பல்வேறு மாடர்ன் உடைகள் வந்தாலும் புடவைக்கான மவுசு பெண்களிடம் அப்படியே தான் இருக்கிறது. நவீன காலத்திற்கு ஏற்ப புடைவைகளிலும் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு ட்ரெண்டி மற்றும் ஸ்டைலான டிசைன்களில் புடவைகள் விற்கப்பட்டு வருகின்றன. அனைத்து தரப்பு பெண்களுக்கும் ஏற்ற நாகரிகமான உடைகளில் ஒன்றாக இருக்கின்றன தற்போதைய காலத்து புடைவைகள்.
இதனால் பல பெண்களின் அலமாரியில் ஃபேஷன் உடைகளுடன் சேர்ந்து புடைவைகளும் இடம்பெற்று உள்ளன. கோடை வெயில் படிப்படியக அதிகரித்து வரும் நிலையில் வேலைக்கு செல்லும் பெண்கள் பலர் இந்த நேரத்தில் எந்த வகையான புடைவைகளை கட்டி கொண்டு சென்றால் சரியாக இருக்கும் என்பதில் லேசான குழப்பத்திற்கு உள்ளாவார்கள். இந்த குழப்பத்திற்கு விடை அளிக்கும் வகையில் LIVA நிறுவனத்தின் ஹெட் டிசைனர் நெல்சன் ஜாஃபரி, வேலை செய்யும் போது எந்த வகையான புடவை கட்டுவது சிறந்தது, கோடை காலத்தில் அணிய வேண்டிய துணிகள், மற்றும் அட்ராக்ட் செய்யும் வகையில் ஆடை அணிவது எப்படி என india.com இணையதளத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அவற்றில் சில உங்களுக்காக...
வேலை செய்யும் போது குறிப்பாக வெயில் காலத்தில் எவ்வகையான சேலை கட்டலாம்? எந்த மாதிரியான கிளைமேட்டாக இருந்தாலும் எப்போதும் சருமத்தை சுவாசிக்க அனுமதிக்கும் துணி (fabric) வகையில் சேலை கட்டுவது தான் சிறந்த தேர்வாக இருக்கும். தற்கால ஃபேஷன் என்பது வசதியாக அதே சமயம் ஸ்டைலாக இருக்கும் உடைகளை அணிவதே. எனவே ஒருவர் எப்போதும் லையிட் வெயிட்டாக, சாஃப்ட்டான மற்றும் சருமம் சுவாசிக்க உதவ கூடிய ஃபேப்ரிக்கால் ஆன புடைவைகள் மற்றும் ஆடைகளை தேர்வு செய்து அணிவது சருமத்திற்கு ஏற்றதாக இருக்கும் என்கிறர் நெல்சன்.
காட்டன் மற்றும் கைத்தறி துணி தவிர கோடையில் வேலைக்கு செல்லும் போது அணியக்கூடிய வேறு வகை துணி உள்ளதா? காட்டன், கைத்தறி, ஷீர் தவிர செல்லுலோஸ் (cellulose) போன்ற இயற்கை அடிப்படை பொருட்களால் தயாரிக்கப்பட்ட துணிகள் கோடையில் உடலில் வியர்வை வழிந்தோடாமல் இருக்க உதவும். ஒருவர் தேர்ந்தெடுக்கும் ஆடை அவருக்கு நாள் முழுவதும் அணிந்திருக்க எளிதானதாக இருக்க வேண்டும். இது அவர்கள் சுயமாக இருக்க தேவையான சுதந்திரத்தை வழங்குகிறது.
