முகப்பு » புகைப்பட செய்தி » அழகழகான சேலைகளுக்கு புதிய டிசைன்களில் அசத்தலான பிளவுஸ் வகைகள் - பிரபலங்களின் டிப்ஸ்!

அழகழகான சேலைகளுக்கு புதிய டிசைன்களில் அசத்தலான பிளவுஸ் வகைகள் - பிரபலங்களின் டிப்ஸ்!

இந்த பண்டிகை காலத்துக்கு, புதிய டிசைன்களில் சேலை மட்டுமல்ல, சேலைகள் எளிமையாக இருந்தாலும், பிளவுஸ் புதிய டிசைன்களில் அணிந்து ஒரு மினி டிரெண்டையே உருவாக்கலாம்.

 • 16

  அழகழகான சேலைகளுக்கு புதிய டிசைன்களில் அசத்தலான பிளவுஸ் வகைகள் - பிரபலங்களின் டிப்ஸ்!

   பெரும்பாலான விசேஷங்களுக்குப் பெண்கள் புடவை தான் அணிகிறார்கள். எவ்வளவு விதவிதமான புடவைகள் வாங்கினாலும், அதற்குப் பொருத்தமான, வெவ்வேறு ஸ்டைல்களில் பிளவுஸ் தைப்பது கொஞ்சம் கஷ்டம் தான். ஒரே மாதிரியான பிளவுஸ் அணிவது போரடிக்குமே! இந்த பண்டிகை காலத்துக்கு, புதிய டிசைன்களில் சேலை மட்டுமல்ல, சேலைகள் எளிமையாக இருந்தாலும், பிளவுஸ் புதிய டிசைன்களில் அணிந்து ஒரு மினி டிரெண்டையே உருவாக்கலாம்.

  MORE
  GALLERIES

 • 26

  அழகழகான சேலைகளுக்கு புதிய டிசைன்களில் அசத்தலான பிளவுஸ் வகைகள் - பிரபலங்களின் டிப்ஸ்!

  சீக்வின்ஸ் பிளவுஸ்கள்: பல காலமாக, பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் சீக்வின்ஸ் பிளவுஸ்கள் பயன்படுத்துவது பழக்கத்தில் இருக்கிறது. ஜோலிக்கும் பிளவுசை, அதிக டிசைன்கள் இல்லாத புடவையோடு அணிந்தால், அசத்தலான தோற்றம் கிடைக்கும். அவசரத்துக்கு வேலைப்பாடு நிறைந்த பொருத்தமான பிளவுஸ் கிடைக்கவில்லை என்றால், மினுமினுக்கும் சீக்வின்ஸ் பிளவுஸ் அணிந்தால் போதுமானது.

  MORE
  GALLERIES

 • 36

  அழகழகான சேலைகளுக்கு புதிய டிசைன்களில் அசத்தலான பிளவுஸ் வகைகள் - பிரபலங்களின் டிப்ஸ்!

  பிளைன் புடவைகளுக்கு வேலைப்பாடுகள் செய்யப்பட பிளவுஸ்: புடவை எப்படி இருக்கிறதோ, அதற்கு எதிர்மாறாக பிளவுஸ் அணிந்தால், கச்சிதமாக இருக்கும். அதிக வேலைபாடுகள் கொண்ட புடவை என்றால், சிம்பிளான பிளவுஸ் டிசைன் போதும். அதே நேரத்தில், மெல்லிய ஜரிகை, அல்லது டிசைன் எதுவும் இல்லாத புடவை என்றால், அதற்கு அதிக வேலைபாடு கொண்ட, கற்கள், எம்பிராய்டரி வேலைப்பாடு செய்த பிளவுஸ் டிசைன் பொருத்தமாக இருக்கும். சில நேரங்களில், சிம்பிளான புடவையும், அலங்காரமான பிளவுசும், பெரிய கூட்டத்தின் நடுவில் கூட தனித்துக் காட்டும்.

  MORE
  GALLERIES

 • 46

  அழகழகான சேலைகளுக்கு புதிய டிசைன்களில் அசத்தலான பிளவுஸ் வகைகள் - பிரபலங்களின் டிப்ஸ்!

  விதவிதமான ஸ்லீவ் கொண்ட பிளவுஸ்கள்: பிளவுஸ் தைக்கும் பொழுதே, அதன் புடவைக்கு ஏற்றார்போல அதனுடைய ஸ்லீவ்கள் அமைய வேண்டும். பட்டுப் புடவைகளுக்குப் பொருந்தும் சில வகை ஸ்லீவ்கள் சாதாரண புடவைகளுக்குப் பொருந்தாது. அந்த வகையில் பட்டு புடவை அல்லாமல் நீங்கள் விசேஷங்களுக்கு ஃபேன்சியான புடவைகளைக் கட்டினால் பட்டர்ஃப்ளை, முக்கால் கை ஸ்லீவ், அல்லது குட்டை கை பஃப் ஸ்லீவ் போலவே மணிக்கட்டு வரை ஸ்லீவ் என்று விதவிதமாக முயற்சி செய்யலாம்.

  MORE
  GALLERIES

 • 56

  அழகழகான சேலைகளுக்கு புதிய டிசைன்களில் அசத்தலான பிளவுஸ் வகைகள் - பிரபலங்களின் டிப்ஸ்!

  தங்க நிற பிளவுஸ்: பெரும்பாலும் தங்க நிற பிளவுஸ் எல்லா சேலைகளுக்கும் பொருந்தும். பட்டுச் சேலை கட்டினாலும், ஃபேன்சி சேலை அணிந்தாலும் சரி அல்லது கேரள ஸ்டைல் சேலை கட்டினாலும் சரி, அதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். எனவே உங்கள் சேலைக்கு மேட்ச்சான பிளவுஸ் தான் அணிய வேண்டும் என்று இல்லை. கொஞ்சம் வித்தியாசமாகத் தங்க நிற உடையும் அணிந்து கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 66

  அழகழகான சேலைகளுக்கு புதிய டிசைன்களில் அசத்தலான பிளவுஸ் வகைகள் - பிரபலங்களின் டிப்ஸ்!

  பளிச்சென்ற நிறத்தில் நேர்த்தியான ஒரு பிளவுஸ்: உங்கள் தோற்றத்தை நீங்கள் மிகவும் எளிமையாக ஆனால் அதே நேரத்தில் நேர்த்தியாக, நளினமாகக் காட்டவேண்டும் என்று விரும்பினால், நல்ல பளிச்சென்ற நிறத்தில் பொருத்தமான பிளவுசை தேர்வு செய்து அணியவும். புடவைக்கு கான்ட்ராஸ்ட் நிறத்தில் அணிந்தால் மிகவும் பொருந்தும்.

  MORE
  GALLERIES