கோடைக்காலம் வந்தாலே… அய்யோ.. அந்த அவஸ்திகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அந்தளவிற்கு கொளுத்தும் வெயிலால் உடல் எரிச்சலாக இருக்கும். இந்நேரத்தில் நம்மை குதூகலமாக வைத்திருப்பதற்கு என்ன தான் பழங்கள், ஜுஸ்கள் போன்றவற்றை நாம் சாப்பிட்டாலும் எந்த பலனும் இருக்காது. அதே சமயம் நம்மை கோடைக்காலத்திலும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்கு ஆடைகள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றது.
மேலும் இந்த காலக்கட்டத்தில் சரியான ஆடைகளைத் தேர்வு செய்து அணியும் போது, ஆடைகள் இதமானதாக இருப்பதோடு மட்டுமில்லாமல் ஃபேஷனாகவும் இருக்கும். இதற்காக பல வகையாக இந்திய காட்டன்கள் சந்தையில் விற்பனையாகிறது. எனவே இன்றைக்கு நாம் கோடைக்காலத்திற்கு ஏற்ப வசதியாகவும், ஸ்டைலாகவும் இருக்க உதவும் ஆடைகள் என்னென்ன என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்..
கோடைக்காலத்திற்கு ஏற்ற ஸ்டைலிஷ் ஆடைகள்: இன்றைக்கு பணிக்குச் செல்லும் பெண்கள் பலர் லெக்கிங்ஸ், ஜீன்ஸ் போன்ற டைட்டான ஆடைகளை அணிவார்கள். இதனால் உடலில் எரிச்சலும், அலர்ஜியும் உண்டாகும். எனவே இதுப்போன்ற ஆடைகளை நீங்கள் இனி அணியாதீர்கள். இதற்கு மாற்றாக ஹாரெம் பேன்ட் மற்றும் ஜோத்பூரீஸ், பலோசா போன்ற லூசான பேன்ட் வகைகளை அணிந்து உங்கள் கால்கள் மூச்சு விடுவதற்கு அனுமதியுங்கள்.
கிராஃபிக் சட்டை (Graphic shirt): பிரகாசமான மற்றும் தைரியமான எல்லா விஷயங்களிலும் நாட்டம் கொண்டவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், உங்களுக்கு இந்த கிராஃபிக் சர்ட் கோடைக்காலத்திற்கு மிகவும் ஏற்றதாக அமையும். வண்ணமயமான பலாஸ்ஸோ பேன்ட்கள், ஃபிளேர்டு ஜீன்ஸ் அல்லது பேஷன் பேன்ட்கள் தற்போது வழக்கத்தில் உள்ள நிலையில், நீங்கள் அணியும் இந்த சட்டைகள் உங்களுக்கு மென்மையான மற்றும் புது டிரெண்டியாக உங்களை மாற்ற உதவியாக இருக்கும்.
டூனிக்ஸ் ( Pastel tunics): டூனிக்ஸ் அல்லது டாப்ஸ் ஒவ்வொரு வீட்டு அலமாரிகளிலும் கட்டாயம் இருக்க வேண்டிய ஆடைகளில் ஒன்றாக உள்ளது. நீண்ட தூரம் பயணம், ஷாப்பிங் செல்வதற்கு என அனைத்திற்கும் ஏற்ற ஆடையாக இது உள்ளது. மிகவும் லூசாக இருக்கும் இந்த ஆடைகள் கோடைக்காலத்தின் வெயிலில் இருந்து நம்மைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவியாக உள்ளது. டையின் சாதாரண இயல்பைத் தக்கவைத்துக்கொண்டு, வெள்ளை, ஸ்போர்ட்டி ஸ்னீக்கர்களுடன் இதை அணியலாம்.