீங்கள் அதிகம் அணிவதால், உங்களுக்கு அதன் பிராண்ட், தரம் மற்றும் நடை பற்றி பலவும் தெரிந்திருக்கும். ஆனால் பலருக்கும் இருக்கும் சந்தேகம் என்னவென்றால் டெனிமை எப்படி அட்டகாசமாக அணிவது என்றுதான். சரி வாருங்கள் இந்த உள்ளடக்கத்தில் அதைப்பற்றி காண்போம்...
3/ 9
உங்கள் டெனிமை நீங்களே செய்யுங்கள்: நேரம் எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்காது, சில நேரம் உங்க கிட்ட காசு இருக்கும் சில நேரம் இருக்காது. கடன்களும் கடமைகளும் அதிகமா இருந்தா மாசத்துல முதல் 10 நாள் வரை அக்கவுண்ட்ல காசு இருக்காது. இப்படி இருந்தால் எங்கிருந்து புது டெனிமை வாங்கறது. இது போன்ற கடினமான நேரத்துல இங்கே எப்பயோ வாங்கி வைத்திருக்கிற டெனிம்கள் உங்கள் அலமாரியில் இருக்கும். அதை தேடி எடுத்து உங்களுக்கு செட் ஆகிறத பயன்படுத்தலாம். அதில் சிலவற்றை நீங்கள் ஆல்டர் செய்தும் பயன்படுத்தலாம். புதிய டெனிமை வாங்க பணம் இல்லை என்றால், உங்கள் அறிவை பயன்படுத்துவதற்கான சரியான நேரம் இது. உங்கள் பழைய ஜீன்ஸை ஷார்ட்ஸாக எளிதாக மாற்றலாம். உங்கள் டெனிமை புதிதாக்க அதில் கொஞ்சம் சாயங்கள்/ப்ளீச், மற்றும் கூடுதல் டிசைனை சேர்க்கலாம்.
4/ 9
டபுள்-டெனிம் : உங்களுக்கு பிடித்த ஒரு ஜோடி டெனிமை, இணைத்து டெனிம் டோன் டாப் அல்லது சட்டையை உருவாக்குங்கள். மேலயும் டெனிம் கீழயும் டெனிம் என்று நினைக்க வேண்டாம். ஏனெனில் இந்த போக்கு ஒருபோதும் ஓல்ட் ஸ்டைலாக இருக்காது. இதை இன்னும் அட்டகாசமாக்க உங்கள் உடையுடன் ஒரு பெல்ட்டை அணியலாம்.
5/ 9
அழகிற்கு அழகை சேர்க்கவும் : புதிய டெனிம்களை வாங்குவதற்கு அதிக செலவாகும். ஆனால் டெனிம் உடனான மற்ற பொருட்களை வாங்க கொஞ்ச காசு இருந்தாலே போதும். அந்த வகையில் உங்களிடம் எந்த கலர் டிரஸ் அதிகம் இருக்கோ அந்த கலர்ல டிரஸ் உடனான மற்ற பொருட்கள் பொருட்களை வாங்குவது முக்கியம். குறிப்பாக ஆண்களுக்கு வாட்ச், பெல்ட், பர்ஸ் அல்லது காலணிகள் பெண்களுக்கு கவரிங் நகைகள், மணிகள், செயின்கள், சன் கிளாஸ்கள், தொப்பிகள் போன்றவற்றை நீங்க வாங்கலாம். இது உங்கள் பட்ஜெட்டை காலியாகாம பார்த்துக்கொள்ளும். மேலும் உங்கள் டெனிமுடன் சூப்பராக செட் ஆகும். உங்கள் மீது பிறர் வைத்திருக்கும் உடை பற்றிய அபிப்பிராயத்தை மாற்ற ஒரு புதிய தோற்றத்தை வெளிக்கொணர உங்கள் ஜீன்ஸ் மீது ஒரு மேலுமொரு ஆடை அல்லது உடையை அணியலாம். மேட்ச்சிங் இல்லாத ட்ரெஸ்கள் தான் இப்போது ட்ரெண்டாக உள்ளது.
6/ 9
சட்டையை வெளியே விடுங்கள் : உங்கள் பாய்பிரண்ட் ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் உங்களின் லுக்கை சூப்பராக மாற்றும். சட்டையின் வடிவம் மற்றும் பொருத்தம் உங்கள் ஒட்டுமொத்த தோற்றத்தின் முடிவை முற்றிலும் மாற்றிவிடும். அரைகுறை ஷர்ட் நிச்சயம் நல்ல லுக்கைத் தரும். இந்த ஷர்ட்டுடன் உங்கள் நடை ரொம்ப முக்கியம் இல்லையென்றால் கொஞ்சம் சொதப்பல்தான். எனவே நீங்கள் ஷர்ட்டுடன் உங்கள் நடையை நன்றாக மாற்றுங்கள்.
7/ 9
உங்கள் உடையின்மீது கூடுதலாக ஒரு துப்பட்டா பயன்படுத்துங்கள்: டெனிம் யோசனைகள் உங்களுக்கு உதவி செய்யவில்லை என்று நீங்கள் நினைத்தால் உங்களை கூலாக காண்பிக்க ஒரு துப்பட்டா அணியலாம். துப்பட்டா உங்கள் கழுத்தில் கட்டலாம், உங்கள் தலைமுடியைச் சுற்றி கட்டலாம், உங்கள் ஹாண்ட் பேக்கை சுற்றி கட்டலாம் அல்லது உங்கள் பெல்ட் சுழல்கள் வழியாகவும் நுழைக்கலாம். கஷ்டப்பட்டு பலர் சொல்வதை செய்வதை விட இந்த எளிய முறையை ட்ரை செய்யலாம்.
8/ 9
அதிகமான மேலாடையை நீங்கள் வாங்குவதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்தலாம். அதற்காக பேண்டோ அல்லது ஜீன்ஸோ வேண்டாம் என்று சொல்லவில்லை. நம்மை பார்க்கும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் நம் மேலாடைகளை மட்டும்தான் பார்க்கிறார்கள். உதாரணத்திற்கு ஒருவர் ஜீன்ஸ் அணிந்திருந்தால் அதிக கண்டுகொள்ளாமல் பலரும் மேலாடையைத்தான் கவனிப்பார்கள். இதற்கு உங்களிடம் இருக்கும் துப்பட்டா அணியலாம் அல்லது டெனிமிர்க்கு ஏற்ற துப்பட்டா நீங்களே உருவாக்கலாம்.
9/ 9
சில நேரங்களில் உங்களின் ஐடியா தான் உங்களை வேற லெவலில் பீல் பண்ண வைக்கும். எனவே இப்பவே உங்களிடம் இருக்கும் பழைய டெனிமை எப்படியெல்லாம் மாற்றலாம் என்பதை யோசியுங்கள். நீங்க எந்த இடத்துக்கு போறீங்களோ அந்த இடத்தோட தன்மைக்கு தகுந்த மாதிரி உங்களுடைய உடைகள் இருக்க வேண்டும். அதுக்கு மேற்சொன்ன டிப்ஸ்கள் நிச்சயம் உதவும் என நம்புகிறோம்.