புடவை கட்ட விரும்பும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கான பிரிண்ட் மற்றும் கலர் பரிந்துரைகள் : பணியிடத்திற்கு ஏற்ற டிரெஸ் என்னும் போது அடிக்கும் கலர்களை தவிர்க்க வேண்டும். பேஸ்டல் சாயல்கள், எர்த்தி டோன்ஸ், மோனோக்ரோம்ஸ் அலுவலக சூழலுக்கு ஏற்றவை. ஒரே மாதிரியான அல்லது மாறுபட்ட மெல்லிய பார்டர்களுடன் கூடிய பிளெயின் சாரீஸ் கிளெயின்ட் மீட்டிங்ஸிற்கு ஏற்றது. சாலிட் கலர்ஸ் மற்றும் சோபர் பிரிண்ட்ஸ் தோற்றத்தை ஸ்டைலாக காட்டும். புடவையின் நிறம் மட்டுமல்ல, பிளவுஸின் நிறம் மற்றும் அதை புடவையுடன் இணைக்கும் விதமும் ஒட்டுமொத்த தோற்றத்தில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும்.
வேலை செய்யும் இடத்தில் பெண்கள் புடவை அணிய எளிய வழிகள் என்ன? அவசர அவசரமாக வேலைக்கு செல்லும் பெண்களுக்கு புடைவை கட்ட கூட நேரமில்லாமல் போகும். இந்த சூழலில் மிக்ஸ் அண்ட் மேட்ச் ட்ரெண்ட் உதவிகரமாக இருக்கும். புடவையை பிளேசர்கள் அல்லது பெல்ட்களுடன் இணைப்பது நல்ல தோற்றத்தை அளிக்கும். புது பாணி தோற்றத்தை கொடுக்க, புடவைகளை சட்டைகள் அல்லது குர்தியுடன் கூட இணைக்கலாம்.
உயரம் குறைந்த பெண்களுக்கான புடவை டிப்ஸ் : உயரம் குறைந்த பெண்கள் மெல்லிய பார்டர்கள் மற்றும் சிறிய பிரிண்ட்களுடன் கூடிய லைட் புடவைகளை தேர்வு செய்ய வேண்டும். மேலும் அடர் நிறங்கள் மற்றும் வெர்டிக்கில் ஸ்ட்ரிப்ஸ் குள்ளமான பெண்களுக்கு நல்ல லுக்கை கொடுக்கும். கணுக்கால் வரை நீளமான, மெலிதான, மற்றும் இடுப்பை டைட்டாக பிடிக்கும் வகையிலான உள்பாவாடைகளை அணிவது உடலமைப்பை நன்கு வளைவாக எடுத்து காண்பிக்கும்.
கோடை சீசனில் என்ன மாதிரியான பிரிண்ட்ஸ் மற்றும் பேட்டர்ன்கள் ட்ரெண்ட் : புடவை துறையில் தனித்துவமான மற்றும் போல்டான டிசைன்கள் மற்றும் பலதரப்பட்ட தீம்கள் ஃபேஷனுடன், ஸ்டைல்களை ஒன்றிணைக்க அனுமதிக்கும் வகையில் வெளிவந்துள்ளன. அப்ஸ்ட்ராக்ட் பேட்டர்ன்ஸ் (Abstract patterns) கவனத்தை ஈர்க்கும் ஒன்று.ஃப்ளோரல் மோட்டிஃப்ஸ் (floral motifs) எப்போதும் ஃப்ரெஷ் லுக்கை தருபவை.
புடவையில் அலுவலகத்தில் தனித்து நிற்க விரும்பும் பெண்களுககு டிப்ஸ் : புடவையில் தனித்து தெரிவதற்கான சிறந்த வழி Gen Z-ன் சமகால ஃபேஷன் உணர்வுக்கு ஏற்ப கலந்து மேட்ச் செய்வதாகும். நீங்கள் ஒருஹெவி புடவையை நியூட் கிராப் டாப்புடன் அணிந்திருந்தாலும் அல்லது சிங்கிள் கலர்டு புடவையை எளிய பிளவுசுடன் அணிந்தாலும் தனித்து தெரிய உறுதியான காம்பினேஷனுடன் அணிய வேண்டும். ப்ரிண்ட்ஸ் அல்லது ஸ்ட்ரைப்ஸ் கொண்ட வெளிர் நிற மென்மையான புடவைக்கு பிளேஸர் காம்பினேஷன் நன்றாக இருக்கலாம்.