நடிகை ஸ்ருதி ஹாசன் ஏழாம் அறிவு திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். நடிகை மட்டுமில்லாமல் பிரபல பின்னணி பாடகி என்றும் கூறலாம். தமிழில் முன்னணி நடிகர்களான அஜித், விஜய் போன்ற நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.தற்போது தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடா போன்ற மொழிகளிலும் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
ஸ்ருதி ஹாசன் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். சமீபத்தில் தனது காதலுடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அந்த புகைப்படங்கள் வைரலானது.மேலும் அடிக்கடி வித்தியாசமான உடைகளில் போட்டோ ஷூட் செய்து வெளியிடுவார். இந்நிலையில் தற்போது சிவப்பு நிற லாங் ட்ரெஸ் அணிந்துள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். உங்களுக்கு லாங் ட்ரெஸ் போன்ற உடைகள் பிடிக்கும் என்றால் இந்த ஸ்டைலிங் டிப்ஸை தெரிஞ்சிக்கோங்க..
இதில் நடிகை ஸ்ருதி ஹாசன் சிவப்பு நிறத்தில் ஓவர் கோட் மாடலில் லாங் குர்தி அணிந்துள்ளார். இந்த உடை பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது.சுடிதாரின் டாப்பில் எம்ட்ராய்ட்ரி டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது.அதற்கு மேட்சாக ஓவர் கோட்டிலும் டிசைன் உள்ளது.மேலும் இந்த உடைக்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் பெல்ட் ஒன்றையும் அணிந்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.