சிறு வயதிலேயே முடி நரைப்பது தற்போதைய வாழ்க்கை முறையில் அதிகரித்து வருகிறது. சாதாரணமாக இன்று பல இளைஞர்களுக்கும் வெள்ளை முடிகள் தோன்றுகிறது. பலருக்கு இது போன்று முடி நரைப்பது முதிர்ச்சியின் அடையாளமாகக் கருதப்படலாம், ஆனால் இது உங்கள் உடல் போதுமான மெலனினை உருவாக்கவில்லை என்பதையும் குறிக்கிறது. நரை முடியானது பதின்ம பருவத்தில் உருவாகுவது பலருக்கு சங்கடத்தை தரும்.
தைராய்டு சுரப்பியில் ஏற்படும் அழுத்தம், வைட்டமின் குறைபாடு, மரபியல் பிரச்சனைகள், புகை பிடித்தல், சில ஆட்டோ இம்மியூன் நோய்கள் மற்றும் இரத்த சோகை போன்ற பல்வேறு காரணிகள் இளம் பருவத்தில் முடி நரையாவதற்கு காரணமாக உள்ளன. முன்கூட்டிய நரையை தடுக்க சில மாற்று வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தலாம் என்று அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
காபி
உங்களின் முடியை கருமையாக்க விரும்பினால், அதற்கு காபி ஒரு சிறந்த மாற்றாகும். பொதுவாக முடியை கருமையாக்க கடைகளில் விற்கப்படும் டைகளை பயன்படுத்தினால் அவற்றில் உள்ள கடுமையான இரசாயனங்கள் மேலும் முடிக்கு பாதிப்பை தரும். மேலும் அவை உங்கள் தலைமுடியை பலவீனப்படுத்தலாம் அல்லது சருமத்தில் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். இந்த இரசாயனங்கள் உங்களுக்கு ஒவ்வாமையையும் ஏற்படுத்தும். எனவே இதற்கு பதிலாக நீங்கள் இயற்கையான காபி பொடியை பயன்படுத்தலாம். அரைத்த காபி துகள்கள் உங்கள் நரை முடியை தற்காலிகமாக அடர் பழுப்பு நிறத்தில் மாற்றி விடும். அத்துடன் இது ஆரோக்கியமானதும் கூட.
எலுமிச்சை சாறுடன் பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ உள்ளது, இது முடிக்கு ஒரு சிறந்த புரதமாகும். இது வேர்களுக்கு ஊட்டமளிப்பதன் மூலம் முன்கூட்டிய முடி நரைப்பதைத் தடுக்கிறது. எலுமிச்சை சாறு முடிக்கு பளபளப்பை அளிக்கிறது, மேலும் முடி ஆரோக்கியமாக வளர்வதற்கு உதவுகிறது. பாதாம் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு இரண்டும் எளிதில் கிடைக்கக்கூடிய வீட்டு பொருட்களாகும். எனவே இவை முன்கூட்டிய நரை முடியை அகற்ற உதவும் சிறந்த ஒன்று.
வெங்காய சாறு
நரை முடியை தவிர்க்கவும், முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் வெங்காயம் ஒரு சிறந்த வழியாகும். இது முடியை கருமையாக்கும் கேடலேஸ் என்கிற நொதியின் அளவை உயர்த்துகிறது. இது கூந்தலுக்கு பளபளப்பையும் அளிக்கிறது. முடி உதிர்தல் மற்றும் முடி மெலிந்து போனால் இந்த வைத்திய முறையையும் பயன்படுத்துவார்கள். இதேபோல், சிறு வயதிலேயே முடி நரைத்து போனால், அதை கருமையாக்கவும் இது உதவுகிறது.
கருப்பு விதை எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய்
இதை நீண்ட காலமாக நரை முடி சிகிச்சை மற்றும் குணப்படுத்த பயன்படுத்தி வருகின்றனர். உங்கள் தலைமுடிக்கு கருப்பு விதை மற்றும் ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம் பல நன்மைகளை பெறலாம். இவை புதிய முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடி பளபளப்பாக இருக்கவும், முடி கருமையாக இருக்கவும் உதவுகிறது.
நெல்லிக்காய் மற்றும் வெந்தயம்
நெல்லிக்காய் மற்றும் வெந்தயம் ஆகியவற்றின் கலவையானது நரை முடிக்கு சிறந்த இயற்கையான சிகிச்சையாகும். நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது மற்றும் ஆயுர்வேதத்தில் பல்வேறு கூந்தல் பிரச்சனைகளுக்கு இது பயன்படுத்தப்படுகிறது. அதே போன்று வெந்தயத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த பொருட்களின் கலவையானது முடி நரைப்பதைத் தடுப்பது மட்டுமல்லாமல், முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.