நம்மை அழகாக வைத்துக் கொள்வதில் உடைகளுக்கு பெரும் பங்குண்டு. புதிதாக பார்க்கும் ஒருவர், நம் உடையின் நேர்த்தியை வைத்தே எடைபோட்டுவிடுவார். இதுஒருபுறம் இருக்க, நம்மை மகிழ்ச்சியாகவும், சௌகரியமாக வைத்துக்கொள்ள உடைகளால் முடியும். காலநேரத்துக்கு ஏற்றார்போல் உடைகளை தேர்ந்தெடுத்து அணிய வேண்டும். இதற்கு முன்பு நீங்கள் எப்படி உடை அணிந்திருந்தாலும் பரவாயில்லை. இனி வரும் காலங்களில் உடைகளுக்கு குறைந்தபட்ச முக்கியத்துவமாவது கொடுக்க முயற்சி செய்யுங்கள். தற்போது பலரும் ஒர்க் ஃபிரம் ஹோமில் இருப்பதால் அதற்கேற்றவாறு உடை அணிய வேண்டும். வெளியே சென்றால் அதற்கு ஏற்ப அணிய வேண்டும். அப்படி எந்தெந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று பார்க்கலாம்.
யோகா பயிற்சி நேரத்தில் : யோகா அல்லது யோகா செய்யாமல் வீட்டில் இருக்கும் நேரங்களில் கனமான துணிகளை அணிந்து கொண்டிருக்க வேண்டாம். மிகவும் இலகுவாக இருக்கும் துணிகளை தேர்வு செய்து அணிந்து கொள்ளுங்கள். சமையலறையில் வேலை செய்ய வேண்டியிருந்தால், அப்போது சில கனமான பொருட்களை எடுக்க அல்லது வைக்க நேரிடும். அந்த நேரங்களில் கனமான துணிகள் உங்களுக்கு மிகவும் இடைஞ்சலாக இருக்க வாய்ப்புகள் உள்ளன. இதனை கருத்தில் கொண்டு, அதற்கேற்ற துணிகளை தேர்ந்தெடுத்து வாங்கி அணிந்து கொள்ளுங்கள்.
வியர்வை உறிஞ்சும் சாக்ஸூகள் : பார்மல் அல்லது ஜீன்ஸ் பேண்ட், லெக்கின்ஸூகள் அணிந்து, அவற்றுக்கு மேட்சாக ஷூ அணிந்து கொண்டு வெளியே செல்வது பிரச்சனையில்லை. ஆனால், உள்ளே அணிந்திருக்கும் சாக்ஸ் வியர்வை உறிஞ்சியாக இருக்க வேண்டும். நல்ல காற்றோட்டமான உடையாக அணிந்திருந்தால் இன்னும் நல்லது. வியர்வை உறிஞ்சாத துணிகளை அணிந்து ஷூவையும் இறுக்கமாக அணிந்தால், உங்களுக்கு அசௌகரியமாக இருக்கும். இதனை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.
இணக்கமான உள்ளாடை : வெளித்தோற்றம் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு இணையாக உள்ளாடை விஷயத்திலும் கவனமாக இருங்கள். இறுக்கமான உள்ளாடைகளை தேர்ந்தெடுக்காமல் இணக்கமான ஒன்றை தேர்ந்தெடுப்பது நல்லது. மேலும், உள்ளாடைகள் தோலில் நமைச்சலை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது என்பதால், தரமானதை வாங்கி அணிந்து கொள்ள வேண்டும். ஹேண்ட்ஸமான உடையை அணிந்து கொண்டு செல்லும்போது உள்ளாடை இணக்கமாக இல்லாமல் இருந்தால், கடும் அவஸ்தையை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும். உடலுக்கும் அது தீங்கானது.
மகிழ்ச்சியை கொடுக்கும் உடைகள் : உடைகளைப் பொறுத்தவரை, கவர்ச்சிகரமாகவும், நல்ல கலர் உள்ள உடைகளை தேர்ந்தெடுத்து அணியும்போது நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். டாப் மற்றும் பேண்ட் இரண்டும் கான்டிராஸ்டிங்காகவும், லுக்கிற்கு டீசன்டாகவும் இருக்கும் வகையில் உங்களின் கலர் சலெக்ஷன் இருக்க வேண்டும். உங்களுக்கு பிடித்தமானதாக இருக்கும்போது, அந்த உடைகள் அளவற்ற மகிழ்ச்சியை உங்களுக்கு கொடுக்கும். சரியான உடைகளே உங்களை செக்ஸியாக காட்டும். இணக்கமாக இல்லாத உடைகள், உங்களை அழகாக காட்டாது.