நாளை கிருஷ்ண ஜெயந்தி இந்திய முழுவதும் கோலாகலமாக கொண்டாட தயாராகிக் கொண்டிருக்கிறது. கிருஷ்ணர் பிறந்த இந்நாளில் வீட்டில் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு அவர்களின் கால் பாதத்தை வீட்டிற்குள் வைப்பார்கள். அதேபோல் பெண் குழந்தைகள் இருந்தால் ராதை போல் அலங்கரிப்பார்கள். இப்படி அலங்கரித்து அவர்களின் கால் பாதங்களை வீட்டில் வைத்து வழிபடுவார்கள். அதோடு கிருஷ்ணருக்கு உகந்த உணவுகளையும் படையலிட்டு வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்நிலையில் வீட்டில் பெண் குழந்தை வைத்திருப்போர் எந்த மாதிரியான ராதை வேடத்தில் அலங்கரிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பீர்கள். உங்களுக்காக சில யோசனைகள் இங்கே...