ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » தங்க நகைகளை எப்போதும் புதுசு போல் பராமரிக்கனுமா..? இந்த டிப்ஸ் உங்களுக்காக...

தங்க நகைகளை எப்போதும் புதுசு போல் பராமரிக்கனுமா..? இந்த டிப்ஸ் உங்களுக்காக...

எப்போதும் பூட்டியே இருக்கும் தங்க நகைகள் கூட நிறம் மாறக்கூடும். அடிக்கடி அணியாவிட்டாலும் ஏன் இப்படி நிறம் மாறுகிறது என்று சந்தேகம் இருக்கலாம். அதற்கு பராமரிப்பின்மையும் காரணமாக இருக்கலாம்.

 • 110

  தங்க நகைகளை எப்போதும் புதுசு போல் பராமரிக்கனுமா..? இந்த டிப்ஸ் உங்களுக்காக...

  தங்கத்தின் மீது ஆசை இல்லாதவர்களை கூட இந்த நகைகள் ஈர்த்துவிடும். அதனால்தான் அதன் மதிப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. அதேசமயம் மக்களுக்கும் அதன் மீதான் காதல் தீருவதில்லை. அப்படி நீங்களும் தங்க நகை பிரியர் எனில் நிச்சயம் வீட்டில் விலைமதிப்பற்ற தங்க நகைகளை சேமித்து வைத்திருப்பீர்கள். பெரும்பாலும் அவற்றை முக்கிய நிகழ்வுகளுக்கு மட்டுமே அணிந்துகொண்டு செல்வீர்கள்.

  MORE
  GALLERIES

 • 210

  தங்க நகைகளை எப்போதும் புதுசு போல் பராமரிக்கனுமா..? இந்த டிப்ஸ் உங்களுக்காக...

  இதனால் எப்போதும் பூட்டியே இருக்கும் தங்க நகைகள் கூட நிறம் மாறக்கூடும். அடிக்கடி அணியாவிட்டாலும் ஏன் இப்படி நிறம் மாறுகிறது என்று சந்தேகம் இருக்கலாம். அதற்கு பராமரிப்பின்மையும் காரணமாக இருக்கலாம். எனவே தங்க நகைகளை எப்போதும் புதிது போல் பளபளப்பாக பராமரிக்க இந்த் டிப்ஸுகளை பின்பற்றுங்கள்.

  MORE
  GALLERIES

 • 310

  தங்க நகைகளை எப்போதும் புதுசு போல் பராமரிக்கனுமா..? இந்த டிப்ஸ் உங்களுக்காக...

  நகைகளை சுத்தம் செய்வது அவசியம் : வெளியே சென்று வந்த பின் நகைகளை கழற்றி வைக்கும்போது வியர்வை, தூசி, எண்ணெய் பிசுக்குடன் அப்படியே பாக்ஸில் போட்டு மூடி வைப்பது தவறு. அதை கழற்றியதும் மைல்ட் ஷாம்பூ கலந்த வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவி எடுக்க வேண்டும். பின் அதன் ஈரம் நன்கு காய்ந்ததும் பாக்ஸில் போட்டு வைக்க வேண்டும். இதை சரியாக செய்தால் நகைகள் எப்போதும் புதிது போல் மின்னும்.

  MORE
  GALLERIES

 • 410

  தங்க நகைகளை எப்போதும் புதுசு போல் பராமரிக்கனுமா..? இந்த டிப்ஸ் உங்களுக்காக...

  பத்திரப்படுத்துதல் அவசியம் : நிறைய நகைகள் இருந்தாலும் அதை ஒரே பாக்ஸில் குவித்து வைப்பது தவறு. அது சிக்கிக்கொண்டு உடையக் கூடும். குறிப்பாக கற்கள் பதித்த நகைகள் எனில் உராய்வு ஏற்பட்டு நிறம் மங்கலாம் அல்லது உதிர்ந்துவிடலாம். எனவே மோதிரம், நெக்லஸ், ஹாரம் என எந்த நகையாக இருந்தாலும் அவற்றை அதற்குறிய பாக்ஸில் தனித்தனியாக போட்டு வைக்க வேண்டும். இல்லையெனில் கடையில் கொடுத்த பாக்ஸிலேயே போட்டு வைத்து பராமரிக்கலாம்.

