என்ன மாதிரியான ஃபிராக்ரன்ஸ் உங்களுக்கு பிடிக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள் : ரோஸ், வெண்ணிலா, பெர்ரி, சாண்டல்வுட், சிட்ரஸ், மஸ்க் என பர்ஃபியூம்களில் பல வகைகள் உள்ளன. இதில் எந்த வாசனை கொண்ட பர்ஃபியூம்கள் உங்களுக்கு பிடிக்கிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். சரியான வாசனையை தேர்வு செய்ய கடைக்காரரின் உதவியையும் கேட்கலாம்.
எந்த காரணத்திற்காக வாங்குகிறீர்கள் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்: அலுவலகம் செல்லும்போது ஒரு நறுமணம் , திருமணநாள், பிறந்தநாள் அல்லது வேறு ஏதேனும் சிறப்பு நாட்கள் போன்றவற்றிற்கு ஏற்ற நறுமணங்களிலும் பர்ஃபியூம்கள் கிடைக்கின்றன. எனவே அதற்கு ஏற்றவாறு பர்ஃபியூம்களை தேர்வு செய்யவும். கேசுவல் அக்கேஷன்களுக்கு பாடி மிஸ்ட் போதுமானது.