‘சாந்தினி பார்’, ‘பேஜ் 3’, ‘டிராபிக் சிக்கனல்’ போன்ற பாலிவுட் படங்களுக்காகத் தேசிய விருது பெற்ற இயக்குநரான மதூர் பண்டார்கர் இயக்கத்தில் ‘பாப்லி பவுன்சர்’ என்ற படத்தில் தமன்னா லீடு ரோலில் நடித்துள்ளார். பெரும்பாலான ஆண்கள் பவுன்சர்களாக பணியாற்றி வரும் கிராமத்தைச் சேர்ந்த தமன்னா, முதல் பெண் பவுன்சராக களமிறங்குவதை அடிப்படையாகக் கொண்டு படம் தயாராகியுள்ளது. டிஸ்னி - ஹாட் ஸ்டார் தளத்தில் இப்படம் வருகிற 23ம் தேதி வெளியாக உள்ள நிலையில், இரு தினங்களுக்கு முன்பு படத்தின் முதல் பாடல் வெளியாகி சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் ‘பாப்லி பவுன்சர்’ படம் தனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என நினைத்துள்ள தமன்னா, தீயாய் படத்திற்கான புரோமோஷன் வேலைகளில் இறங்கியுள்ளார். தற்போது பாப்லி பவுன்சர் பட புரோமோஷனில் பங்கேற்ற தமன்னா, மிதமான கவர்ச்சியுடன் மிரளவைக்கும் வகையில் போஸ் கொடுத்த நடத்திய போட்டோஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. உடலை இறுக்கிப் பிடித்திருக்கும் உடையில் கச்சிதமாக போஸ் கொடுத்துள்ள தமன்னாவின் போட்டோஸ் இன்ஸ்டாகிராமில் மட்டும் 9 லட்சத்து 31 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றுள்ளது.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘பிளான் ஏ - பிளான் B-lue’ (ப்ளூ) என்ற கேப்ஷன் உடன் உடலை இறுக்கிப் பிடித்திருக்கும் டைட் உடையில் போஸ் கொடுத்து அசத்தியுள்ளார். விதவிதமான மற்றும் வேடிக்கையான கிராபிட்டி வேலைப்பாடுகளைக் கொண்ட மார்டன் டிரஸுக்கு மேட்சிங்காக எல்லோ கலர் ஹீல்ஸ் மற்றும் காதணிகளை அணிந்துள்ளார். தனது ஸ்டைலான உடைக்கு ஏற்றார் போல் தமன்னா செய்துள்ள வித்தியாசமான பின்னல் ஹேர் ஸ்டைல் கனகச்சிதமாகப் பொருத்தியுள்ளது. ப்ளூ கலர் கிராஃபிட்டி உடையில் முதுக்கு பின்னால் உள்ள ஓபனும், கை மற்றும் பின்புறத்தில் அமைந்துள்ள கண் சிம்பிளும் தமன்னாவின் அழகையும், ஸ்டைலையும் மேலும் மெருகேற்றியுள்ளது.
தமன்னா கிராஃபிட்டி ப்ளூ பாடிகான் உடையில் கொடுத்துள்ள ஹாட் போஸ்களை விட அதன் விலை இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. . huemn என்ற பேஷன் தளத்தில் தமன்னா அணிந்துள்ள உடையின் விலை ரூ 47,500 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் அவரது ஹாட் போஸுக்கு கொடுத்த ரியாக்ஷனை விட அதிகமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.