இளைஞர்களின் மனதில் கனவுக்கன்னியாக வலம் வருகிறார் கனடாவில் பிறந்த இந்திய வம்சாளிக்குடும்பத்தைச் சேர்ந்த சன்னி லியோன். டான்ஸ், நடிப்பு, மாடல் என எப்போதும் பிஸியாக இருந்தாலும் சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அவ்வப்போது ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் சற்று கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது வழக்கம். இந்த வரிசையில் தற்போது சன்னி லியோன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிறது.
சன்னி லியோனின் தெலுங்கு படமான ஜின்னா திரைப்படத்தின் புரோமோசனுக்காக போட்டாசூட் எடுக்கப்பட்டுள்ளது. அதில், பிங்க் சில்க் ஸ்லிப் டாப் மற்றும் அகலமான கால் பிங் நிற பட்டு பலாஸ்ஸோக்களை அணிந்திருந்தார். இந்த ஆடையில் இளஞ்சிவப்பு மற்றும் ஆரஞ்ச் நிற பட்டு மற்றும் வெள்ளி நூல்களால் ஆன கோடுகள் இடம் பெற்றிருந்தது. இதோடு சில்வர் கலரில் வளையம் போன்ற தோடுகள் அணிந்திருந்து கவர்ச்சிகரமாகப் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. பார்ப்பதற்கு சிம்பிளாக இருந்தாலும் சன்னி லியோனின் புகைப்படங்கள் கண்டிப்பாகக் கவர்ச்சி இடம் பெற்றிருக்கும். அது போலத் தான் சன்னி லியோன் தற்போது தெலுங்கு பட ப்ரோமோசனுக்காக வெளியிட்டுள்ள புகைப்படங்களிலும் கவர்ச்சி உள்ளது.
சன்னி லியோன் மாடல் அழகியாக, நடிகை எனப் பல முகங்களில் தோன்றினாலும் தமிழ் சினிமாவில் ஜெய் நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலின் மூலம் அறிமுகமானார். தற்போது தமிழ் திரைத்துறையில் நாயகியாக ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் நடிக்கிறார். வா மீடியா என்டர்டைன்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
வரலாற்றுப்பின்னணியில் உருவாகும் நகைச்சுவை கலந்த திகில் படத்தில் மாயசேனா என்ற மகாராணியாகச் சன்னி லியோன் நடிக்கிறார். தமிழ் வசனங்களை எப்படி உச்சரிக்க வேண்டும் என்றெல்லாம் இவருக்குப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறதாம். கவர்ச்சிக்கன்னி எப்படி நடித்துள்ளார் என்பதைக் காண்பதற்கு ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மேலும் இப்படத்தில் யோகி பாபு, ரமேஷ் திலக், சதீஷ், தர்ஷா குப்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.