நாம் அணிய கூடிய ஆடைக்கேற்ற நகைகளை தேர்வு செய்தால் தான், முழுமையான அழகை பெற முடியும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான நகைகள் மீது அதிகம் விருப்பம் இருக்கும். சிலருக்கு தங்க நகைகள் மீதும், சிலருக்கும் வைர நகைகள் மீதும், சிலருக்கு கவரிங் நகைகள் மீதும் அதிக ஈடுபாடு இருக்கும். அதே போன்று இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்றாற்போல சில்வர் முலாம் பூசிய நகைகள் அதாவது ஆக்ஸிடைஸ்டு ஜுவல்லரி மீதும் அதிக விருப்பம் உள்ளது.
குறிப்பாக இளம் வயது பெண்கள் முதல் வயதானோர் வரை இந்த வகை நகைகளை அணிய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆனால், இதை எந்த மாதிரியான ஆடையுடன் அணிந்தால் சிறப்பாக இருக்கும் என்பது பற்றி பலரும் அறிந்திருப்பது கிடையாது. இந்த பதிவில் சில்வர் முலாம் பூசிய நகைகளை எந்தெந்த ஆடைகளுடன் அணிந்தால் சிறப்பாக இருக்கும் என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.
அலுவலகங்களுக்கு: ஒவ்வொரு பெண்ணும் தனக்கே உரித்தான நகைகளை அறிந்து கொள்ள முடியும். ஆனால், அதை எந்த ஆடையுடன் அணிவது என்பதில் சந்தேகம் இருக்கும். பொதுவாக இது போன்ற சில்வர் முலாம் பூசிய நகைகளை அலுவலகம் செல்வோர் அணிவது மிக அழகாக எடுத்து காட்டும். சில்வர் முலாம் பூசிய சிறிய ஸ்டட் காதணிகள், நெக்பீஸ்கள் மற்றும் விரல் மோதிரங்கள், வெள்ளை சட்டை மற்றும் பேண்ட் ஆகியவற்றை அணியுங்கள். இது உங்களுக்கு சிறப்பான தோற்றத்தை தரக்கூடும்.
பாரம்பரிய ஆடைகள் : பலரும் பாரம்பரிய ஆடைகளுக்கு தங்கள், வைரம் போன்ற நகைகளையே பெரும்பாலும் அணிவார்கள். ஆனால், நீங்கள் சில்வர் முலாம் பூசிய அழகிய நகைகளை அணியும் போது தணித்து நிற்பீர்கள். சில்வர் மூலம் பூசிய ஜும்காக்கள் அல்லது தொங்கும் காதணிகள் போன்றவற்றை பாரம்பரிய உடையுடன் அணிந்தால் மிக அற்புதமாக இருக்கும். மேலும் இதை குர்திகள் மற்றும் புடவைகளுடனும் அணியலாம்.
ட்ரெண்டிங் டச் : நட்சத்திரங்கள், சின்னஞ்சிறு மணிகள், குண்டுகள் அல்லது பாரம்பரிய காதணிகள் போன்ற நீங்கள் விரும்பும் எல்லாவற்றையும் அணியலாம். ஆனால், இவற்றில் சில்வர் முலாம் பூசிய அமைப்பு இருக்க வேண்டும். இது அனைவரின் கவனத்தையும் ஈர்க்க கூடியதாக இருக்கும். சிறந்த தோற்றத்திற்கு நீளமான பாவாடைகளுடன் கூடிய ஆடைகளுடன் சில்வர் முலாம் பூசிய நகைகள் அணியலாம். இதற்கு உயர் போனிடெயில் போடலாம் மற்றும் டை-அப் ஷர்ட்களை அணியுங்கள்.
திருமண விசேஷங்கள் :மிகவும் பாரம்பரியமான திருமண விசேஷங்களுக்கு இது போன்ற சில்வர் முலாம் பூசிய நகைகளை அணிவது மிக அழகாக இருக்கும். இது உங்கள் தோற்றத்தை சிறப்பாக எடுத்துக்கொடுக்கும். நீங்கள் புடவை, லெஹங்கா அல்லது நீண்ட கவுன் ஆகியவற்றுடன் இந்த வகை நகைகளை அணியலாம். மேலும் இந்தோ-வெஸ்டர்ன் ஆடையுடன் அணியும் போது, இது உங்களுக்கு பிரமிக்க வைக்கும் தோற்றத்தையும் தருகிறது.