இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான அம்பானி வீட்டின் கடைக்குட்டிக்கு நிச்சயதார்த்தம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அம்பானி வீட்டு விசேஷம் என்றாலே நாடு முழுவதும் இருக்கும் பிரபலங்கள் மட்டுமல்லாமல் பாலிவுட் நட்சத்திரங்கள் கட்டாயமாக இடம் பெறுவார்கள். தொழிலதிபர் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகிய இருவருக்கும் நடந்த நிச்சயதார்த்த விழாவில், பாலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளும் கலந்து கொண்டுள்ளனர். இதை பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்
ஷாருக்கான் மற்றும் கவுரி கான் : பாலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளில் ஒருவராக அறியப்படும் ஷாருக்கான் மற்றும் கவுரி கான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மணமக்களுக்கு அடுத்தபடியாக பலரையும் ஈர்த்தவர்களில் இந்த ஜோடியும் குறிப்பிடத்தக்கது. தனிப்பட்ட முறையில் பத்திரிக்கையாளர்களுக்கு இவர்கள் புகைப்படங்கள் எடுக்க போஸ் கொடுக்கவில்லை என்றாலும், கேமராக்களின் கண்களில் இருந்து ஷாருக் மற்றும் கவுரி தப்பவில்லை. இவர்களுடைய மூத்த மகனான ஆர்யன் கானும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கருப்பு நிற சூட்டில் ஷாருக்கும், வெள்ளி நிற கவர்ச்சியான கவுனில் கவுரியும் தோற்றம் அளித்தனர்.
ரன்வீர் மற்றும் தீபிகா : முன்னணி நடிகைகளில் ஒருவரான மற்றும் மாடலான தீபிகா படுகோனே, பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டாலே அவர் என்ன ஆடை அணிகிறார் என்பதை பார்ப்பதற்காகவே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அம்பானி வீட்டு திருமண நிச்சயதார்த்த நிகழ்வில் தீபிகா சிவப்பு நிற சேலையை அழகாக அணிந்திருந்தார். இந்த சேலையில் சீக்வன்ஸ் வேலைப்பாடும், எம்பிராய்டரியும், லெஸ் வொர்க்கும் செய்யப்பட்டிருந்தது. ஆழமாக கழுத்து வெட்டிக் கொண்ட இவர் அணிந்திருந்த கைகளால் எம்பிராய்டைரி செய்யப்பட்ட ரவிக்கைக்கு பொருத்தமாக மரகதம் மற்றும் வைரங்கள் பதிக்கப்பட்ட கிளாசிக் நெக்லஸ் இவரின் அழகுக்கு அழகு சேர்த்தது. அவ்வப்போது ரன்வீர் சிங்கின் ஃபேஷன் சென்ஸ் பலராலும் விமர்சிக்கப்பட்டாலும் இந்த நிச்சயதார்த்த விழாவில் ரன்வீர் சிங் ஷெர்வானி அணிந்து, ஸ்மார்ட் ஆகவும் ஹாட் ஆகவும் காணப்பட்டார். காண்ட்ராஸ்ட் நிற எம்பிராய்டரியில் மெட்டல்க் கிரிஸ்டல்கள் தனி நேர்த்தியை கொடுத்தது.
வருண் தாவன் மற்றும் நடாஷா : வட இந்திய பாணியில் குர்த்தா மற்றும் எம்பிராய்டரி செய்யப்பட்ட கோட் அணிந்து கொண்டு வருண் எளிமையாக ஆனால் ஸ்மார்ட்டாக காணப்பட்டார். இவருக்கு பொருத்தமாக இவரது மனைவி நடாஷா, வெளிர் நிறத்தில் தனது ஆடையை தேர்வு செய்திருந்தார். தன்னுடைய சொந்த பேஷன் பிராண்டில் இருந்தே வெளிர் நிற பிங்க் மற்றும் லிலாக் ஷேடுகளில் அழகான லெஹெங்காவை அணிந்திருந்தார். இவர் அணிந்திருந்த ஆடையில் பட்டர்பிளை பிளவுஸ் மற்றும் பார்டர்களில் எம்பிராய்டரி செய்யப்பட்ட ட்ரான்ஸ்பிரண்ட்டான துப்பட்டா ஆகிய இரண்டுமே மிகப்பெரிய ஹைலைட்.