  MORE
  GALLERIES

 • 510

  தங்க நகைகளை எப்போதும் புதுசு போல் பராமரிக்கனுமா..? இந்த டிப்ஸ் உங்களுக்காக...

  குளிக்கும் முன் கழற்றி வைக்கவும் : சிலர் கழுத்து நிறைய நகைகளை அணிந்தபடி குளிக்க செல்வார்கள். இப்படி செய்வதும் நகைகளை சேதப்படுத்தும். அதோடு நீங்கள் பயன்படுத்தும் சோப் அல்லது பாடி வாஷ் கெமிக்கல் நகையை பாதிக்கலாம். எனவே ஹெவியான காதணி, கழுத்தணிகளை கழற்றி வைத்த பின் குளிக்க செல்வது நல்லது.

  MORE
  GALLERIES

 • 610

  தங்க நகைகளை எப்போதும் புதுசு போல் பராமரிக்கனுமா..? இந்த டிப்ஸ் உங்களுக்காக...

  கரடுமுரடாக கிளீன் செய்ய கூடாது : நகைகளை சுத்தம் செய்ய பேக்கிங் சோடா, டூத் பேஸ்ட், டிஷ் வாஷ் சோப் என பயன்படுத்துவது மிகவும் தவறான செயல். அதோடு அதன் அழுக்குகளை எடுக்க கரடு முரடான பிரஷ் கொண்டு பயன்படுத்துவதும் தவறு. இது கீரலை உண்டாக்கி நகையை சேதப்படுத்தும். கற்கள் பதித்த நகைகள் எனில் அவை சீக்கிரமே சேதமடையும். எனவே நகைகளை சுத்தம் செய்ய கண்டிப்பாக இந்த விஷயங்களை பின்பற்றுங்கள்.

  MORE
  GALLERIES

 • 710

  தங்க நகைகளை எப்போதும் புதுசு போல் பராமரிக்கனுமா..? இந்த டிப்ஸ் உங்களுக்காக...

  வாசனை திரவியங்களை ஸ்பிரே செய்யாதீர்கள் : வெளியே செல்லும்போது வாசனை திரவியங்களை பயன்படுத்துவது பலருடைய பழக்கம். அப்படி ஸ்பிரே செய்யும்போது நகைகள் மீது படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவை நகை மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம். வாசனை திரவியங்கள் மட்டுமன்றி பாடி லோஷன், கிரீம்கள் தடவுவதும் நகைகள் மீது பட்டால் பாதிப்புதான். எனவே வாசனை திரவியத்தை அடித்துகொண்ட பின் நகைகளை அணியுங்கள்.

  MORE
  GALLERIES

 • 810

  தங்க நகைகளை எப்போதும் புதுசு போல் பராமரிக்கனுமா..? இந்த டிப்ஸ் உங்களுக்காக...

  அடிக்கடி எடுத்து பார்க்கவும் : எப்போதாவதுதான் நகைகள் அணிகிறீர்கள் எனில் அடிக்கடி எடுத்து பார்த்து வைப்பது நல்லது. பூட்டியே வைத்திருந்தாலும் கலர் மங்கும். எனவே அவ்வப்போது எடுத்து துடைத்துவிட்டு வைப்பது நல்லது.

  MORE
  GALLERIES

 • 910

  தங்க நகைகளை எப்போதும் புதுசு போல் பராமரிக்கனுமா..? இந்த டிப்ஸ் உங்களுக்காக...

  பாலிஷ் போடுங்கள் : 2 அல்லது 3 வருடங்களுக்கு ஒரு முறை நகைகளுக்கு பாலிஷ் போட்டு வையுங்கள். இதனால் நகைகள் எத்தனை வருடங்கள் ஆனாலும் புதிதுபோல் மின்னும்.

  MORE
  GALLERIES

 • 1010

  தங்க நகைகளை எப்போதும் புதுசு போல் பராமரிக்கனுமா..? இந்த டிப்ஸ் உங்களுக்காக...

  உடற்பயிற்சியின் போது நகைகளை தவிர்க்கவும் : உடற்பயிற்சியின்போது வியர்வை அதிகமாக வரும். வியர்வை காரணமாக நகை பாழாகலாம். எனவே உடற்பயிற்சியின்போது நகைகளை அணியாதீர்கள்.

  MORE
  GALLERIES