நவ நாகரீகத்திற்கு ஏற்ப அனைத்திலும் மாற்றங்கள் வருவதை போலவே டீன் ஏஜ் பெண்களிடையே தங்களது நகத்தை அலங்காரப்படுத்திக் கொள்ளும் மோகமும் அதிகரித்து வருகிறது. ட்ரெண்டுக்கு ஏற்றார் போல் டிரஸ், ஹேர் ஸ்டைல், காலனிகள் ஆகியவற்றை தேர்வு செய்யும் நவ நாகரீக மங்கைகள், நகத்தை அலங்கரித்துக் கொள்வதிலும் பல வித்தியாசமான முறைகளை பின்பற்றி வருகின்றனர். பேஷன் துறையின் அதிகரித்து வரும் மற்றும் அன்றாடம் மாறிவரும் ட்ரெண்டுக்கு ஏற்றார் போல் ஒருவர் தம்மை அப்டேட் செய்து கொள்வது அவசியமாகிறது, குறிப்பாக காலேஜ் கேர்ள்ஸ் மற்றும் இளம் பெண்களுக்கு அது கூடுதல் அழுத்தமாக அமைகிறது.
2022ம் ஆண்டிற்கான லேட்டஸ்ட் மற்றும் கவர்ச்சிகரமான நெயில் ஆர்ட் முறைகளில் ஒன்றாக ‘பேர்ல்கோர்’ உள்ளது. கோடை காலம் என்பதால் புல் ஸ்லீவ் உடைகளை அணியவே பெண்கள் விரும்புவார்கள். அத்துடன் தங்களது நகத்தில் முத்து ஸ்டோன்களை கொண்டு அலங்கரித்துக் கொண்டால், அது அவர்களுக்கு பிரெஞ்ச் ஸ்டைல் நகங்களுக்கான லுக்கை கொடுப்பதோடு, கவர்ச்சிகரமான தோற்றத்தையும் தரும்.
கோடை காலத்தில் உங்கள் நகங்களை ஒரு குழந்தை போல் விளையாட்டுத்தனமான மனநிலையில் அலங்காரித்துக் கொள்ள நீங்கள் நினைத்தால், மென்மையான வடிவங்கள் மற்றும் துடிப்பான கலர்களை பயன்படுத்தலாம். இந்த கோடையில் நெயில் ஆர்ட்டிற்கு ஏற்ற சிறந்த ஷேடுகளாக சிவப்பு, நீலம், வெள்ளை, சூடான இளஞ்சிவப்பு, பச்சை ஆகியவை அடங்கும்.
திருமணத்திற்கான நக அலங்காரங்களை பொறுத்தவரை, 5D ப்ளவர் ஆர்ட், ஸ்வரோவ்ஸ்கி ஸ்டோன்ஸ், ரைன் ஸ்டோன், ரோஸ் பேட்டர்ன்ஸ் மற்றும் கேவியர் பீட் ஆகியவை பொருத்தமானதாக இருக்கும் என அழகுக்கலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் கிளிட்டர் பிரெஞ்சு டிசைன் 2020ன் மிகப் பெரிய நெயில் டிரெண்ட்டாக பெண்களிடையே பயன்படுத்தப்பட்டு வருவதையும் அழகுக் கலை நிபுணர்கள் சுட்டிகாட்டியுள்ளனர்.