சரியான தோற்றத்தை பெற மேலாடைகள் மட்டும் முக்கியம் அல்ல, உள்ளாடைகளும் முக்கியம். நாம் அணையும் உள்ளாடைதான் நமக்கு கன கச்சிதமான தோற்றத்தை கொடுக்கும். ஒவ்வொரு பெண்ணும் சிரமப்படும் விஷயங்களில் ஒன்று, தங்களுக்கான சரியான ப்ராவை எவ்வாறு தேர்வு செய்வது என்பது தான். ப்ரா தேர்வு செய்வதில் இன்னும் உங்களுக்கு குழப்பம் தீரவில்லை என்றால் இந்த தொகுப்பு உங்களுக்கானது. உங்களுக்கான சரியான சைஸ் ப்ராவை எவ்வாறு தேர்வு செய்வது என வனிதா விஜயகுமார் கொடுக்கும் டிப்ஸ் பற்றி இங்கே பார்க்கலாம்.
வனிதா விஜயகுமார் யூடியூப் சேனலை சுமார் 777 ஆயிரம் பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். மேலும், இதில், சமையல் குறிப்பு மட்டும் அல்லாமல், பேஷன் டிப்ஸ், மேக்கப் டிப்ஸ் என பெண்களுக்கான அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில், ஒரு வீடியோவில் பெண்கள் தங்களுக்கு பொருத்தமான சரியான சைஸ் ப்ராவை எப்படி தேர்வு செய்வது என்ற உதவிக்குறிப்பை வழங்கி உள்ளார்.
சரியான சைஸ்யை எப்படி கண்டறிவது? : உங்களுக்கான சரியான ப்ரா சைஸ் தெரியவில்லை என்றால், தயவு செய்து ஒரு கடைக்கு சென்று சரியான அளவை தெரிந்து கொள்ளுங்கள். இல்லையெனில், கடைகளில் சென்று ட்ரையல் செய்யலாம். அப்போது, உங்களுக்கு எது ஃபிட்டாக உள்ளது என தெரியும். அத்துடன் உங்களின் அளவும் உங்களுக்கு தெரியும்.